Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஜனநாயகத்தை மறுத்தவர்கள், "ஜனநாயக மறுப்பு" என்ற பெயரில் தொடர்ந்தும் ஜனநாயகத்தை மறுக்கின்றனர்.

ஜனநாயகம் மறுக்கப்பட்டவருக்கு எதிராக, மீண்டும் தேடகம் ஜனநாயக மறுப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

நேசனுக்கு கருத்து சொல்லும் உரிமையை மறுத்தவர்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. மாறாக தங்கள் ஆட்கள் "தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்ட ஒழுங்கை மீறியிருந்ததாக" கூறி, அதைத்தான் தவறு என விளக்கம் கொடுத்துள்ளனர். இப்படி தம் ஜனநாயக மீறலை நியாயப்படுத்திக் கொள்ளுகின்றனர்.

வாழவிடுவென
மானுடம் போரிடுகிறது
உழைக்கும் வர்க்கமே ஓரணிசேரென
கூடங்குளத்தில்
அறைகூவல் கேட்கிறது!
நாளை உனக்கும் எனக்கும்
ஓடாகிப்போன நமக்காகவேதான்
இடிந்தகரையில் எதிர்த்து நிற்கிறார்கள்

கிழக்கில் ஹக்கீம் சுட்டவடை, மக்களை மடையர்களாக்கிய ஒட்டை  வடை!

நடைபெற்ற கிழக்கின் மகாணசபைத் தேர்தலில்,  ஹக்கீம் காங்கிரஸின் (முஸ்லிம்-காங்கிரஸ் என சொல்ல முடியல்லே) நிலையானது,  பஞ்சதந்திரக் கதைகள் படித்தது போல் உள்ளது. மாகாணசபைகள் கலைக்கப்படும்வரையும், ஏன் அதன் பின்பான சிலகாலங்களும் ஹக்கீமின் நிலை மௌன அரசியல் நோன்பாகத்தான் இருந்தது.

புயல் , மழை, இடி, மின்னல், சுனாமி போன்றவாறான இயற்கைச் சீற்றங்கள் கொண்டு வரும் ஆபத்தை அவற்றின் இயல்புகளை பேரோசை மூலமோ அல்லது அசாதாரணக் காட்சிகள் மூலமோ அவற்றின் ஆற்றலையும் விளையவிருக்கும் ஆபத்தையும் மனிதன் தனது புலனுணர்வுகளால் அவை நடக்கும் கணங்களில் அறிந்து கொள்ள முடியும். அதன் ஆற்றலை சக்தியை மட்டிட்டு தன்னையோ மற்றவர்களையோ அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த முடியும். அவை சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் காரணமாக புலன்களுக்கு புலப்படுபவை.

திருநெல்வேலி: கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்தக்கோரி இன்று 2 வது நாளாக நடந்த முற்றுகை போராட்டத்தில் களம் இறஙகி போராடிய தூத்துக்குடி மாவட்டம் மனப்பாடு கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிசாமி என்ற மீனவப் போராளியை செல்வியின் அரச பாதுகாப்பு இயந்திரம் படுகொலை செய்துள்ளது.

altநடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்ற போதிலும் கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாகாணத்துக்கான தேர்தலில் எதிர்க் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வி கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது  நாட்டு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

புலி பாய்ந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் இருந்திருந்தால் இப்படி ஒரு செய்தி ஈழமுரசிலோ அல்லது உறுமலிலோ, இருமலிலோ வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஏனென்றால் அவர் தனிமனித பயங்கரவாத.சாகச விளையாட்டுக்களை எதித்தவர். மக்களை அணி திரட்டாமல் போராட்டங்கள் இல்லை என்பதில் உறுதியாக நின்றவர்.(இதன் காரணமாகவே ரோகண விஜயவீரா போன்றவர்கள் அவருடன் முரண்பட்டு கட்சியை விட்டு விலகினர்).

மீண்டும் மீண்டும் மரண தண்டனையே வேண்டும்
என்கிறது எங்கள் ஈழத் திருநாடு.

