Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1986 தொடக்கம் 1990 வரையான காலகட்டங்களில் 60,000 க்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மன் விக்ரமரட்ண எழுதிய ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி தொடர்பான நூல் 2016 டிசம்பர் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு கொழும்பு 5 தும்முள்ள சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெறும். 27 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் உண்மைச் சம்பவங்கள் இதில் அடங்கியுள்ளன. 880 பக்கங்கள் அடங்கிய இந்நூலில் 74 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1,289 புகைப்படங்கள் பதியப்பட்டுள்ளன. விலை ரூபா 1,500 ஆகும். வெ ளியிடும் தினத்தில் ரூபா 1,000 க்கும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஜே.வி.பி.யின் இரண்டு கிளர்ச்சியால் கொல்லப்பட்ட காணாமல்போன தொகை 41,813 ஆகும். ஆனால் மனித உரிமைகள் அறிக்கைகளுக்கு அமைய இரண்டு கிளர்ச்சிகளில் கொல்லப்பட்ட மற்றும் காணால்போனவர்களின் தொகை 67,652 ஆகும். இதில் 6,661 பேர் கிளர்ச்சியாளர்களால் கொலை செய்யப்பட்டதோடு "ப்ரா" அமைப்பினால் 1,222 பேர் கொல்லப்பட்டனர். ஏனைய அனைவரும் பாதுகாப்பு படையினராலும் இதனோடு நேரடி மறைமுக தொடர்புகளைக் கொண்ட 13 துணை இராணுவக் குழுக்களினால் கொல்லப்பட்டவர்கள்.

நூலின் ஆசிரியரான தர்மன் விக்ரமரட்ண அன்று இடம்பெற்ற பல சம்பங்களை கண்ணால் பார்த்தவர். பல தலைவர்களை தொழில் ரீதியாக அறிந்தவர். அன்றைய சம்பவங்களை எழுதியவர். அன்று அவர் பத்திரிகை ஆசிரியராகவும் ஊடகவியலாளராகவும் செயற்பட்டவர். நூலில் அடங்கிய தகவல்களை அதனோடு தொடர்புபட்டவர்களுடன் நடத்திய 376 நேர்காணல்கள் மற்றும் ஆராய்ச்சிகள் ஊடாக தேடிப் பார்த்த தகவல்கள் அடங்கியுள்ளன. இது நூலாசிரியிரின் 52 ஆவது நூலாகும்.

கிளர்ச்சிக் காலத்திற்குரிய ஜே.வி.பி. தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் 1983 ஜுலை தடைக்கு பின்னர் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள், இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு முன்னர் மற்றும் பின்னரான சம்பவங்கள், துணை இராணுவக் குழுக்கள் மற்றும் நபர்கள், 80 களில் வேறு இடதுசாரி முன்னேற்றங்கள், ஸ்ரீ லங்கா சுதந்தி்ரக் கட்சி, சம்பிரதாய இடதுசாரி மற்றும் அதன் நடவடிக்கைகள் அதற்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள், பாடசாலை மாணவர்களின் போராட்டங்கள், பல்கலைக்கழக நடவடிக்கைகள், விரிவுரையாளர் மற்றும் மாணவ தலைவர்கள், கிளர்ச்சிக்காரர்கள், மிலிடரி தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகள், கொலை செய்யப்பட்ட மதகுருமார்கள், சட்டத் தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட பல்வேறுபட்ட சம்பவங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அதற்கான காரணங்களுடன் விளக்கக் குறிப்புக்கள் வெ ளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நூல் வெ ளியீட்டு வைபவத்தில் பிரதம அதிதியாக முருகந்தொடுவே ஆனந்த தேரரும், பிரதான சொற்பொழிவை பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பிரியதாஸவும் சட்டத்தரணி உதுல் பிரேமரத்தன மற்றும் பேராசிரியர் காமினி சமரநாயகி ஆகியோரும் நிகழ்த்துகின்றனர்.

நிகழ்ச்சியை பிரபல்யமான ஊடகவியலாளர் பாலித பெரேரா நெறிப்படுத்தவுள்ளார். வெ ளியீட்டு விழாவுக்கு அனைவரையும் அழைக்கின்றனர். மேலதிக விபரங்களை 011 5234384 என்ற தொலைபேசி எண் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

For Further information contact ; Dharman Wickremaretne or இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.