Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பல்கலைக்கழகங்களை அரசு ராணுவ மயமாக்குகின்றது. இதை என்னவிலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்த தயாராகவுள்ளோம் என தேசிய மாணவர் ஒன்றியச் செயலாளர் அசங்கபுளேகொட தெரிவித்துள்ளார்.


யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவம் அத்துமீறி நுழைந்ததையும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது!.


கொழும்பு கோட்டை  ரயில் நிலையத்தில் நேற்றுக்காலை  யாழ். பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது வன்முறை தாக்குதலை நடாத்திய இராணுவத்தையும் அதனை பின்னால் இருந்து செயற்ப்பட்ட அரசினையும் கண்டித்தும் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி தேசிய மாணவர் ஒன்றிய மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில்  துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர்!

பல்கலைக்கழக விவகாரங்களில் அரசாங்கம் இராணுவத்தை தலையிடச் செய்வதாகக் கூறி அதனைக் கண்டித்து இலங்கையின் தலைநகர் கொழும்பில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இலங்கை தேசிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக அந்தப் போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்தப் புத்தாண்டில் புதிதாகச் சிந்திப்போம். புதிய மனிதனாக வாழ முனைவோம். எம்மைச் சுற்றிய குறுகிய வட்டங்கள், சிந்தனைகள் இந்தப் புத்தாண்டில் தகரட்டும். எமது அறிவு வளரட்டும். வாழ்க்கை நடைமுறைகள் மனிதத்தன்மை கொண்ட ஒன்றாக வளரட்டும்.

என்னைப் போன்று ஒடுக்கப்பட்ட சக மனிதனை எதிரியாகப் பார்க்கும் எம் குறுகிய மனபாங்கையும், அது சார்ந்த நடத்தையை இந்தப் புத்தாண்டில் கைவிடுவதன் மூலம், மனித தன்மையை மீட்டு எடுப்போம். சக மனிதன் எம்மை எதிரியாகப் பார்த்தால், நாம் எதிரியல்ல என்பதை அவனுக்கு புரியவைப்போம். இது தான் புத்தாண்டு செய்தியாகட்டும்.

இந்தப் புத்தாண்டில் புதிதாகச் சிந்திப்போம். புதிய மனிதனாக வாழ முனைவோம். எம்மைச் சுற்றிய குறுகிய வட்டங்கள், சிந்தனைகள் இந்தப் புத்தாண்டில் தகரட்டும். எமது அறிவு வளரட்டும். வாழ்க்கை நடைமுறைகள் மனிதத்தன்மை கொண்ட ஒன்றாக வளரட்டும்.

என்னைப் போன்று ஒடுக்கப்பட்ட சக மனிதனை எதிரியாகப் பார்க்கும் எம் குறுகிய மனபாங்கையும், அது சார்ந்த நடத்தையை இந்தப் புத்தாண்டில் கைவிடுவதன் மூலம், மனித தன்மையை மீட்டு எடுப்போம். சக மனிதன் எம்மை எதிரியாகப் பார்த்தால், நாம் எதிரியல்ல என்பதை அவனுக்கு புரியவைப்போம். இது தான் புத்தாண்டு செய்தியாகட்டும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அமைப்புக குறித்தும், இதில் உள்ள உறுப்பினர்கள் குறித்துமான, அவதூறுகள் அடிக்கடி வெளிவருகின்றது. அரசியல் அடிப்படையும், ஆதாரமுமற்ற இந்த அவதூறுகள், கடந்தகால இயக்கப் பாணியிலானது. "துரோகி", "தியாகி" என்று எப்படி மொட்டையாக முத்திரை குத்தி அரசியலை நடத்தினரோ, அதையே மீள இன்று தொடர்ந்து செய்கின்றனர். எம்மை "மாபியாக்கும்பல்", "லும்பன்கள்", "ஏகாதிபத்திய ஏஜண்டுகள்", "அரசு சார்புக்கும்பல்", "புலி சார்புக்கும்பல்", "கும்பல்" ... என்று தொடங்கி தனிநபர்கள் பற்றி தங்கள் கற்பனைக்கு ஏற்ப இட்டுக்கட்டிய அவதூறுகளை தங்கள் அரசியலாக்கி முன்னெடுக்கின்றனர்.

அமைப்புக் குறித்தும், அதில் உள்ள தனிநபர்கள் குறித்துமான, அவதூறுகள் அடிக்கடி வெளிவருகின்றது. அரசியல் அடிப்படையும், ஆதாரமுமற்ற இந்த அவதூறுகள், கடந்தகால இயக்கப் பாணியிலானது. "துரோகி", "தியாகி" என்று எப்படி மொட்டையாக முத்திரை குத்தி அரசியலை நடத்தினரோ, அதையே மீள இன்று தொடர்ந்து செய்கின்றனர். எம்மை "மாபியாக் கும்பல்" "லும்பன்கள்" "ஏகாதிபத்திய ஏஜண்டுகள்" "அரசு சார்புக் கும்பல்;" "புலி சார்புக் கும்பல்" "கும்பல்" … என்று தொடங்கி தனிநபர்கள் பற்றி தங்கள் கற்பனைக்கு ஏற்ப இட்டுக்கட்டிய அவதூறுகளை தங்கள் அரசியலாக்கி முன்னெடுக்கின்றனர்.

இலங்கை பாராளுமன்றமும் நீதிமன்றமும் எதற்காக, யாரின் நலனுக்காக தமக்குள் மோதுகின்றது? மக்களின் நலனை முன்னிறுத்தியா? இல்லை. மக்கள் மேலான ஒடுக்குமுறையை எதிர்த்தா? இல்லை. உலகை மீளப் பங்கிடக் கோரும் ஏகாதிபத்தியத்துக்கும், அதைத் தக்கவைக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான மோதல் தான் இது. இலங்கையில் வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு முகம் கொண்டு, அது தன்னை வெளிப்படுத்துகின்றது. ஆளும்வர்க்கத்தை சேர்ந்த அதிகார வர்க்கத்துக்கும், ஆட்சியாளருக்கும் இடையிலான, தத்தம் அதிகாரத்துக்கான மோதலாக இது வெளிவருகின்றது.

altஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னால் தலைவர் சுரஞ்ஜித் பண்டார இன்று காலை தாக்குதலுக்குல்லாகியுள்ளார்.

altஅனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகதெரிய வருகின்றது.

சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 09

இந்தச் சமூக அமைப்பிலான தீர்வுகளை, பாட்டாளி வர்க்கம் சார்ந்து இருப்பதில்லை. இதற்கு பதில் தன் வர்க்கம் சார்ந்த தன் வர்க்க தீர்வுகளை முன்வைக்கின்றது. இந்த வகையில் உடனடித் திட்டம் நீண்ட காலத்திட்டம் என குறைந்தபட்சம் இரண்டை அடிப்படையாகக் கொண்டது தான் பாட்டாளி வர்க்கத் திட்டம். இதில் ஒன்றை நிராகரித்தாலும் பாட்டாளி வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வரமுடியாது. இன்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயார் செய்வதில் உள்ள தடையும் இதுதான். இலங்கையின் பிரதான முரண்பாடான இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண, உடனடித் திட்டம் மற்றும் நீண்டகாலத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி அரசியல் நடைமுறைகளை முன்னெடுக்காத வரை, பாட்டாளிவர்க்கம் இதன் மேல் அரசியல் செல்வாக்கு செலுத்த முடியாது.

கட்டுகஸ்தோட்டை - நுகவெல பிரதேச மூன்று பாடசாலைகளின் இணைப்பை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்:

கட்டுகஸ்தோட்டை - நுகவெல பிரதேசத்தின் மூன்று பாடசாலைகளை இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். நுகவெல பெண்கள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் அரசின் ஆராஜகம் மீண்டும் தலைவிரித்தாடியுள்ளது. அங்குள்ள சகல கைதிகளிடமும் வெறும் வெள்ளை வெற்றுத்தாள்களில், பலாத்காரமாக கையெழுத்தும், கைநாட்டும் கொழும்பு குற்றவியல் பிரிவும், புலனாய்வுத்துறையும், சிறை அதிகாரிகளும் இணைந்து பொற்றுள்ளனர். முன்னறிவித்தல்கள் எதுவுமின்றிய இந்நடவடிக்கையால் சிறைக்கைதிகள் அச்சமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இலங்கையின் வடக்கே கைதுசெய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

altஆட்சியாளர்கள் இனவாதத்தை பயன்படுத்துவது தமது குற்றச் செயல்களை மூடி மறைக்கவே எனவும் அது ஒரு அரசியல் திட்டம் எனவும் முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகள் எழக்கூடாது என்பதற்காக தமிழ் மாணவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற தோரணையில் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் மாணவர்களின்  புகைப்படங்களுடன் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மனித வாழ்வுக்கு உதவாத இனவாதத்தை கட்டியழத்தான் வேண்டுமா? மனித துன்பத்தை வாழ்வாக்கும் இனவாதத்தைப் போற்றத்தான் வேண்டுமா? இனவாதத்தை ஒழிக்க இனவாதம் என்பது, பகுத்தறிவுபூர்வமானதா?

மனிதன் பகுத்தறிவுள்ளவன். தன்செயலுக்கு தானே பொறுப்புள்ளவன். இனவாதம் சார்ந்த அனைத்துக்கும் அவனே பொறுப்பாளி. அவனுக்கு வெளியில், பொறுப்பைச் சுமத்த முடியாது. தன் நடைமுறை விளைவுக்கு, அவனே பதில் சொல்ல வேண்டும். இது தான் மனித அறம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE