Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறுபான்மையின மக்களின் அடிப்படையான சகல அரசியல் உரிமைகளையும்

மறுத்து போரில் வெற்றி கொண்டதன் ழூலம் அவர்களின் இன

அடையாளங்களை மேன் மேலும் இல்லாதொழித்துக் கொண்டு மறுபுறத்தே

அபிவிருத்தி, நிவாரணம் என கதை அளந்து இந்திய, சீன மற்றும் அந்நியர்களிற்கு வடக்கு கிழக்கிலே அடிமைத் தொழிலாளர்களை பிடித்துக் கொடுத்து உங்கள்

குடும்ப சொத்தினை மேன் மேலும் பெருக்கி ஏன் எதிர்காலத்தில் இலங்கைத்

தீவே உங்கள் குடும்பச் சொத்தென்று உரிமை கோரினால் கூட

ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

ஓன்றை மட்டும் நினைவில் வைத்திருங்கள் மனிதகுல

வரலாறு என்றும் பின்னோக்கி செல்வதில்லை. அடிமைகள் தமது அடிமை விலங்குகளை ஓர் நாள் நிச்சயமாக உடைத்தெறிந்து எழுச்சி பெற்று உங்களை அழித்தொழிப்பார்கள்.

இறுதிக்கட்ட யுத்தம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள், ஐ.நா. பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். எனினும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம்கொடுக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதேசங்களை கைப்பற்றினோம். ஆனால் இறுதிமுடிவு எட்டப்படவில்லை. எனினும் ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் குழுவாக இணைந்து செயற்படுதல் மூலமாகவே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது. உலகம் மிகவேகமாக வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்றும் அவர் சொன்னார். வங்கித்தொழில் கற்கை நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பொருளாதார முகாமைத்துவமும் கற்றுக்கொண்ட யுத்தமும் எனும் தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2005 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட போது பலரும் என்னுடன் கலந்துரையாடினர். யுத்தத்தின் மூலம் புலிகளை தோற் கடி ப் ப த ற்கு அரசாங்கங்கள் பல முயற்சித்தன. அவையாவும் தோல்வியடைந்தன. இந்நிலையில் புலிகளை யுத்தத்தின் மூலமாக புலிகளை தோற்கடிக்கமுடியாது. அவர்கள் கேட்பதை கொடுத்து பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணுமாறு அவர்கள் என்னிடம் கோரிநின்றனர்.யுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இரண்டு முறைமைகள் ஊடாகவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆட்சியிலிருந்து பல அரசாங்கங்கள் முயற்சித்தன. நாமும் முயற்சிகளை மேற்கொண்டோம். தனியாக அல்ல, இந்தியா மற்றும் நோர்வேயூடாக விடயங்களை விளங்கிக்கொண்டோம்.

எமது நிலைப்பாட்டில் நாம் இருந்தோம், யுத்தத்தில் ஏனைய அரசாங்கங்கள் ஏன் தோல்வியடைந்தன. அவற்றை திரும்பி பார்க்கமுடியாது. எனினும் நாம் திரும்பிப்பார்த்தோம், வடமாராட்சி படைநடவடிக்கை தொடர்பில் திரும்பி பார்த்தோம். படையினரின் பலத்திற்கு புலிகளால் ஈடுகொடுக்கமுடியாது, நாம் ஒவ்வொரு தடவையும் வெற்றியீட்டு÷வாம். ஆனால் அதனை நிறைவுக்கு கொண்டுவரவில்லை.

படைநடவடிக்கை, சமூகம், அரசியல், பொருளாதாரம், ராஜதந்திரம் மற்றும் சர்வதேச தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. வடமராட்சி நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை, எனக்கு படைநடவடிக்கை தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டது. தலைவர்களுடன் பலமாக கடமையாற்றினோம்.

2005 ஆம் ஆண்டு தலைவரை நாம் இறக்குமதி செய்யவில்லை, எம்மிடத்தில் பலவீனம் இருந்தது. அதனை நாம் கண்டுகொண்டோம். புலிகள், படையினருக்கு கூடுதலான இழப்புகளை ஏற்படுத்தி இடங்களை கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தை மீட்டோம், பின்னர் நாம் கிழக்கை மீட்டெடுத்தவேளை தந்திரோபாய பின்வாங்கல் என்று பிரபாகரன் தெரிவித்தார். எதிர்க்கட்சியும் கூறியது.

வன்னி வனாந்தரம் பயங்கரவாதம் ஆட்கொண்டிருந்தது. எங்களிடத்தில் போதுமான படையினர் இருக்கவில்லை. படையை ஓர் இடத்திலிருந்து எடுக்கமுடியாத நிலைமை. ஜயசிக்குறு நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தை கைப்பற்றினோம். எனினும் பாதுகாக்கமுடியவில்லை. இவ்வாறான நிலைமைகள் படைப்பலத்தை பாதிக்கும். இதுபெரியதொரு காரணமாகவும் அமையும். படைகளை பலப்படுத்தவேண்டும் என்று கோரினோம். அதற்கான ஒரு பகுதியை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன்.

சர்வதேசம் அழுத்தம் கொடுத்தது இந்தியாவிற்கும் எமக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வு இருந்தது. இந்தியாவில் சிறுபான்மை ஆட்சியிருந்தாலும் எங்களிடத்தில் புரிந்துணர்வு இருந்தது. பொருளாதார ரீதியில் நாங்கள் பணத்தை நாம் செலவழித்தோம். உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டவேளையிலும் அதற்கும் நாம் முகம்கொடுத்தோம்.

ஆட்சிபீடம் ஏறியவேளையில் பலமாக அரசாங்கம் இருக்கவில்லை, படைநடவடிக்கையை தொடர்வதற்கு அரசியல் மிக முக்கியமானது. 2005 ஆம் ஆண்டு சிறுபான்மை அரசாங்கமே இருந்தது. பாராளுமன்றத்திலும் பலமிழந்து இருந்தது. மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது ஆதரவு கிடைக்காவிடின் தொடரமுடியாது.

பல அரசாங்கங்கள் படையணிகளை பலப்படுத்த விரும்பவில்லை. படைகளை பலப்படுத்துவதை மிக முக்கியமான விடயமாக கருத்தில் கொண்டோம். முப்படைகளையும் பொலிஸ் மற்றும் சிவில் படைகளை பலப்படுத்தினோம். ஜனாதிபதியினால் மட்டுமே படைகளை பலப்படுத்த முடியும். அதற்கான அதிகாரமும் அவரிடத்திலேயே இருக்கின்றது. கிழக்கில் முப்படைகளை பலப்படுத்தினோம். வன்னியில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை.

தெளிவான தூரநோக்கு , குறிக்கோள் இவை முக்கியமான விடயமானதாகும். அதற்கு தலைமைத்துவமும் முக்கியமானதாகும். புரிந்துணர்வு காலத்தில் படைகளின் முக்கியஸ்தர்களும் புலிகளின் முக்கியத்தலைவர்களும் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தைகளை அரச தலைவர்கள் முன்னெடுக்கவேண்டும். படையினர் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என ஜனாதிபதி கூறினார். படையினரின் ஹெலிகொப்டர்களை புலிகள் கோரியிருந்த வேளையில் அவற்றை நாம் கொடுக்கவில்லை.

கெப்பத்திகொல்லாவையில் கிளேமோர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கு செல்லவேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினர். ஜனாதிபதி சென்றார். மக்களுடன் கலந்துரையாடினார். அதுதான் தலைமைத்துவம். படையினருடன் பயணித்தார், விஜயம் செய்தார். வவுனியாவிற்கு போகுமாறு நான் கோரியபோது கிளிநொச்சிக்குதான் செல்வேன் என்று ஜனாதிபதி சென்றிருந்தார்.

பாதுகாப்பு சபைக்கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் எந்த நேரத்தில் நடைபெற்றாலும் அதில் ஜனாதிபதி கட்டாயமாக பங்கேற்பார். ஒரு கூட்டத்தையேனும் தவறவிடவில்லை. அது தலைமைத்துவதற்கு முக்கியமானது. படைநடவடிக்கைகளை மெதுவான முன்னெடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். முகமாலையில் ஒரே நாளில் 125 க்கு மேற்பட்ட படையினரையும் ஆறு படையணிகளையும் இழந்தோம். அனுராதபுரத்தில் விமானங்களை இழந்தோம். இப்போது சரிதானே என பலரும் வினவினர் ஆனால் தலைமைத்துவம் புதிய விடயங்களை தேடிக்கொண்டிருந்தது. அவர் அஞ்சவில்லை .

புலிகளின் விமானங்கள் எமது படைப்பலத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை என்றாலும் அவை உளவியல் ரீதியில் தாக்கத்தை கொடுத்தன. 2005 ஆம் ஆண்டு வான் பாதுகாப்பு முறைமை எங்களிடத்தில் இருக்கவில்லை. எனினும் புலனாய்வு தகவல்களின் பிரகாரம் 1998 ஆம் ஆண்டிலிருந்தே புலிகள் விமானங்களை வைத்திருந்தனர் . புலிகளின் விமான தாக்குதல் எமக்கு முதல் அனுபவமாக இருந்தது. அதற்காக கவலையடையவில்லை.

பலநாடுகளில் ஆலோசனை பெற்றோம் மிகவேகமான விமானங்களையும் புதிய ஹெலிகளையும் அறிமுகம்செய்தோம். பயிற்சியில் ஈடுபட்டோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டவேளையில் விமானங்கள் சுட்டு கீழே வீழ்த்தப்படுவதை ஜனாதிபதி பார்த்தார். தலைமைத்துவம் பலமிழந்திருந்தால் கட்டளை அதிகாரிகளும் படையினரும் பலமிழந்திருப்பர். தலைமைத்துவத்தின் பங்களிப்பு முக்கியமானது. அதுவே எங்களை ஊக்குவிக்கசெய்யும். ஊக்குவிப்புகளை விமர்சம் செய்தனர். அவற்றை தவிர்ப்பதற்கு படையினருக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் நலன்புரி விடங்களை மேற்கொண்டோம்.படையினருக்கு ஆயுதங்கள் சீருடைகளை மட்டுமே வழங்கவில்லை. அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். குழுவாக வேலைச்செய்தோம். பாதுகாப்பு முன்களத்தில் இருப்பவர்களுக்கு உதவினோம்.

நான்காவது ஈழபோர் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடுமுழுவதும் வியாபிக்கப்படும் என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். மக்களும் தலைவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினர். தலைமைத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புலிகள் மேல்மாகாணத்தில் தாக்குல் நடத்தினர். வடக்கு கிழக்கில் படைநடவடிக்கைளை மேற்கொண்ட ஏககாலத்தில் பொருளாதார நிலையங்களையும் பாதுகாத்தோம்.

கட்டுநாயக்க விமான நிலையம்,துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற புலிகளின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. மேல்மாகாணத்தில் புலிகளின் வலைப்பின்னலை பொலிஸாரே இல்லாதொழித்தனர். 3000 படையினருடன் பயணித்த ஜெட்லைனர் ஆட்காவி கப்பலுக்கு பல கப்பல்கள் பாதுகாப்புக்கு சென்றது. கடற்படைத்தளபதி கண்விழித்து கப்பல் பயணத்தை கண்காணித்து கொண்டிருந்தார். இலங்கைக்குள் ஆயுதங்கள் வருவதை தடுத்தனர்.

பல்வேறுபட்ட புலனாய்வு பிரிவுகள் மற்றும் முகவர் நிலையங்களிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. குழுவாக கடமையாற்றினோம். படையினரின் நன்னடத்தையில் கவனம் செலுத்தப்பட்டது படைநடவடிக்கை இடம்பெற்றகாலத்தில் மதுஅருந்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கடுமையாக சோதனை உட்படுத்தப்பட்டனர்.

