Language Selection

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாகாணத்திற்கு வெளியில் உள்ள பெருந்தோட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப கல்வி பிரச்சினைகள் பற்றிய திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு   

நுவரெலியா மாவட்ட தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் ஊவா, சபரகமுவ, தென் மாகாணங்களில் உள்ள தமிழ் மாணவர்கள் க.பொ.த. உஃத கல்வி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாட்டங்களில் உள்ள தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக மக்கள் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலொன்று எதிர்வரும் 28ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 மணிக்கு காவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

ஊவா, சபரகமுவ, தென் மாகாணங்களில் கற்கும் தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய உடனடியாகவும், நீண்ட கால அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பின்வரும் விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையடப்பட்வுள்ளதாக மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்தார். 

•2016ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாஃத பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த. உஃத கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளில் கற்பதற்கு விரும்பும் ஊவா, சபரகமுவ, தென் மாகாணங்களில் உள்ள தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை எவ்வாறு நிலைநாட்டுவது? நீண்ட கால நோக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை?   

•நீண்ட கால நோக்கில், ஊவா, சபரகமுவ, தென் மாகாணங்களில் உள்ள தமிழ் மாணவர்கள் க.பொ.த. உஃத கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளில் கற்கும் தகைமையுடைய பெறுபேறுகளை க.பொ.த. சாஃத பரீட்சையில் பெறுவதனை அதிகரிக்க  செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை?   

•இந்திய ஆசிரியர்கள் க.பொ.த. உ/த கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளில் கற்பிக்க அழைப்பதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எவை?   

இக்கலந்துரையாடலுக்கு ஊவா, சபரகமுவ, தென் மாகாணங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், தனிநபர்கள் மற்றும் மக்கள் சார்பு அமைப்புகள் அனைத்திற்கும் திறந்த அழைப்பை விடுத்துள்ளார்.  

மக்கள் ஆசிரியர் சங்கம்

தொடர்புகளுக்கு : 0716070644