Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சன் இருவரும் கடந்த வியாழன் (20/10/2016) இரவு அரச பொலீஸ் ரவுடிகளின் துப்பாக்கி சுட்டிற்கு அநியாயமாக பலியாக்கப்பட்டனர். இரச பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குவதனை எதிர்த்தும் படுகொலைகளிற்கு கண்டனத்தை தெரிவித்தும், நீதியை கோரி இன்று அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் இடம்பெற்றது.

பேராதனை, களனி, சிறிஜெயவர்த்தனபுர, ரஜரட்ட, றுகுணு, அழகியல், சப்ரகமுவ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் வீதிகளில் இறங்கி அரச படையினரின் ரௌடித்தனத்தை எதிர்த்து குரலெழுப்பி படுகொலைக்குள்ளான மாணவர்களிற்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.