Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனவரி 14ம் திகதி  பிற்பகல் 03.30 மணிக்கு கொழும்பு  தேசிய நூலக கேட்போர் கூட மண்டபத்தில். "புதிய அரசியலமைப்பு, பழைய நாடகம்"  என்ற கருப்பொருளில், முன்னிலை சோசலிசக் கட்சி கருத்தரங்கு ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள மைத்திரி-ரணில் அரசானது இலங்கையின் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை (Constiutional Reform) மேற்க்கொள்ள குழுவொன்றை   நியமித்துள்ளது. இச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளுவதன் மூலம், இலங்கை மக்கள் அனைவரினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விடப்படும் என மைத்ரி - ரணில் அரசும், அதன் அடிவருடிகளும் பிரச்சாரம் செய்கின்றனர்.

முன்பு தமிழீழம் கோரினோரும்; அதற்காக பல்லாயிரம் மக்களையும், போராளிகளையும் பலியிட்டோரும் கூட  நம்புகின்றனர், அறுபது ஆண்டு காலத் தேசிய பிரச்சினை புதிய இலங்கை அரசின் அரசியல் யாப்பு திருத்ததின் ஊடாக முடிவிற்குவருமென!

இது எந்த வகையிலும் எந்த மக்களினதும் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை. பசி, பட்டினி, வறுமை, வேலை வாய்பின்மை, போர்க்காயங்கள், வடக்குக் -கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதார அழிவுகள், இயற்கை வள பாதிப்புகள், தரமான கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் எவற்றிக்கும் இத்திருத்தம் தீர்வைத் தரப்போவதில்லை. ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான உரிமைகள் எவற்றையும் இந்த சீர்திருத்தம் வழங்கப் போவதில்லை.      

மேற்கு நாடுகளினதும், ஏகாதிபத்தியங்களினதும் சுரண்டலை அதிகரிக்கவே தற்போதய அரசியல் யாப்புத் திருத்தும் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் லாபம் அடைப்போபவர்கள் ஒடுக்குமுறையாளர்களும், சர்வதே மற்றும் உள்ள நாட்டுக் கொள்ளைக்காரர்களும், சுரண்டல் வாதிகளுமே.   

இதன் அடிப்படையில், ஒடுக்கப்படும் மக்கள் என்ன செய்யப் வேண்டும் என்பதை விவாதிக்கவே "புதிய அரசியலமைப்பு, பழைய நாடகம்"  என்ற கருப்பொருளில், முன்னிலை சோசலிசக் கட்சி கருத்தரங்கு ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.