Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உதயம்!

 

ஓடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலில், சாதியத்திற்கு எதிரான நிகழ்வுகளில் வாலிபர் காங்கிரஸின் போராட்டங்கள், அம்மக்களை விழிப்புற வைத்தது. இவ்விழிப்புணர்வானது, அம்மக்கள் மத்தியில் தன்னியல்பான பல ஸ்தாபன அமைப்புக்களை உருவாக வழி வகுத்தது. இவை வடபகுதி எங்கும் தொழிலாளர் சங்கங்கள், முதல் மக்கள் நலவுரிமைச் சங்கம், சமூக ஒற்றுமைக்கான அமைப்பு, அரிசனர் வாலிபர் அமைப்பு, போன்றவைகளுடன் சனசமூக நிலையங்கள், சமூக முன்னேற்றச் சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் உருவாக்கப்பட்டன.

"பிக்குகள் நாடாளுமன்றத்துக்கு செல்வதை அனுமதிக்க முடியாது"  என்கின்றார் அஸ்கிரிய பீடாதிபதி
.
"நாட்டை ஆட்சி செய்வது குறித்து பௌத்த விகாரைகளில் மதத் தொண்டு ஆற்றிக்கொண்டே அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க முடியும்".

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக Lanka News Web இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது.

"தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 24)

நான் இனம்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், என்னை ஏற்றிய வாகனமோ ஒரு மணி நேரமாக ஒடியது. இறுதியில் வாகனம் நிறுத்தப்பட்டதும், என்னை இறக்கியவர்கள் நாயைப் போல் இழுத்துச் சென்றனர். எனது கண் கட்டப்பட்ட நிலையில், கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில், எனது வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. அதேநேரம் நான் கட்டியிருந்த சாறத்தைக் (லுங்கி) கழற்றி, என்னை முற்றாக நிர்வாணப்படுத்தினர்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 60

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்ச்சியான சந்திப்புக்களை நிகழ்த்தி வந்த பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை அரவணைத்து விட்டிருந்த பிரேமதாச அரசு தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனவினரின் அதிகரித்த வண்ணம் இருந்த அரசுக் கெதிரான தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கும்  நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

மக்களுக்காகவா!? அல்லது ஏகாதிபத்திய நலனுக்காவா!? கடந்த காலம் போல் மக்களை மந்தைகள் போல் நடத்துவதால், உணர்வு பூர்வமான உணர்ச்சிகள் மட்டும் இன்றி வெற்றிகளும் கூட மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படும். இது தான் மகிந்தாவை திணறடித்த லண்டன் போராட்டக்குமான கதியாகும்.

என்னமோ இனப்பிரச்சினைத் தீர்விற்கு கருணாநிதியும், சீமானும் தான் பிரதான காரணிகள் போல் கத்துகின்றீர்கள். அரசியல் யதார்த்தம் தெரிந்துதான் கதை சொல்கின்றீர்களா? மகிந்தா சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்டதோர் ஐனாதிபதி. அதுகொண்டு ஓர் சிறு தீர்வைத்தானும் தமிழ் மக்களுக்கு வழங்கி தமிழ் மக்களும் இந்நாட்டு மக்கள் தான் என நிருபித்தால், கருணாநிதி-சீமான மட்டுமல்ல, லண்டன் விமான நிலையத்தில் கூட மகிந்தாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டமே நடக்காது.

பிரிவினைவாதம் பற்றியும், பயங்கரவாதம் பற்றியும் மட்டும் பேசிய ஜே.வி.பி., இனப் பிரச்சனை பற்றிப்பேசவில்லை. "பிரிவினைவாதத்தையும்", "பயங்கரவாதத்தையும்" சோசலிசத்துக்கு முன்னமே ஒழிக்கவும் கோரி அதற்கு உதவியவர்கள், பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவில்லை. மாறாக இனப் பிரச்சனையை தாம் சோசலிசத்தில் ஒழித்து விடுவோம் என்று கூறியதன் மூலம், இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாது அதற்கு மறைமுகமாக உதவினர்.

சிறிலங்காவின் அரச படைகளினால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்கலிலும் இன்னமும் சொல்லில் வடிக்க முடியாத சித்திரவதைகளையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிலங்காவின் அரச படைகளினால் கைது செய்யப்படுபவர்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகள் தொடர்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள மனிதஉரிமை, மனிதநேய அமைப்புக்கள் கண்டனங்களையும், ஆட்சேபனைகளையும் தெரிவித்த போதிலும் மாற்றம் எதுவும் நிகழவில்லை.

கைதுசெய்யப்படும் இளைஞர், யுவதிகள் சித்திரவதையின் கீழ் பொய்யான ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டபின், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப்ட்டு, குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்படுகிறது. இதனைவிட கைதுசெய்யப்பட்டு, சித்திரவதையின் கீழ் பொய் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டபின்பும், எந்தவித குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாது காலவரையறையின்றி சிறைச்சாலைகளில் தடுத்தும் வைக்கப்படுகின்றனர்.

பி.பி.சி தமிழோசையின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கோத்தாவுடன் காதல்

கோத்தபயவுடன் காதல்

கடந்த மே மாதம் 28 ம் நாள் பி.பி.சி ஆங்கில நிகழ்ச்சியில் வெளிவந்த கோத்தபாயவின் பேட்டி பற்றியது தான் நமது குறிப்பு. கோத்தாவிடம் நேரடியாகப் பேட்டி கண்டவர் பி.பி.சியின் கொழும்பு நிருபர் சார்லஸ் ஹவிலான்ட் Charles Haviland) என்பவர். அவர் கண்ட உலக சேவையின் பேட்டிக்கும் அதனை தமிழில் ஒலிபரப்பிய தமிழோசை நிகழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று பாருங்கள். ஒளிபரப்பப்பட்ட பகுதியின் முதல் வசனத்தில் கோத்தா சொல்வது என்ன? ஹவிலான்ட் என்ன கேள்வி கேட்டார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கோத்தாபயாவின் தொடக்கம் இப்படியிருக்கிறது. வாசகர்கள் கவனமாகக் கேட்க வேண்டும்.

1995 - 2009 வரையான காலத்தில் புலம்பெயர் பினாமி புலிகளும் , வன்னி , மற்றும் கொழும்பில் இயங்கிய  மறைமுக புலிகள் சார்பான ஊடகங்கள் , தனிமனிதர்கள், மனித உரிமை வாதிகள், மற்றும் இலங்கை சேர்ந்த சிங்கள  NGO நடத்துனர்களும் , தமிழ்-சிங்கள சுதந்திர பத்திரிகையாளர் எனத் தம்மை அழைத்து கொள்ளும் பலரும் அவர்களின் பத்திரிகையாளர் அமைப்புகளும், மனிதஉரிமை செயற்படாளர்கள் என கூறிகொண்ட பலரும் நோர்வே அரசின் பாரிய நிதி உதவியை பெற்றார்கள் .

இவர்கள் 1995- 2009 வரையான காலத்தில் மேற்படி இலங்கை அரசியல் சார்ந்து தொழில்பட, நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (NORAD)    தகவலின்படி கிட்டதட்ட 200 மில்லியன் க்ரூனர்கள் வழங்க்கபட்டுள்ளது.

ஜான் மிர்தால் (Jane Myrdal) ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர். உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகாரஇ கொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர். என்பத்தி ஐந்து வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை ‘இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது’ என அறிவித்துள்ளது இந்திய அரசு. ‘மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்று குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

தியாகங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் இலங்கையில் குறைவில்லை. அப்படியென்றால் தவறு எங்கே உள்ளது? ஆம் தவறு அரசியலில் உள்ளது. அதன் யுத்தத் தந்திரத்தில் உள்ளது.

இதற்கான அடிப்படைக் காரணம், லெனினிய வர்க்கக் கண்ணோட்டத்தை மறுக்கும் திரோஸ்க்கிய கோட்பாட்டுச் செல்வாக்காகும். இதுதான் இன்று வரையான இலங்கையில் உள்ள நிலைமை. உண்மையில் லெனினியத்தை உயர்த்திய கட்சிகள் கூட, லெனினை மறுத்த திரோஸ்க்கிய கண்ணோட்டத்தையே சார்ந்து நின்றன. அதைத்தான் இன்றும் தம் அரசியல் வழிமுறையாக வெளிப்படுத்தி வருகின்றது. இந்த வகையில் இலங்கையில் லெனினிய வழியிலான வர்க்க போராட்டக் கட்சிக்கு பதில், வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் திரோஸ்க்கிய கண்ணோட்டம் சார்ந்த கட்சிகள்தான் பொதுவில் உருவானது. புரட்சிகரமான பாட்டாளி வர்க்கக் கட்சி உருவாவதை, இது தொடர்ந்து தடுத்து நிறுத்துகின்றது.

இந்த வகையில் இலங்கையில் வர்க்க விரோத திரோஸ்கிய கோட்பாட்டுச் செல்வாக்கின் முக்கிய கூறுகளை இங்கு இனம் காண்போம்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 58


வடக்குக் கிழக்குப் பகுதி மக்கள் எந்நேரமும் தமது உயிருக்கு எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலையில் அன்றாட வாழ்வை நடத்திக் கொண்டிருந்த அதேவேளை துப்பாக்கி முனையில் மக்கள் அடிபணிய வைக்கப்பட்டிருந்தனர். இந்தியப்படையினர், தமிழீழ விடுதலைப் புலிகள், "மண்டையன் குழு" என அனைவருமே செங்குருதியின் தாகம் கொண்டவர்களாகவும், மரண ஓலங்களில் மகிழ்ச்சியைக் காண்பவர்களாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இந்தியப்படையினர் மற்றும் "மண்டையன் குழு" வினருக்கிடையேயான மோதல்களும், துப்பாக்கிக்குண்டுகளுக்குப் பலியாகி வீதிகளில் அனாதரவாகக் காணப்படும் உரிமை கோரப்படாத உடல்களும் அன்றாட நிகழ்வுகளாக மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தன.

28.04.1987 என் சுதந்திரத்தை இழந்த, மறக்க முடியாத ஒரு மாலைப் பொழுதாகி விட்டது. அன்று கொலைகார புலிக் கும்பலின் கண்காணிப்பில் நான் இருந்ததை அறிந்திருக்கவில்லை. அன்று மாலை  எனது ஊரான வறுத்தலைவிளானில் இருந்து தெல்லிப்பழையை நோக்கி இராணுவம் முன்னேற முயன்றதால், புதிய மோதல் புலியுடன் தொடங்கியிருந்தது. துப்பாக்கி வேட்டுகளும், இடை இடையேயான செல்லுமாக சத்தம் இரைந்து கொண்டிருந்தது. நான் நிலை கொண்டிருந்த இடத்துக்கும் (மகாஜனாக் கல்லூரிக்கு அருகில்)  மோதல் நடைபெற்ற இடத்துக்கும் இடையில் ஒரு மைல் தூரமே இருந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE