Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து நாளை (24/10/2016) நாட்டின் அனைத்து பல்ககைலக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

உயிரிழந்த சுலக்சன், கஜன் சகோதரர்களின் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது

உத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு உத்தரவினை மீறிச் சென்ற அனைவரையும் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முடியுமா?

திடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது, அதனால் பொலிஸாரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழந்ததனை இந்த அனைத்து தரப்பினரும் அறிந்திருந்தார்கள்.

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிக்கின்றனர். இது ஓர் சாதரண விடயம் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்.

எனினும், இந்தக் கூற்றினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஓர் சாதாரண நிலைமையல்ல, இது ஓர் அசாதாரண நிலைமையாகும்.

வடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் நாம் இந்த சம்பவத்தை கைவிட்டு விடப் போவதில்லை.

மாணவர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதிலும் உள்ள பலக்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.