Language Selection

ஆவணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவனான யோகராஜா நிரோஷனை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால், பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக இதனைக குறிப்பிட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவரை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் நடத்திய சில மாணவர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரான தமயந்த சம்பத் மற்றும் நளின் நிரோஷன் ஆகிய மாணவர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அத்துடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மஹேஷ் பெலபத்வல என்ற மாணவரது வீட்டுக்கு சென்று அவரை அச்சுறுத்தியுள்ளனர் எனவும் நஜீத் இந்திக குறிப்பிட்டுள்ளார்.