Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.

கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.

altசர்வதேச காணாமல் போனோர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று வவுனியாவில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை இலங்கை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காணாமால் போனோரின் உறவுகள் கண்ணீருடன் கோரிக்கைகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போ புத்த-மகிந்த சிந்தனைக்கு, மனிதப்பலியை விட மிருக பலிதான், கருணையுள்ளம் கொண்ட மிகப்பெரிய ஜீவகாருண்ணியமாக சகஜீவனம் பெற்றுள்ளது. கபிலவஸ்து இருக்கையில் மிருகபலி வேண்டாமாம். அப்போ இலங்கையில் உள்ள கசாப்புக்கடைகள் யாவும் கபிலவஸ்துவிற்காக மூடப்பட்டுள்ளனவா?

 

alt

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம், -International Day of The Disappeard- வருடந்தோறும் ஆகஸ்டு 30ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.

altகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்புகை குண்டுத்தாக்குதல். மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை உடனடியாக திறக்க கோரி பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் முதலில் தண்ணீரைப் பீய்ச்சியடித்துள்ளனர் இதனையும் தாண்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்கையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன..

குறித்த ஆர்பாட்டத்தினால் கொழும்பு கோட்டை பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

பொங்கு தமிழ் நிகழ்வு பெண் போராளி - முன்னணி இதழுக்காக பிரத்தியேகமாக வழங்கிய பேட்டி இது.

வவுனியாவில் இருந்து நான் காலை எட்டு மணிக்கு ஏறிய இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மூன்று மணித்தியாலங்களின் பின் தம்புள்ள நகரை சென்றடைந்தது. நகரத்தின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கிய எனக்கு திசை ஒன்றும் விளங்கவில்லை. இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் தம்புள்ளைக்கு வந்ததாக நினைப்பு. இன்று யாழ்பாணத்தை விட, ஏன் அனுராதபுரத்தை விட வளர்ச்சி அடைந்த நகராக காட்சி தருகிறது. வன்னி ஒரு காலத்தில் இலங்கையில் அரிசிக்களஞ்சியம் என்பது போல தம்புள்ள இப்போதும் இலங்கையில் மரக்கறித் தோட்டமாக விளங்குகிறது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பகிரங்க மனுவில் கையெழுத்திடும் இயக்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் அமைப்பினால் இன்று நண்பகல்  காலி நகரில் நடைபெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினசக் கட்சியின் 34வது ஆண்டு விழா பொது கூட்டம் கட்சியின் வடபிராந்திய செயலாளர் கா. கதிர்காமநாதன் தலைமையில் யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி மக்கள் மண்டபத்தில் 2012.08.26 ம் திகதி  இடம்பெற்றது.  இதில் பு.ஜ.மா.லெ கட்சியின் பொதுச் செயலாளர். சி.கா. செந்திவேல், தேசிய அமைப்பாளர் வே. மகேந்திரன், அரசியல் குழு உறுப்பினர்கள் க.தணிகாசலம், சோ. தேவராஜா, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி உறுப்பினர்கள் த. பிரகாஸ், சு.விஜயகுமார், க.சீலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

விஞ்ஞான ஆராட்சியில்
ஆசான்கள் பெரு விண்ணர்கள்
கண்முன்னே நித்தமும் செத்துமடியும் உயிர்கள்
பசியால்
படுத்துறங்க இடமற்று விறைத்துக் குளிரால்
கொட்டும் சுடுகலக் குண்டால்
சிறைப்பட்டு ஆட்சியாளர் வதையால்
கத்தும் குழந்தைக்கு பாலூட்ட நாதியற்று
இரத்தம் உறிஞ்சும்
பன்னாட்டுப் நிறுவனக்கொள்ளைகளால்
வெறும் எலும்பாய்
முறடு தண்ணிக்காய் ஏங்குபவரை
சந்திரனில் கால்பதிக்க விட்டுக் கண்டீரோ
தங்கம்
பீறிப்பாயும் எண்ணை வளம்
கூலியற்று உழகை;க ஏதும் உயிர்கள்
கனிமங்கள்
ஏது கண்டீர்....

நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !
 
தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று அரிஸ்டோட்டல் கூறினார். ஏனைய விலங்குகளைப்போல் அன்றி, விரயத்தை தவிர்த்து மேலதிகமாக உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், நாளைய தேவை கருதிப் பாதுகாத்து வைக்கவும், பயிர் விளைக்கவும், மறு நடவு செய்யவும் மனிதன் பழகிக் கொண்டுள்ளான்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 69

"தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி "போல்" என்பவருடன் யாழ்ப்பாணம் சென்றிருந்த டொமினிக் கொக்குவில் பொற்பதி வீதியிலமைந்திருந்த தீப்பொறி"க்குழு உறுப்பினரான காசி (ரகு) யின் வீட்டில் தங்கியிருந்து தீப்பொறி"க்குழு உறுப்பினர்களை சந்திக்கத் தொடங்கியிருந்தார்.

(தமிழ்) பிரிவினைவாதத்துக்கு எதிரான (பேரினவாத) அரசு எதிர்ப்பிரச்சாரத்தை முறியடிப்பது எப்படி? சிங்கள மக்களும், சிங்களப் பாட்டாளி வர்க்கமும் பதிலளிக்க வேண்டிய முக்கிய புள்ளி இதுதான். அரசின் பிரச்சாரத்துடன் சேர்ந்து பயணிப்பதா, அல்லது எதிர்த்துப் பயணிப்பதா? எதிர்த்து என்றால் எப்படி? சேர்ந்து என்றால் எப்படி? "பிரிவினைவாதம்" பிரிவினை வாதிகளின் கோசம் மட்டுமல்ல, பிரிவினைவாதத்துக்கு எதிரான அரசின் கோசமாகவும் இருக்கின்றது.

உலகில் உள்ள அனைத்தையும் விட மனிதர்களே மேலானவர்கள். மனிதர்களுக்கு நிகரான ஒன்றை இவ்வுலகில் எங்குமே காணவியலாது. பிரபஞ்சத்தில் இருந்து உருவாகிய இவ்வியற்கைப் பூவுலகில் மனிதர்கள் தோன்றி வளர்ந்து யாவற்றையும் உருவாக்கி வந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இணைந்தும் போராடியும் கட்டுப்படுத்தியும் தமக்கானவற்றைப் படைத்து வந்திருக்கின்றார்கள். உணவு, உடை, இருப்பிடம், மொழி, மதம் பண்பாடு போன்றவற்றை உருவாக்கி வளர்தெடுத்தெடுத்து வந்திருக்கின்றார்கள்.

பன்நெடுங்காலத்திற்கு முந்தைய மக்கள் உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு, அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப்பற்றிச் சிந்தித்தபொழுது, அதன் சிந்தனைப் பரிணாமமாக தத்துவஞானம் தோன்றியது.

ஜூன் 29ம் திகதி, வவுனியாச் சிறைச்சாலையில் படையினர் மேற்கொண்ட கோரத் தாக்குதலின் விளைவாகப் படுகாமடைந்த தமிழ் அரசியல் கைதிகளை மகர சிறைச்சாலைக்கு மாற்றிய பின்பு, அங்கும் அவர்கள் தாக்கப்பட்டனர். அதனால் மோசமாகக் காயமடைந்த இளைஞர் கணேசன் நிமலரூபன் ஜூலை 4 அன்று உயிரிழந்தார். இக் கொடூரத் தாக்குதலையும் படுகொலையையும் மிலேச்சத்தனமான பேரினவாத பாசிச வன்முறையெனப் புதிய ஜனநாயகக் கட்சி வன்மையாகக் கண்டித்திருந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE