Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்களின் வாழ்விற்கு வரவு செலவுத் திட்டத்தில் நல்ல செய்திகளை தருவதாக கூறிய மைத்திரி - ரணில் அரசு, அடுத்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மக்களின்  எதிர்பார்ப்புகளிற்கு வேட்டு வைத்துள்ளது. அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களிற்கு சம்பள அதிகரிப்பை வழங்கி அவர்களின் சட்டை பைகளை நிரப்பி விடுவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். கூட்டரசாங்கம் சில உணவுப் பொருட்களின் விலையை குறத்து விட்டு, இந்நாட்டு அரச ஊழியர்கள் தனியர்துறை ஊழியர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது.

ஓய்வூதியம், சேமலாப நிதி, உரமானியம் என பலவற்றினை பறித்தெடுக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து இடதுசாரிய கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்று கூடி விவாதித்திருக்கின்றன. இது குறித்து உழைக்கும் மக்கள் மற்றும் அரச, தனியார் ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் மற்றும் கருத்தரங்குகளை நடாத்த தீர்மானித்துள்ளனர். இடதுசாரிய கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இணைந்து, பட்ஜெட்டிற்கு எதிரான  செயற்பாடாக துண்டுப்பிரசுர விநியோகம், வேலை உணவு இடைவேளையில் பிரச்சாரம் என்பன ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் 8ம் திகதி பெரும் ஆர்ப்பாட்ட போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.