எதனை முன்னெடுத்தாலும் அதனை தொடர்ந்தோம். அதனூடாகவே இறுதிபெறுபேற்றை கண்டோம். இறுதிக்காலக்கட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிகார அமைச்சர்கள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இன்னும் பல சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் அழுத்தம் கொடுத்தனர். புரிந்துணர்வு உட்படிக்கைக்கு சென்று இணக்கப்பாட்டை எட்டுமாறு வலியுறுத்தினர். எனினும் தன்னால் நிறுத்தமுடியாது என திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி படையினர் பலமடைந்து மீள்குழுவாக செயற்படுவர் என்றும் தெளிவுப்படுத்தினார்.

யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நாட்டிற்கு தடுக்க இயலாது. இந்தியாவிற்கு தடுக்கும் சக்தி இருந்தது. தமிழ்நாட்டின் அழுத்தம் இருந்தது. இந்தியாவை எம்முடனே வைத்துக்கொண்டோம். இருநாடுகளுக்கும் இடையில் பொறிமுறை இருந்தது. இந்தியாவிடம் உரையாடினோம். மூவரை நியமித்தோம், இந்தியாவும் மூவரை நியமித்தது. தினந்தோறும் உரையாடினோம். குறிப்பாக தமிழ்நாட்டில் அழுத்தம் தொடர்பில் கலந்துரையாடி அவற்றிற்கு தீர்வு கண்டோம். தமிழக முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார். அன்று 5.30 மணிக்கு சிவ்சங்கர் மேனனுடன் தொடர்பு கொண்டு உரையாடினேன்.

உணர்வு பூர்வமான விடயம் ஜனாதிபதியுடன் பேசவேண்டும் என்றார். சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தோம். ஐந்து நிமிட உரையாடலின் பின்னர் மறுநாள் காலை சிவ்சங்கர் மேனன் கொழும்பிற்கு வருகைதந்தார். கலந்துரையாடலுக்கு பின்னர் அறிக்கையை வெளியிட்டார். கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார். பிரச்சினைக்கு இணங்காணுவதற்கான பொறிமுறை முக்கியமானது இந்தியா ஒருபோது அழுத்தம் கொடுக்கவில்லை. புரிந்துணர்வு, வழிமுறைகள், பகுப்பாய்வு,தெளிவான இலக்கு, திட்டம், உண்மையான தலைமைத்துவம், பலமான வேலை, தொடர்தல், ஊக்கம், பங்களிப்பு முக்கியமானது.ஒருபோதும் காத்திருக்கவில்லை. ஒவ்வொரு விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன. சகல தமிழர்களும் பயங்கரவாதிகள் இல்லை, ஆனால் 99 வீதமான பயங்கரவாதிகள் தமிழர்கள். அதிஷ்டவசமாக சில விடயங்களை செய்வேண்டியநிலைமை ஏற்பட்டது. அவற்றை மீளவும் திரும்பிப்பார்த்தோம்.

வேறு தேவைகளுக்காக வருகின்ற தமிழர்களுடன் புலிகள் பயணித்தனர்,பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கிகொண்டனர். அவற்றை தடுத்தபதற்கு நடவடிக்கை எடுத்தோம். தமிழர்களை வடக்கு கிழக்கிற்கு திருப்பி அனுப்பினோம். அதனால் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம்கொடுத்தோம். அந்த நடவடிக்கையை நிறுத்திகொண்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

பிரச்சினைக்கு முகம்கொடுத்து பார்க்கவேண்டும். அதேபோல அபிவிருத்தியை பிரயோகிக்கவேண்டும். கடந்த 30 வருடங்களில் உயிர்கள், உடமைகள் மட்டுமன்றி பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை எனக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது அதில் பற்றுதியுடன் செயற்படவேண்டும் முதலீடுகளை அதிகரிக்கவேண்டும் .இது நல்ல சந்தர்ப்பம்,நேரம் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டும். உலகம் மிகவேகமான வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும்