Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

 

altசுதந்திர கல்வியையும் கல்வியின் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செயயப்பட்டிருந்த பாரிய நடைப்பயணம் இன்று காலை பேராதெனிய பல்கலைக்கழகத்திலிறுந்து ஆரம்பமாகியது. 

இந்த நடைபயணம் தொடர்நது 05 நாட்கள் மேற்  கொள்ளப்பட விருக்கின்றது.  மாவனல்ல ,அம்பே புஸ்ஸ, நிட்டம்புவ,கலனி ஊடாக கொழும்பிற்கு வர ஏற்பாடகி இருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பா பிலவு பகுதியில் மக்களை மீளக் குடியேறவிடாது தடுத்து வரும் இராணுவம் அப்பகுதியில் பாரிய இராணுவ முகாம் ஒன்றைஅமைப்பதற்கு முற்பட்டுள்ளது. இதற்கு எதிராக, மக்களை மீளகுடியமர்த்துமாறும் ஏனைய பகுதியகளில் மீளக் கூடிய மக்களுக்குரிய வசதிகளை செய்து கொடுக்குமாறும் முல்லைத்தீவு கடலோரங்களில் மீனவர்களை அச்சுறுத்தி வரும் இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்தும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (21.09.2012) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

மாணவர்கள் தம் உரிமைக்காக போராடுவது தவறா?

பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை பலமுகம் கொண்டு தொடர்ந்து ஒடுக்கும் அரசு, தனது ஜனநாயகமும் தீர்வும் பன்னாட்டு மூலதனத்துக்கே என்பதை உலகறியப் பறைசாற்றி வருகின்றது.

மாணவர்கள் தம் உரிமைக்காக போராடுவது தவறா?

சஞ்ஜீவ பண்டாரவை உடன் விடுதலை செய்!

கல்வியை தனியார் மயமாக்குவதை உடன் நிறுத்து!!

ஆசிரியர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்று!!!

 பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை பலமுகம் கொண்டு தொடர்ந்து ஒடுக்கும் அரசு, தனது ஜனநாயகமும் தீர்வும் பன்னாட்டு மூலதனத்துக்கே என்பதை உலகறியப் பறைசாற்றி வருகின்றது.

அதோ எரிகிறது ஏதோ!

யாரோ எரிக்கின்றார் எதையோ!

கரும் புகை மூட்டம் வானை முட்டியும்

எங்களை மூடியும் இருக்கிறது.

தீயும் நாற்றம் ஊரெல்லாம் பரவியிருக்கிறது.

நாசித் தூவாரங்களுக்குள் மல்லிகை வாசனை திணிக்கப்படுகிறது.

நமக்கேன் அது பற்றிய ஆராய்ச்சி

வேறு வேலைவெட்டி இருப்பின் பார்ப்போம்!

வாரீர்.

இந்த வதைமுகாம் யாழ் கோட்டைக்கு மிக அருகில் இருந்தது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசத்துக்கும் அருகில் இருந்தது. 1990 இல் புலிகள் வெளியேற்றியது இந்த மக்களைத்தான். இது என் அனுமானம். கடந்த நான்கு நாட்களாக பிரித்தோதும் சத்தம் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்க முடிந்தது. அத்துடன் இது கோட்டை முகாமுக்கு மிக நெருக்கமாக இருந்த, ஒரு மாடிக் கட்டிடமாகும். செல் வெளிக்கிடும் சத்தம் முதல் அது விழுந்து வெடிக்கும் சத்தமும், அருகில் துப்பாக்கி சன்னங்கள் வெடிப்பது போன்ற ஒலிகள் எனது வதைமுகாமை அடிக்கடி உலுப்பியது.

நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆளாளுக்கு முகாம்களுக்கு சென்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்கள், எல்லாம் சரியாகிவிட்டது என்று அறிவித்தார்கள்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டாரவை கைதுசெய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(20) நாட்டில் 5 முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தற்காலிக  ஒருங்கிணைப்பாளர் சிந்தக ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடத்தப்பட்டோர், காணாமல்போனார் மற்றும் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோருக்கான நியாயம் வேண்டி, கடத்தல்கள் மற்றும் கைதுகளுக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11மணியளவில் யாழ். நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று  இடம்பெற்றது.

அரசு முதல் புரட்சியாளர்கள் வரை தங்கள் கட்சிக்கு ஆள்பிடிப்பதன் மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கலாம் எனக் கருதுகின்றனர். இலங்கையின் பிரதான முரண்பாடான இனப்பிரச்சனையை இப்படித்தான் அரசு முதல் புரட்சியாளர்கள் வரை அணுகுகின்றனர். முரண்பாடுகளுக்குரிய அரசியல் தீர்வை முன்வைத்து மக்களை அணிதிரட்டுவதற்குப் பதில், அந்தச் சமூகப் பிரிவுகளின் ஆள்பிடிக்கும் அரசியலை முன்னெடுக்கின்றனர்.

 

altசட்டவிரோத கைதுகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பு, மட்டக்குளியில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 300ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த சனிக்கிழமை 15/09/2012 டென்மார்க் கொல்ஸ்ரபரோ நகரில் "நனவெரிந்த சாம்பல்" கவிதை தொகுப்பு வெளியீடும், முன்னணி இதழ்கள், "குழந்தையும் தேசமும்", "தமிழ் பெறும் கணணி" மற்றும் "காலம் மாறுது" இறுவட்டு அறிமுகங்களும் இடம்பெற்றன.

எதிர்வரும்  சனி 22ம் திகதி மாலை 2:00 மணி முதல் 5:00 மணி வரை லண்டன் பாராளுமன்ற வெஸ்ட் மினிஸ்டர் சதுக்கத்தின் முன்னால் லலித், குகன் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரியும், மகிந்த ராஜபக்ஸ பாசிச சர்வாதிகார ராணுவத்தினால் பாரிய அளவில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனந்தெரியாத ஆட்கடத்தல்கள் மற்றும் சர்வாதிகாரி ராஜபக்ஸவின் ஜனநாயக விரோத போக்குகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நிகழவுள்ளது.

-ஆர்ப்பாட்ட அழைப்பாளர்கள்: முன்னிலை சோசலிச கட்சி

தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளும்--மகாசபையில் பிளவும்

1956-ம் ஆண்டுக் காலகட்டம,; தமிழரசுக்கட்சி; தன் அரசியலை முழுத்தீவிரத்துடன் முன்நகர்த்திய காலப்பகுதியாகும். காங்கிரஸில் இருந்து பிரிந்த அக்கட்சியை, பண்டாரநாயக்கா அரசின் தனிச்சிங்களச் சட்ட நடவடிக்கையானது, தமிழ்மக்கள் மத்தியில் மேலும் காலூன்ற வைத்தது. ஸ்ரீ-எதிர்ப்புப் போராட்டம், பாதயாத்திரையுடன் கூடிய திருமலை மாநாடு போன்றவைகள் அக்கட்சியின் வளர்ச்சியை துரிதப்படுத்திற்று.

"தீப்பொறி"க் குழுவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வெளியேறினேன்.

இலங்கைக் கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து தென்னிலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமடையத் தொடங்கியிருந்தன. அரசபடையினரும் பொலிசாரும் கொழும்பில் என்றுமில்லாதவாறு தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். ஒருவித பதட்ட நிலை கொழும்பில் நிலவிக்கொண்டிருந்தது.

ஜனநாயகத்தை மறுத்தவர்கள், "ஜனநாயக மறுப்பு" என்ற பெயரில் தொடர்ந்தும் ஜனநாயகத்தை மறுக்கின்றனர்.

ஜனநாயகம் மறுக்கப்பட்டவருக்கு எதிராக, மீண்டும் தேடகம் ஜனநாயக மறுப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

நேசனுக்கு கருத்து சொல்லும் உரிமையை மறுத்தவர்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. மாறாக தங்கள் ஆட்கள் "தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்ட ஒழுங்கை மீறியிருந்ததாக" கூறி, அதைத்தான் தவறு என விளக்கம் கொடுத்துள்ளனர். இப்படி தம் ஜனநாயக மீறலை நியாயப்படுத்திக் கொள்ளுகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE