Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேசம் தடையாக அமையக் கூடாது: ரஸ்யா!

கொடிது கொடிது நல்லிணக்கத்தடை!
அதனிலும் கொடிது
உங்களைப் போன்ற "செங்கொடிச் சங்க" நாடுகள்!

அதனிலும் கொடிது
நீங்கள் இதற்கு சொல்லும் செங்கொடிச் சங்க விளக்கங்கள்!

அதனிலும்….

இன்றைய உலகமயம் புரியா புவிச் "செங்கொடிச் சங்கங்களின்" கற்றுக்குட்டிகள்"!

அதனிலும்…

அவர்கள் கொடுக்கும் "கன்னறாவி" விளக்கங்கள்!

அதனிலும்…

யுத்தமென்றால் மக்களும் சாவார்கள்தானேயென்று.. அமெரிக்காவை
தூக்கிநிறுத்தும் செங்கொடிப் பெருங்கதையாடல்கள்…! இதில் செங்கொடிகளுக்கு
சேர்ப்பில்லையென்று வலுச்சேர்க்கும் வகையிலான வலுவிழந்த
சிறுங்கதையாடல்கள்…

அதனிலும்…தேவை!

இவ்வகை கொண்ட மானிட விரோதக் "செங்கொடிக் கதையாடல்களை" மக்களுக்கு எடுத்துரைப்பதே! எடுத்துரைப்பின் "சாயம் களன்ற செங்கொடிகளின் அசைவியக்கத்தை  புதுவிசை கொண்டு இல்லாதாக்குவார்கள்!" இதில் மக்கள் தம்
அசைவியக்கத்தை சொல்லவும் வேண்டுமோ!

--அகிலன் 27/03/2012