Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேற்று 29/11/2016 அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தனியார் பல்கலைக்கழகங்களை மூடக்கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது. ஊர்வலம் பாராளுமன்றத்தை அண்மித்த போது கண்ணீர்ப்புகை துப்பாக்கி பிரயோகம் மற்றும் தண்ணீர் பீரங்கிகள் பிரயோகம் செய்யப்பட்டது. களனி பல்கலைக்கழகத்திலிருந்து பிற்பகல 1.00 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்ட எதிர்ப்பு ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கு கொண்டிருந்தனர். தனியார் பல்கலைக்கழகங்களை இழுத்து மூடு, இலவசக் கல்வியை உறுதி செய் ,கல்விக்கான மானியத்தை அதிகரி, வெளிவாரி பட்டப்படிப்பை அதிகரி ஆகிய கோசங்களுடன் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான கண்டனங்களையும் முழங்கிய படி முன்னேறிய ஆர்ப்பாட்டத்தின் மீது அரச படையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது தாக்குதலுக்குள்ளான ஆறு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளிற்க்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச படைகளினால் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளை கைப்பற்றிய மாணவர்கள் அவற்றை திரும்ப படையினரை நோக்கி வீசி எறிந்ததனையும் அங்கு அவதானிக்க கூடியதாக இருந்தது.