Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தூரத்தேயிருந்து

குண்டுகளை வீசிய டோராப்படகுகள்

எங்கள்

இறங்குதுறையை ஆக்கிரமித்துக்கொண்டது

கிராமத்து தலைநிலம்

அழகையும் அமைதியையும் தொலைத்து

படைமுகாம்களால் சூழப்பட்டுக்கிடக்கிறது

என்னை தமது வதை முகாமுக்குள் இட்டுச் சென்றவர்கள், நிர்வாணமாக்கினர். எனது கண் கட்டப்பட்ட நிலை என்பது, தொடர்ந்து அடுத்து நான்கு நாட்களாக நீடித்தது. எந்த உடுப்புகளுமற்ற நிர்வாணமான நிலை என்பது பல நாட்களாக நீடித்த நிலையில், இறுதிக் காலத்தில் ஒரு கிழிந்து போன ரன்னிங் சோட்சைப் போராடிப் பெற்றேன். நான் அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றபோது, அரை நிர்வாணமாகவே பல மைல் தூரம் கடந்து சென்றேன்.   

பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் உனக்கு படிப்பை தவிர மிச்சம் எல்லாம் ஏறும் என்று அடிக்கடி அன்பாக ஆசிர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.

இன உணர்வு -- இனவாதம் -- இனவெறி

இலங்கையின் இன்றைய அரசியலின் முக்கிய அம்சம் இன உறவுகள் தொடர்பான
பிரச்சினையே. நாட்டின் பயங்கரமான பொருளாதார நெருக்கடியானது கடன், தங்குதடையற்ற இறக்குமதிகள், உற்பத்திக்கு உறவில்லாத வேலை வாய்ப்புக்கள், அயல்நாட்டு சம்பாத்தியம் போன்றவற்றால் பூசிமெழுகப்பட்டு, ஏகப் பெரும்பான்மையான மக்கள் உணராதவாறு மறைக்கப்பட்டு வந்துள்ளது.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 68

"தீப்பொறி"க் குழுவின் அரசியல் செயற்பாடுகள் இனஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புரட்சிகரத் தலைமையை உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்திலிருந்தும், சுவிஸிலிருந்தும் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் எமக்கான பண உதவியுட்பட அனைத்து வழிகளிலும் உதவி புரிந்து கொண்டிருந்தனர்.

மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் இடம் பெற்ற “அரபு வசந்தம்” என அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சி இன்று எந்தக் கட்டத்தை அடைந்திருக்கிறது என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. ஊடகங்களாலும் சமூக வலைதளங்களாலும் சிலாகித்துப் பேசப்பட்டுப் பல தருணங்களில் உரிமை கொண்டாடப்பட்ட இந்த எழுச்சி இன்று எங்கே நிற்கிறது?

இன்றைய அரசாங்கம் பாசிசத்தனமான இனப்படுகொலை செய்யும் ஆட்சியை நடாத்தி வருகின்றது. அண்மையில் வவுனியாச் சிறையிலும் பின் மஹரச் சிறையிலும் தமிழ் அரசியல் கைதிகள் மீது நடாத்தி கொடூரத்தாக்குதலிலேயே நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகிய இரண்டு பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.  இச்சிறைப் படுகொலைகள் வரலாற்றில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மூன்றாவது படுகொலைச் சம்பவமாகும்.


அனைவருக்கும் இலவசக்கல்வியை வழங்கு என்ற கோசங்களுடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்னிலை சோசலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் அடங்கிய கோசங்கள் இப்படி இருந்தன.

கடந்த மாதம் கறுப்பு ஜூலையை  மையப்படுத்தி பல நிகழ்வுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டன. அவை எல்லாம் அந்த துயர்படிந்த மூன்று தினங்களை நினைவு கூறுவதாகவே இருந்தன. இந் நிகழ்வுகளில்  'மாற்றத்திற்கான இளைஞர்கள்"(Youth For Chenge - குவேராவை நினைவுக் கூறும் முகமாக CHANGE ஆனது CHENGE என எழுதப்படுகிறது)   அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட 'ஒரே ஆகாயத்தின் கீழ்"  நிகழ்ச்சி திட்டம் உறுதியான நம்பிக்கையை தருவதாகவும் முற்போக்கனதாகவும் இருந்தது.





வவுனியா சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தில்ருக்சன் எனும் அரசியல் கைதியும் இறந்துள்ளார். தில்ருக்சன், வவுனியா சிறைச்சாலைத் தாக்குதல்களால் உயிரிழந்த இரண்டாமவராவார். இச் சிறைச்சாலைப்படுகொலையைக் கண்டித்து யாழ்நகரில் பேருந்து நிலையத்துக்கு முன்னால்  கடந்த 15-08-2012 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இது பிரதான முரண்பாட்டில் மட்டும் தனித்து இயங்குவதில்லை. மாறாக சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடும், பிரதான முரண்பாட்டுடன் முழுமை தழுவியதாகவே இயங்குகின்றது. உதாரணமாக இனம், சாதி, வர்க்கம் என எந்த முரண்பாட்டிலும் ஒன்று எப்போதும் முன்னிலை பெற்ற போதும், மக்கள் இயக்கம் என்பது அந்த ஒன்றுக்குள் மட்டும் குறுகிவிடுவதில்லை.


சாதியத்திற்கொதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வரலாறு, சிறுபான்மைத் தமிழர் மகாசபை உதயமாவதற்கு முன் பன்முகத்தன்மை கொண்ட பல தளங்களிற்கு ஊடாகவே சமூக அசைவியக்கம் பெற்று வளர்ந்து வந்தது. இதை கடந்த ஆறு பகுதிகள் கொண்டு கண்டுகொண்டோம். மேலும் மகாசபையின் தோற்றத்தையும் அதன் செயற்பாட்டுத் தளத்தையும் கடந்த பகுதிக்கூடாகவும் இன்னும் பார்ப்போம்.



அண்மையில் கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய முஸ்லிம்காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் "காவியுடைப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும்" என பேசியுள்ளளார்.

நீங்கள் இதை வாசிக்கும் போது பிரேசிலின் றியோ டி ஜெனேரோவில் றியோ+20 புவி மாநாடு குளுகுளு அறைகளில் எந்த முடிவுமற்று முடிந்து உலகத் தலைவர்கள் தங்கள் அடுத்த வேலைகளைப் பார்ப்பதற்காகக் கிளம்பியிருப்பார்கள் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம்.  சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர், 1992 இல்  றியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேசப் பூமி மாநாட்டின் தொடர்ச்சியாக, றியோ+20 என்ற நிலையான அபிவிருத்திக்கான தற்போதைய மாநாடு நடைபெற்றது.




அண்மையில் வவுனியாச் சிறையிலும் பின் மகரச் சிறையிலும் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஸன் கடந்த ஏழாம் திகதி அன்று மரணமடைந்தார். அவரது மரணம் இரண்டாவது சிறைப் படுகொலையாகும். இப் படுகொலையை எமது எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. இப் படுகொலைகளுக்கு மக்கள் அணி அணியாகத் திரண்டு நீதி நியாயம் கேட்பதே சரியான வழிமுறையாகும்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 67 


தமிழீழ விடுதலைப் புலிகளால் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தால் யாழ்ப்பாணம் - கண்டி வீதி (A9) என்றுமில்லாதவாறு சனநெருக்கடிமிக்கதாக மாறிக்கொண்டிருந்தது. தமது மண்ணையும், மனையையும் விட்டு அனைத்தையும் இழந்து அநாதரவாக, அகதிகளாக வெளியேறிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் நம்பிக்கையற்றதொரு எதிர்காலத்தை நோக்கியவர்களாக சென்றுகொண்டிருந்தனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE