Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மீரியாபெத்த மண்சரிவு அவலம் நடந்து ஒரு வருடம் ஆகி விட்டது. பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதி மொழியான புதிய வீடு கட்டித்தரப்படும் என்பது இந்த மக்களிற்கு இன்னமும் கனவாகவே இருக்கின்றது. பழைய அரசு போய் புதிய அரசும் வந்து ஏறக்குறைய ஒருவருடமாகின்றது. புதிய அரசாங்கமும் இவர்களது சந்தாப்பணத்தில் உல்லாச வாழ்வு வாழும் அரசியல்வாதிகளும், இந்த துன்ப்பட்ட மக்கள் விடயத்தில் கண்களை இறுக மூடி இன்னமும் தூக்கமாகவே நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று 01/11/2015 பண்டாரவளையில், மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு உரிய நிவாரணத்தையும், புதிய வீடுகளையும் கேட்டு போராட்டத்தினை மேற்க்கொண்டனர்.