Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சியில் கனகபுரம் வீதி, டிப்போசந்தி, பரந்தன் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கையெழுத்து பெறும் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். இதில் பல மக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டு தமது ஆதரவை வழங்கி இருந்தனர்.

இப்போதாவது யுத்தப் பாதிப்புகளுக்கு இழப்பீடு கொடு, இராணுவத்தை முகாம்களுக்குள் மட்டுப்படுத்து, சகல காணாமலாக்கப்பட்டவர்கள் சம்மந்தமான தகவல்களை உடன் வெளிப்படுத்து, சகல அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய் போன்ற கோரிக்கைகளுடன் இக் கையெழுத்து பெறும் போராட்டடம் செவ்வாய்க்கிழமை (05/07/2016)  மேற்கொள்ளப்பட்டது.