Language Selection

மாணிக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

இதைச் சும்மா ஒரு விளம்பரமா

ஒருபோதும் எடுக்கக் கூடாது பாருங்கோ.

மாபெரும் குற்றவாளிகள்

தங்களின் குற்றங்களை

மற்றவரில் சுமத்த..,

 

 

அனைத்து மக்களையும்

அடிமாடாய்க் காயடித்து – முழு

நாட்டினையும் வதை முகாமாக்கி

அதற்கும் மேலாக

அப்பாவிகளில் ஆயிரக் கணக்கானோரை 

சிறையெனும் அநீதியுள் மாட்டி

தாங்கள் அன்றாடம் செய்கின்ற

கொள்ளை – கொலை – வக்கிரங்களை

அவர்கள் மீதினிலே சுமத்தி

சிறிலங்கா சனநாயக சோசலிசக் குடியரச

அநீதி சபைத் தீர்ப்புகளால் 

உயிர்களைத் தூக்கிலே போட்டு

யுத்தம் செய்விக்கும் நாடுகளை 

அத் தண்டனையைப் பார்க்கவைத்து – இந்த

மாபெரும் குற்றவாளி அரசு – தான்

மீண்டும் மீண்டும் தப்பிப் பிழைக்க

அப்பாவிச் சந்தர்ப்பக் கைதிகளை

தூக்கிலேபோட்டுக் கொலைசெய்யும்

ஊழியத்திற்கு ஆழ்த் தேவையாம்..!?

 

பின்வளவில் ஆழக் கிடங்குவெட்டி

அதற்குள் ஆட்டுக் கிடாயை வளர்த்தெடுத்து

அம்மன் காளி கூழிக்கும்..,

வயிரவன் முனியப்பருக்கு மட்டுமல்ல

புத்தன் யேசு முகமது மோசேயென

அத்தனை கடவுளுக்கும் மடைபோட்டால்..!?

தங்களின் பாவங்கள் பறந்தோடி

புண்ணியம் வந்து சேர்ந்து

நோய் நொடிகள் அகலுமென..!!?

யானைக்கும் சரி.., மனிதனுக்கும் சரி..,

“மதம்” பிடித்துப்போனால்

மற்றவர்களுக்கு தொல்லை தான்

பேயாடும் மனிதப் பேய்க் கூத்தாய்..?

கோழிக் குஞ்சுமுதல்..,

அன்பாக வளர்த்தெடுத்த

ஆடுவரை பலிகொடுக்கும்

இம்மனிதருக்கு – தம்

சிறு பாவம் போகுமென்றால்..!?

 

அவர் சுமக்கும் – மா

பெரும் பாவம் போவதற்கு

யானை புலி கரடி முதலையென

பலியிட்டுக் கொள்ளலாமே..!?

 

ஆகவேதான்

ஆறறிவு மனிதரை

அநிஞாய நாட்டுக்குள்

அடிமாடாய் அடைத்துவைத்து

அவர்களின் கழுத்திலே..!?

சுருக்கிட்டுக் கொலைசெய்ய

கொலைகாரச் சாமிகளுக்கான

வேலை வெற்றிடம்

நிறையவே உள்ளதாம்.

 

மாணிக்கம்

11/11/2011

 

 

(தொடரும்)

தொடரின்முன்னையபதிவுகளைவாசிக்க:

1.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 01

2.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 02

3.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 03

4.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 04