Language Selection

மாணிக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வேசம் கலைஞ்சு போச்சு கோத்தண்ணை

உன் வாய்க்குத்தான் வந்திருக்கு ஆப்பண்ணை

பாயைச் சுருட்டியோடு கோத்தண்ணை

உன் பரம்பரைக்கே வந்திருக்கு ஆப்பண்ணை

 

மகிந்தனொரு காய்ந்த மரம் கோத்தண்ணை

அவன் வீழ்வதற்கு நீ பெரிய ஆப்பண்ணை

மேவின் சில்வா சண்டித்தனம் பாரண்ணை

பசில்த்தம்பி வாயடைத்து நிற்கிறானே ஏனண்ணை

 

வெள்ளைவான் கடத்தலிலை நீயண்ணை

வடக்கு தெற்காய் அலையிறியே ஏனண்ணை

உன் மகிந்த வம்ச வண்டவாளம் பாரண்ணை

அது கோட்டைத் தண்டவாளத்தில் தானண்ணை

 

நீ..! தோழர் குணம் - திமுதுவைக் கடத்தித் தானண்ணை

உந்தன் ஊழல் உலகிற்கு வந்திருக்கு ஏரண்ணை

கிட்லரைப் போல நாசிக் கூட்டம் நீயண்ணை

எரிகாஸ் அடித்துக் கொல்லுறியாம் ஏனண்ணை

 

நாடெல்லாம் போர் முளைப்பதேனண்ணை

அது உங்கள் நாய்வால் அரசியலால் தானண்ணை

இப்ப சந்திரிக்கா கொக்ரிப்பதேனண்ணை

அவ முட்டையிட்ட கோழியாட்டம் தானண்ணை

 

ரணிலின் மூளை சூம்பியது ஏனண்ணை

அவன் உன்னைவிட ஆபத்தான ஆளண்ணை

ஒண்டிக்கொண்டி வாறியோ நீ கோத்தண்ணை

உன் கோவணத்தைப் பிடுங்கித் தாறன் பீத்தண்ணை

 

உலகமெல்லாம் மண்டியிட்ட கோத்தண்ணை

பெரும் மாவலியில் மூழ்கியினிப் பீத்தண்ணை

முள்ளி வாய்க்கால் ஓடையிலே கோத்தண்ணை

நீ மூத்திரமடிச்ச திமிர் ஏனண்ணை..!?

 

இனி மக்களின்ரை கைகளிலே நாடண்ணை

எம் மக்கள் திரண்டதனால் நாடெங்கும் வாழ்வண்ணை

பாயைச் சுருட்டியோடு கோத்தண்ணை

உன் பரம்பரைக்கே வந்திருக்கு ஆப்பண்ணை.

 

- மாணிக்கம்  20/04/2012