Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 15 எம்.பி.க்கள் கொண்ட குழு ஒன்று இலங்கைத் தமிழர்களுக்கு  மறுவாழ்வு கிடைப்பதை நேரில் பார்வையிட்டு உறுதி செய்ய இலங்கை செல்கின்றது.!

மக்கள் வாழ்வை இல்லாதாக்கியவர்கள், மறுவாழ்வு காண வருகின்றார்கள்.? மறுவாழ்வைக்" காண்பதில் ஆரம்பத்தில் கழகங்கள் இரணடும் தடல்புடலாகத்தான்
புறப்பட்டன. போறவர்களின் பேரும் போட் பலகைளில் போடப்பட்டே இருந்தது. திடீரென அம்மா அதிரடி அரசியல் அதிகாரம் கொண்டு போகக்கூடாது.., சீ…போறதில்லை!  "விருந்துண்டு பரிசு பொருள் பெற்று திரும்பும் சம்பிரதாய நிகழ்ச்சி"யினால் என்ன பலன் என்றிட…..

இதில் மற்றவருக்கு வழமையாக வருகின்ற கவனஈர்ப்பு அரசியல் வர, அதுகொண்டு, நாங்களும் இக்கணத்திலிருந்து இப்பயணம் போகோம் என்கின்றார்! நாம்  ("இல்லாதாக்கிய வாழ்வை")  என்மொழியாம் கனிமொழியின் தலைமை கொண்டு சென்றமுறை பார்த்த மறுவாழ்வுதானே!  இப்போ இப்பயணத்திலும் அப்பயணம்தானே இருக்கும். இப்பொழுதிலிருந்து இப் ப(ழ)யணம் புளிக்கிறது என்கின்றார்…


இருந்தாலும் இருந்து பாருங்கோ… நாம் போகாததால் ,போகும் இக்குழு வீக் ஆகும்  என்கின்றார். சோ சொல்வது போல  கருணாநிதி அரசிலின் "தீராத விளையாட்டுப் பிள்ளை"தானே!


இன்று அண்ணாவின் வழி போய், அம்மாவின் வழி ஆகிவிட்டது!.. நாளை நாளைய பத்திரிகை அறிக்கை, பேட்டியைப் பொறுத்திருக்கும்!

--அகிலன் 16/04/2012