Language Selection

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த சில வருடங்களாக பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையின் கீழ் இலவசக் கல்வியை பாதுகாக்கவும் தனியார் பல்கலைக்கழகம் என ஆரம்பிக்கப்பட்டுள்ள திருட்டு பட்டக்கடைகளிற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

இன்று (17/05/2017) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒ;ன்றியம் மற்றும் மருத்துவ  மாணவர் நடவடிக்கை குழுவும் இணைந்து வரலாறு காணாத பாரிய போராட்டம் ஒன்றினை இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை பாதுகாக்கவும், மாலபேயில் அமைந்துள்ள திருட்டு பட்டம் வழங்கும் மருத்துவ கடையை மூடக்கோரியும் ஒழுங்கு செய்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பு தரப்பிலிருந்து நீதிமன்ற தடை பெறப்பட்டிருந்தது. தடையை மீறி மாணவர்கள் பேரணி முன்னேறியது. பேரணி கொழும்பு விகாரமா தேவி பூங்காவை அண்மித்ததும் கலகம் அடக்கும் படை, ராணுவம், பொலிஸ் மாணவர்கள் மீது பல தடைவை புகைக் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டதுடன் நீர்த்தாங்கி பிரயோகமும் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து புகைக்குண்டு தாக்கதலுக்கு உள்ளான மாணவர்கள் தமது கண்களை கழுவுவதற்காக விகாரமா தேவி பூங்காவில் உள்ள நீர்த் தாங்கிகள்,கழிவறை களை நோக்கி ஓடினர். அவர்களை பூங்காவிற்குள் வந்து அரச படையினர் தாக்கினர். குறிப்பாக கழிவறை மற்றும் தேனீர்சாலைக்குள் புகுந்து மாணவர்களை தேடித்தேடி தாக்குதல் தொடுக்கப்பட்டது. 17ற்கும் அதிகமானவர்கள் காயங்களிற்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10ற்கும் மேலான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இத்தாக்குதலின் போது சிறுவர்களும் பாதிப்புக்கு உள்ளானதாக தெரியவந்துள்ளது. 

எத்தகைய அடக்குமுறைகளை ஏகாதிபத்திய நலன் காக்கும் நவதாராளவாத பொருளாதாரத்தை மூர்க்கத்தனமாக அமுல்படுத்தும் அரசு கட்டவிழ்த்து விட்டாலும், தனியார் திருட்டு மருத்துவ பட்டக்கடை உட்பட அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களையும் மூடும் வரையும் இலவசக் கல்வியை உறுதி செய்யும் வரையும் தமது போராட்டங்கள் நிற்கப்போவதில்லை என மாணவர் தலைவர்கள் தெரிவித்தனர். 

 https://www.facebook.com/GuruThav/posts/1534747299882659?pnref=story