Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தோழர் குமார் அவர்கள் உயிராபத்து காரணமா அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்து அந்த நாட்டு பிரஜா உரிமை பெற்ற ஒருவர். நல்லாட்சி புதிய அரசு நாட்டை விட்டு அரசியல் காரணங்களால் வெளியேறிய அனைவரையும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் இலங்கைக்கு திரும்பி வந்த தோழர் குமார் இலங்கை பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்திருந்தார். நல்லாட்சி அரசானது தோழரது விண்ணப்பத்திற்கு பதிலளிக்காது காலத்தை கடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாடு கடத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் முனைப்பாக உள்ளது.

தோழர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமைகளை அங்கீகரித்து, அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி; எதிர்வரும் வியாழக்கிழமை, 12/11/2015 அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை பாரிஸில் உள்ள இலங்கை தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் நிகழவுள்ளது.   இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு இலங்கையில் ஜனநாயகத்தை உறுதி செய்ய அனைவரையும் அழைக்கின்றோம்.