Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று (28/10/15) நண்பகல் 12 மணி அளவில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதராலயத்திற்கு முன்பாக சிரியாவின் மீதான ஏகாதிபத்திய யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள மனித பேரவலத்தினை கண்டித்தும் கியூபா மீது அமெரிக்கா ஜக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த பொருளாதார தடை நீடிப்பு தீர்மானத்திற்கு எதிராகவும் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

உலகம் இன்று ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. முதலாளித்தும் பெரும் இலாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டு கனிமங்கள் மற்றும் வளங்களை கொள்ளையிடுவதற்க்காக உலகம் முழுவதும் யுத்தத்தை விதைத்து, மக்களை கொன்று குவிப்பதுடன் அவர்களை அகதிகளாக நாடு நாடாக ஓட ஓட விட்டுள்ளது. மேலும் சொந்த நாட்டு மக்கள் மீது சொல்லொணாத வரிச் சுமைகளை சுமத்தியும் பொருட்களின் விலைகளை அதிகரித்தும் ஒட்டச் சுரண்டுகின்றது. பல்தேசியக் கம்பனிகள் எங்கும் எதிலும் முக்கை நுளைத்து கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. சுற்றுச்சூழல் பாரிய பாதிப்புக்கு உள்ளாகிய வண்ணமுள்ளது.

இலங்கையும் நவதாரளவாத பொருளாதாரத்தின் பிடிக்குள் இறுகி வருகின்றது. இதிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் நாம் ஒடுக்கப்படும், அடக்கப்படும் உலக மக்கள் அனைவருடனும் இணைந்து ஒன்று சேர்ந்து போராடினால் மாத்திரமே சுபீட்சமான வாழ்வு சாத்தியமாகும். அந்த வகையில் ஏகாதியத்தியங்களில் பிடியில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் சிரிய மக்களுக்காகவும், அமெரிக்க பொருளாதார தடை காரணமாக அல்லலுறும் கியூப மக்களிற்க்காகவும் இன்று இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.