Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நல்லாட்சி என்னும் பெயரில் பொல்லாத ஆட்சி செய்பவர்களினால் குமாரின் அரசியல் உரிமைகள் மற்றும் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் 13ம் திகதி, குமாரின் அரசியல் உரிமை மற்றும் குடியுரிமையை வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே உண்ண விரதப் போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து நடாத்தி வருகின்றது முன்னிலை சோசலிச கட்சி. கடந்த ஒரு வருடமாக பல இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், சமூக ஜனநாயகவாதிகள், இளம் ஊடகவியராளர்கள், கலைஞர்கள் என பல்பேர் குமாரின் உரிமைகளுக்காகவும் -  உறுதிப்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்த ஜனநாயக்தை உறுதிப்படுத்துமாறு கோரியும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த ஒரு வருடமாக பங்கு பற்றி வருகின்றனர்.

இலங்கை வரலாற்றில் மிக நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒரு அரசியல் போராட்டமாக மாறி, உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. இன்று நவம்பர் 13, கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்  ஒரு வருடம் நிறைவுறுவதை ஒட்டி இப்போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து கலந்து கொள்ளவுள்ளனர். குமார் குணரத்தினத்தின் அரசியல் மற்றும் பிரஜாவுரிமையினை உறுதிப்படுத்தவும், இந்நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்யவும் நடக்கும் இந்த தொடர்ச்சியான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் பொது மக்களாகிய உங்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.