Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று காலை 9 மணி அளவில் தோழர் சீனிவாசன் இறந்த செய்தியை தோழர்கள் தெரிவித்தனர்.

தோழர் சீனிவாசன் 70 களின் பிற்பகுதியிலிருந்தே புரட்சிகர அரசியலின் ஆதரவாளர். அமைப்பு அரசியலின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொருளாராகவும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும்  பொறுப்புக்களை ஏற்று அயராது பணியாற்றியவர்.

ம.க.இ.கவின் போராட்டங்கள் மாநாடுகள் கருத்தரங்குகள் அனைத்திலும் மிகுந்த உற்சாகத்தோடு அவர் பணியாற்றினார். பலமுறை சிறை சென்றிருக்கிறார்.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக கணைய புற்றுநோயுடன் போராடி வந்தார். கணையப்
புற்று நோயைப் பொறுத்தவரை அது மற்றெல்லா புற்று நோய்களையும் விடக்கொடியது.  விரைந்து வளரக்கூடியது. அலோபதி மருத்துவம் மாற்று மருத்துவம் சேர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார்.

மருத்துவம் எடுத்துக்கொண்ட காலத்தில் வலி அவரை வதைத்தாலும், கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி அமைப்பு நிகழ்ச்சிகள் போராட்டங்கள் பற்றி கேட்டறிந்தார்.  இதழ்களை வாசித்தார். தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.  இப்படி உறுதியையும் உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தினார்.

நான் சென்னை வந்த புதிதில் என்னை வந்து பார்த்தவர் தோழர் சீனிவாசன் தான். அதன்பிறகு எங்கு எப்பொழுது பார்த்தாலும் தோழமையுடன் நலம் விசாரிப்பார். அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தினருக்கும்இ ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கும் மிகப்பெரிய இழப்பு.

அவருக்கு நமது வீரவணக்கங்கள்.  அவருக்கு செலுத்தும் மரியாதை என்பது அவர் கண்ட புதிய ஜனநாயக புரட்சி கனவை நாம் நிறைவேற்றுவதில் தான் இருக்கிறது.

பதிந்தவர் குருத்து

04/05/2012