Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குமார் குணரத்தினத்தை இலங்கை குடிமகனாக ஏற்று அவரை உடனடியாக விடுதலை செய்து, அவரின் அரசியல் செய்யும் உரிமையினை நிலைநாட்டக்கோரி கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாக கடந்த வெள்ளி 13/11/2015 முதல் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்று வருகின்றது.  புகையிரத நிலையத்திற்கு முன்னால் மக்களிற்கு அசௌகரியம் மற்றும் ஊறுவிளைவிப்பதாக ஏற்படுத்துவதாக கூறி பொலீசார் சார்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டதன் பிரகாரம் (போலீசார் வழக்கு எண் B 3329/2015)  கொழும்பு கோட்டை நீதிபதி சத்தியாக்கிரகத்தை நடத்துபவர்கள் என 18 பேரை நாளை நீதிமன்றில் அஜாராகுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

சத்தியாக்கிரக செயற்பாட்டாளர்கள் என குமார் குணரத்தினத்தின் சகோதரி நிராஞ்சலி குணரத்தினம் மற்றும் சஞ்சீவ பண்டார, துமிந்த நாகமுவ, தர்மசிறீ லங்காபிலி, அஜித் குமார விஜயரட்ன, புபுது ஜெயக்கொட என 18 பேருக்கு  நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.