Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நாற்பத்தி ஆறாவது நாளாக தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சத்தியாக்கிரக போராட்டத்தில் இத்தாலி தோழர்கள் பங்கு கொண்டு அரசியல் கைதிகள் மற்றும் குமாரின் விடுதலைக்காக ஒரு நாள் அடையாள உண்ணா விரதத்தை மேற்கொண்டனர்.

பல அந்நிய நாடுகளில் இத்தாலி உட்பட அரசியல் கைதிகள் மற்றும் குமாரின் விடுதலைக்காக பல ஆர்ப்பாட்ட போராட்டங்களை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்ததுடன், தொடர்ச்சியாக மேலும் பல போராட்டங்களை சர்வதேச அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இத்தாலி சமவுரிமை இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிச கட்சி தோழர்கள் “போர்க்களத்தில் சுற்றுலா -Picnic on the Battlefield” என்னும் இனவாதத்திற்கு எதிரான நாடகம் மற்றும் அரங்க நிகழ்வுகளை நடாத்துவதற்க்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எதிர்வரும் 5ம் திகதி முதல் 16ம் திகதி வரை தொடர்ச்சியாக தென்னிலங்கை, திருகோணமலை மற்றும் யாழ் மாவட்டம் ஆகிய பிரதேசங்களில் நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளனர்.