Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தின் பிரஜா உரிமையினை மீள வழங்கக்கோரி பாரிய போராட்டம் ஒன்று இன்று பொரளையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை முற்றுகையிட்டு இடம்பெற்றது.

குமார் குணரத்தினம் புதிய அரசின் தேர்தல் கால உறுதிமொழிக்கமைய தனது இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்த போதும் அதனை அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக பரிசீலனைக்கு எடுக்காது தூசிய படிய விட்டிருந்தது.

நேற்றைய தினம் கேகாலை நீதிமன்றத்தில் குடிவரவு விதியினை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு குமாருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனையும் 50,000 ரூபா தண்டனைப் பணமும் அபதாரமாக தீர்ப்பு கூறப்பட்டு குமார் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குமார் கைது செய்யப்பட்டு இன்று 150 நாள் கடந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையினை எதிர்த்தும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மீதான அரசியல் அழுத்தத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பொரளையில் உள்ள குடிவரவு குடியகல்வு அமைச்சு அலுவலகம் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் கலகம் அடக்கும் படையினருக்கும் இடையே முறுகல் ஏற்ப்பட்டது. கலகம் அடக்கும் படையினர் தாக்கியதில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் பலத்த காயங்களிற்கு உள்ளாகியதுடன் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர்களான துமிந்த நாகமுவ மற்றும் ரவீந்திர முதலிகே ஆகியோரும் பலத்த காயங்களிற்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.