Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மைத்திரி - ரணில் அரசின் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களால் நடந்த வண்ணமுள்ளன. இதற்கு முக்கிய காரணிகளின் ஒன்று கல்வியை தனியார் மயப்படுத்துவதாகும். கடந்த வாரம் கடந்த 29ஆம் திகதி கொழும்பில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தின் மீது பொலிஸார் வழிமறித்துத் தாக்கிய கொடூரச் சம்பவம் "நல்லாட்சியின்" உண்மை முகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.  

இன்னிலையில் இன்று (03.11.2015) மைத்திரி - ரணில் அரசின் மாணவர்களின் மீதான வன்முறை மற்றும் கல்வியைத் தனியார் மயப்படுத்தலுக்கு எதிராக கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தாலும்  மற்றும் மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கை குழுவாலும்  (MFSAC) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.