Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 62

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப்படையின் வெளியேற்றத்தையடுத்து பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபைக்கெதிராக ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தனர். பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் கைகோர்த்துக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை தமது போராட்டம் மூலம் விரட்டியடித்துவிட்டதாகக் கூறி ஆர்ப்பரித்தபடி வன்னியில் அடர்ந்த காடுகளுக்குள் தலை மறைவாக ஒளித்திருந்த புலிகள் மீண்டும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு திரும்பியிருந்தனர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரியும், யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

அங் சங் சூசி இன்று ஒரு பிரபல்யமான பெயராகி விட்டது. 1990 இல் இவர் பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவுடனேயே, இவரது பெயர் உலகம் முழுவதும் அடிபடத்துவங்கி விட்டது எனலாம். 1990 இல் இவரது கட்சியாகிய "தேசிய ஜனநாயக முன்னணி" பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றி 59% வாக்குகளைப் பெற்று 80% ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க முயலும் போதே, தான்சாவ் என்னும் ராணுவ தளபதியால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரது கட்சி ஆட்சியமைப்பதையும் நிராகரித்து தொடர்ந்து ராணுவம் தளபதி தான் சாவ் தலைமையில் ஆட்சியை இன்னும் தொடர்கின்றது.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு, உள்ளடங்கிய தேசிய இனப்பிரச்சனை சார்ந்த விடையங்களை வலியுறுத்தி, அல்லது ஆதரவாக, இலங்கைக்கு அப்பால் பல்வேறுபட்ட வடிவங்களில், போராட்டங்கள், அழுத்தங்கள் அங்கங்கே நடைபெறுகின்றது. இதில் முற்போக்கு, பிற்போக்கு அரசியல் வெளிப்பாடுகள் என்ற பார்வைக்கப்பால், இந்நடவடிக்கைகள் எதோ ஒரு வகையில் ராஜபக்ச அரசுக்கு  சில நிர்ப்பந்தங்களையும், முகம் கொடுக்கமுடியா சூழ்நிலையையும் உருவாக்குகின்றது என்பது உண்மையே.

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் நில அபகரிப்பு மற்றும் விரைவான மீள்குடியேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் வடக்கில் இருந்து 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று கோரியும், நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதியில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் நில அபகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வாகனக் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

கிரீஸ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்,யாருக்கும் தனிப்பெரும்பாண்மை கிடைக்கவில்லை. தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைமையில் கூட்டாட்சிக்கான உடன்பாட்டிற்கு வந்துள்ளனர். அடுத்ததாக எகிப்தில் muslim brother hood என்னும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.

(தேசிய கலை இலக்கியப் பேரவையின் 39வது ஆண்டுவிழாவின் இரண்டாம் நாள் மாலை நிகழ்வாக 17-06-2012 அன்று 'வாழ்வைச் சந்தித்தல்' என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்குக்கு வழங்கப்பட்ட அறிமுகம்)

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

வடக்கு கிழக்கில் இடம் பெற்று வரும் நில அபகரிப்பு, நில ஆக்கிரமிப்பு என்பனவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று முன்தினம் யாழ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தைப் பொலிசார் நீதிமன்ற ஆணை பெற்றுத் தடுத்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத மக்கள் விரோதச் செயற்பாடேயாகும். பொலிசாரின் இந்நடவடிக்கை வடக்கு கிழக்கில் ஜனநாயகம் சுதந்திரம் இயல்பு வாழ்கை என்பன தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதன் எதிரொலியே ஆகும்.

ஆறுகளும் காற்றும்

உயிர்களும் இயற்கையும்

மனிதரும் மனங்களும்

இயல்பாக இருந்த ஓர் இறந்த காலத்தில்

இணையே,

டக்கிளஸின் பயமுறுத்தலால் உயிருக்கு ஆபத்து! பதவியே வேண்டாம் என்கிறார். புதிய அதிபர்

யாழ் வேம்படி மகளிர் கல்லூரிக்கு திருமதி ரேணுகா சண்முகரட்ணம் கடந்த 11-ந் திகதி முதல் அதிபராக நியமிக்கப்பட்டார். அதற்கான கடிதமும் பொதுச்சேவை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டது. ஆனால் புதிய அதிபராக பதவியேற்க சென்றபொழுது அவர் தனது பொறுப்புக்களை ஏற்கமுடியாமல் திரும்பியுள்ளார். ஏன் என்பதை அங்கிருந்து வரும் செய்திகள் ஊடாகப் பார்ப்போம்.

முஸ்லிம் - கத்தோலிக்க மக்கள் விழிப்போடும் - எச்சரிக்கையோடும் கையாளப்படும் தமிழர்களாம்!

இப்போ தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடத்தின் வெறுமைமையை நிரப்ப சீமான் சீற்றம் கொண்டு புறப்பட்டுள்ளார். அதுவும் குறுந்தேசிய பாசிஸ வெறியுடன் கூடிய ஆணவ—(ஆவண) அரசியல் அறிக்கை கொண்டு….!

மனிதத்தின் கண்ணில் திட்டமிட்டே முட்கள் துளைத்தாலும்
எங்கள் கண் வரை அவை வரவில்லை என்றே
கணப்பொழுதும்
களிப்போடு இருக்கும் என் சகலமானவர்களுக்கும்.

அண்மையில் கவிஞர் தீபச்செல்வன் திருவாய் மலர்ந்து அருள்வாக்கு ஒன்றை சொல்லியிருக்கிறார். இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும் இருந்திருந்தால் அவர் தமிழீழத்தில் வாழ்ந்திருப்பாராம். இத்தகைய பிதற்றல்களிற்கு "வங்கம் தந்த பாடம்","முறிந்தபனை" முதல் எத்தனையோ அரசியல் கட்டுரைகளும் ஈழ மக்களினதும், இந்திய மக்களினதும் வாழ்வுமே மறுமொழி சொன்னாலும் நமக்கு வாய்த்த தலைவர்களிற்கும், இலக்கியவாதிகளிற்கும் இந்த அசட்டுத்தனங்களும், அடிமைப்புத்திகளும் என்றைக்குமே மாறுவதில்லை.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 61

இந்தியப்படைகள் இலங்கையில் நிலைகொண்டிருக்கையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல் இந்தியாவில் நடைபெறத் தொடங்கியிருந்தது. ஆளும் இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கெதிராகக் கூட்டுச்சேர்ந்த ஜனதா தள் கூட்டணி இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இந்தியப் பிரதமராக ஜனதா தள் கூட்டணியைச் சேர்ந்த விஸ்வநாத் பிரதாப் சிங் பதவி ஏற்றார்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 59

ரணசிங்க பிரேமதாச இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற பாராளுமன்றத்துக்கான தேர்தலுடன் வடக்குக்-கிழக்குப் பகுதிகள் உட்பட இலங்கையின் அரசியல் களத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

உலக சமாதான சட்டப்புத்தகத்தில்

சிறிலங்கா வெற்றி கொண்டு விட்டது

கோத்தபாயவின் யுத்தவெறி

அவமானப்பட்டியலில்

வெற்றியைத் தேடிக்கொடுத்திருக்கிறது

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE