Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுதந்திரம் எங்கே? எனக் கேட்டு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னிலை சோசலிச இன்று (4/2/2016) புறக்கோட்டையில் ஒழுங்கு செய்திருந்தது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு போலிச் சுதந்திரத்திற்கு எதிரான கோசங்களை முழங்கினர்.

முன்னிலை சோசலிச கடசியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ அவர்கள் ஊடகவியலாளர்களிடம்; ஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறி வாக்குகள் பெற்று அதிகாரத்திற்கு வந்தனர். இன்று அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது பயங்கரவாதிகள் தான் உள்ளனர் என்பதுடன் காணாமல் போனவர்களை இறந்தவர்களாகவே கருத வேண்டும் என்கின்றனர். நல்லாட்சியில் அரசியல் பழிவாங்கல் இடம்பெறாது என்றனர். அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை எமது தோழர் குமார் குணரத்தினம் கொண்டிருப்பதனால் அவரை சிறையில் அடைத்து பழிவாங்குகின்றனர். அவர் இன்று ஒரு அரசியல் கைதியாக தான் சிறையில் உள்ளார் என தெரிவித்தார்.

சமவுரிமை இயக்கத்தின் சார்பில் ஊடகவியலாளரிடம் கருத்து கூறிய கிருபாகரன் இலவச கல்வி உரிமைக்காக போராடும் மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். விவசாயிகள் மீனவர்களின் மானியங்கள் இல்லாது ஒழித்து அவர்கள் விவசாயத்தில் இருந்தும் மீன்பிடியிலிருந்தும் விரட்டப்படுகின்றனர். எங்கே மக்கள் சுதந்திரம் அடைந்து நல்வாழ்வு வாழ்கின்றனர்? சரணடைந்தவர்கள் மற்றும் விசாரணை முடித்து விட்டு விடுவார்கள் என நம்பி தம் பிள்ளைகளை உறவுகளை கூட்டிச் தமது கைபிடித்து ராணுவத்திடம் பலரை ஒப்படைத்தனர். அவர்கள் எல்லோரும் எங்கே? இதுவா சுதந்திரம் என கருத்து தெரிவித்தார்.