Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடிவேலும் கட்சி அமைக்கலாம்....

இதில் கருணாநிதி-பிள்ளையான்--மன்மோகன் சிங்கும் இணைவார்கள்!

சினிமாவில் சீரற்ற நிலையில் இருக்கும் வடிவேலு,  இலங்கைத் தமிழ் மக்களுக்காக, மே மாதத்தின் "ஓர் திகதி கொண்டு"  அசல் கட்சியொன்று ஆரம்பிக்கலாம்!

அக்கட்சி தமிழ் மக்கள் நிலைப்பாட்டில் நித்தம்-நித்தம் ("மாறா நிலைகொண்ட..) மன்னிக்கவும், மாறும் நிலைகொண்ட… சொன்னேன். ஆனால்….! இருக்கின்றார்.. ஆனால....! கூடும் ஆனால்…! இதுபோன்ற   மாற்றும் தத்துவவியல் கோட்பாடு கொண்டதோர் கட்சியாக இருக்க வேண்டும்!

இதற்கு உதவியாக இவர்களை முன்மாதிரியாகக் கொள்ளமுடியும்!

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஆதரிப்பதில்லை என முடிவெடுத்திருந்தால் திமுக மத்திய அரசிலிருந்து விலகத் தீர்மானித்திருந்தோம்!-..ஆனாலும் மத்திய அரசு விழுந்துவிட கருணாநிதி துணை நிற்கான் ஆனால்…

நான் பிள்ளையான் பிரபாகரனல்ல, தமிழ்மக்களுக்காக வட-கிழக்கு இணைப்பை ஏற்றேன்…! அதையிப்போ மகிந்தாவற்காக எதிர்க்கின்றேன! ஆனால்…

"ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் கூடும்…இநதியப் பிரதமர்…ஆனால்…

இப்போதைக்கு  இவர்கள். ஜெனீவாக் கூட்டத்திற்குப் பின் தேசிய-சர்வதேசியத்தின் இன்னும் பலர் வடிவேலு கட்சியில் இணைவர்!

இது இல்லார்க்கு இவ் உலகமயமாதல் இல்லை!  இதை இல்லாதாக்குவோர்க்கே இவ்வுலகம் உண்டு.

-அகிலன் 19/03/2012