Language Selection

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவ சேவைகளை பாதுகாக்க இன்று 26-04-2017 இரவு வேளையில் கொழும்பு நகரில் தீப்பந்தங்கள் ஏந்தி மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. அரசாங்கம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பினை மீறி கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் தனியாரை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் அவற்றை இலவசம் இல்லாது ஆக்கும் நவதாராளவாத பொருளாதார கொள்ளைகையினை முன்னெடுப்பதில்  ஆர்வம் கொண்டு செயற்படுகின்றது. எனவே போராட்டங்களை இல்லாதொழிக்கும் வண்ணம் சட்டங்களை இயற்றுவதிலும், போலியான வாக்குறுதிகளை வழங்குவதிலும் முனைப்பாக உள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மருத்துவப் பீட மாணவர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

சைட்டம் எனப்படும் மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தை இழுத்து மூடுமாறு வலியுறுத்தி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த பல வருடங்களாக பல்வகையான போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் இரவு கொழும்பு மருதானை தொழில்நுட்பக் கல்லூரி சந்தியில் ஒன்று கூடிய மாணவர்கள், தீப்பந்தத்தை ஏற்றி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தொடர்ந்து பேரணியாக புறக்கோட்டை மத்திய ரயில் நிலையம் வரை சென்று அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பேரணி இடம்பெற்று வரும் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.