Language Selection

முன்னணி செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூற்று இது. ஆக தங்களால் முடியாது என்று கூறுகின்றவர்கள், தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர் என்பதே வரலாற்று உண்மை.

"இந்தியா தலையிட்டால்தான் நிரந்தர தீர்வு காணமுடியுமென" சென்னையில் வைத்து விக்னேஸ்வரனின் இக் கூற்று தங்களை தாங்கள் இந்தியக் கைக் கூலிகளாகவே பிரகடனம் செய்வதாகும்.

இதுதான் இனவாதம் பேசும் கூட்டமைப்பின் அரசியல் கொள்கை. இந்தியா - அமெரிக்கக் கைக் கூலிகளாக இருந்தபடி, அவர்கள் தீhவு தந்தால் தான் தமிழ் மக்களுக்கு விடிவு என்று கூறுகின்ற பித்தாலாட்ட அரசியல் தான், காலகாலமாக தமிழ் மக்களையே அழித்து வருகின்றது.

சொந்த மொழி பேசும் மக்களை அணிதிரட்டிப் போராடுவதையோ, சகோதார மொழி பேசும் மக்களுடன் இணைந்து போராடுவதையோ மறுத்து, இனவாதம் பேசுகின்ற மக்கள் விரோதிகளே இவர்கள்.

சொந்த மொழி பேசம் மக்களை வாக்க ரீதியாக, சாதி ரீதியாக, பிரதேச ரீதியாக பிரித்து கையாளும் தங்கள் யாழ் மையவாத வக்கிரங்களுக்கு தலைமை தாங்கிய படி, சகோதார மொழி பேசும் மக்களை எதிரியாகச் சித்தரிக்கும் மக்கள் விரோதத் துரோகிகளே இவர்கள்.

இப்படி தங்கள் அரசியல் நடத்தைக்கு இனச்சாயம் பூசி மொழுகிய படி, அமெரிக்க - இந்தியாக் கைக் கூலிகளாக இருந்தபடி, அதையே தமிழ் மக்களுக்கு தீர்வாக காட்டுகின்ற கடைந்தெடுத்த சமூக விரோதிகள். இவர்கள் அரசியல் ரீதியாக வேர் அறுக்கமால், தமிழ் மொழி பேசும் மக்கள் தமக்கான ஜனநாயக் தீர்வைக் காண முடியாது என்பதே உண்மை.