Language Selection

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மட்டக்களப்பில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பொலிஸ் தலையீடு காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மட்டக்களப்பு காந்தி பார்க்கில் கடந்த ஒன்பது நாட்களாக சத்தியாகக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை மாவட்ட செயலாளருக்கு கையளிக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை காந்தி பார்க்கில் இருந்து மாவட்ட செயலகம் வரை நடாத்தினர். மாவட்ட செயலாளர் வேலையற்ற பட்டதாரிகளின் குறிப்பாணையினை வாங்க மறுத்தார். 

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பொலிஸ் தலையீட காரணமாக ஏற்பட்ட அமைதியின்மையின் போது வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தேரர் ஞானானந்தா காயமடைந்தார். 

சட்ட விரோத பட்டக்கடைகளை தடை செய்!

கறுப்பு பட்டி அணிந்து பரந்து பட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்!