சில காலத்தின் முன்னால்
சிறி லங்காவாகிப்போன இலங்கை மண்ணில்
தண்டனையாக மரணங்கள் தொடரவேண்டும்..!?
அப்படித்தான் மக்களைத் திருத்திடுவோம்
அதுதான் நாட்டுக்கான சேமவாழ்வு என்கிறது அரசு.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 24

 சோசலிச நாட்டில் வர்க்கப் போராட்டத்தை மறுத்த இடது வலதுக்கு எதிராக ஸ்டாலின் நடத்திய போராட்டம் 

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது, சராம்சத்தில் வர்க்கப் போராட்டத்தை உள்நாட்டில் தொடர்வதுதான். லெனினின் அடிப்படையான இந்த மார்க்சிய வரையறையை மறுத்து அதை டிராட்ஸ்கியம் “தனிநாட்டு சோலிசம்” என்று கூறி முதலாளித்துவ மீட்சியை முன்தள்ளியது.

வவுனியா மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பாரிய தண்ணீர்ப் பிரச்சினை   அன்பான வவுனியா வாழ் பொது மக்களே உங்களின் கவனத்திற்கு…

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வரும் குள அழிப்பு செயற்பாடுகளை அம்பலப்படுத்தவும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும் அணித்திரட்டவும் துண்டுபிரசுர வினியோகத்தை புதிய-ஜனநாயக மாக்சிய லெனினிசக் கட்சியின் வவுனியாக்கிளை ஆரம்பித்துள்ளது. 

 

 

    

    
தமிழ் நாட்டிற்கு சென்ற சிங்கள யாத்திரீகர்களான சாதாரண பயணிகள் மீது இனத்துவேச அடிப்படையில் எதிர்ப்பும் தாக்குதலும் நடத்தப்பட்டிருப்பது வெறுக்கத்தக்க இனவெறிச் செயலாகும். இது போன்ற அற்பத்தனமான செயற்பாடுகள் எவ்வகையிலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவப்போவதில்லை. இன உணர்வுச் செயற்பாடு என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இத்தகைய இன வக்கிரம் கொண்ட எதிர்ப்பையும் தாக்குதலையும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறையை நியாயபப்படுத்தி இன வன்முறையைத் தூண்டக்கூடிய இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என எமது கட்சி வற்புறுத்துகிறது.

என்னைக் கடத்திய புலிக்கு, என்.எல்.எப்.ரி. பற்றிய தகவல்கள் எதுவும் தெரிந்திருக்கவில்;லை. அதேநேரம் என்.எல்.எப்.ரி. தலைமையே என்னை விசாரிக்கக் கோரியது என்ற தகவல், அவர்களின் முட்டாள்தனத்தையும் பலவீனத்தையும் நிர்வாணப்படுத்தியது.

மறுபிரசுரம்

தற்போதய செய்தி: சென்னை ரயில் நிலையம் திருச்சி மதுரை நகரங்களில்  புத்த பிக்குகள், சிங்கள யாத்திரிகள்   மீது தாக்குதல்!

முன்னைய செய்தி: தஞ்சாவூர், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு வந்த 184 சிங்களவர்கள் விரட்டியடிப்பு!

இந்த ஆக்கம் மேலே உள்ள செய்திக்கும் பொருந்தும் என்பதனால் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.

தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச் சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

புலிகளால் கைது செய்யப்பட செல்வி, மனோகரன், தில்லை , மணியண்ணை

இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைத் (சீன சார்பு) தலைமை தாங்கி வழிநடத்தியதுமல்லாமல் தொழிற்சங்கப் போராட்டங்களையும் இலங்கையில் இனங்களுக்கிடையில் சம உரிமைக்காகவும், தமிழ் மக்களிடையே - குறிப்பாக யாழ்ப்பாண மக்களிடையே - புரையோடிப்போய்விட்டிருந்த சாதீய ஒடுக்குமுறைக்கெதிராகவும் நாகலிங்கம் சண்முகதாசன் உட்பட பல இடதுசாரிகள் போராடியிருந்தனர்.

சபரகமுவ மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 8ம் திகதி நடைபெற உள்ளது. சட்ட ரீதியாக 2013ம் ஆண்டிலேயே மாகாண சபை தேர்தல் இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில் வழமை போல் இம்முறையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் தேர்தலை முன்கூட்டியே நடத்துகிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE