Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யுத்தத்தின் போது இராணுவக்காடையர்களிடம் சிக்கியவர்களிற்கும் சரணடைந்தவர்கட்கும் நடந்த அதே கொடூரம் எம் கண்முன்னேயே இன்று நடக்கிறது.


--இந்த வருடத்தில் இதுநாள் வரையிலும் சிறுமிகள் மீதான 24 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்திருக்கின்றார்.


இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்று கடந்த 3 ஆம் திகதி நெடுந்தீவில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் மிக மோசமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்".

 


இந்தச் சம்பவங்கள் சிறுமிகள் மீதான வன்முறைச் சம்பவங்களின் கொடூரத்தன்மை அதிகரித்துச் செல்வதைச் சுட்டிக்காடடுவதாக அமைந்திருக்கின்றன என்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சிவரூபன் தெரிவித்திருக்கின்றார்.


இத்தகைய வன்முறைப் போக்கிற்கு மக்களிடையே அருகியுள்ள விழிப்புணர்வு, சிவில் நிர்வாகத்தில் காணப்படுகின்ற மென்மைப் போக்கு, ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகள் என்பன முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றது


அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும் என டாக்டர் சிவரூபன் குறிப்பிடுகின்றார்---


சட்டமும் ஒழுங்கும் கொடிகட்டிப்பறப்பதாக இணக்க அரசியல் செய்யும் அமைச்சர் டக்ளஸ் நெடுந்தீவில் சிறுமிக்கு நடந்த கொடூரத்துக்கு வாய்திறக்க நேரமிருக்காது தானே. னித உரிமை மீறல்களிலிருந்து மகிந்த குடும்பத்தை மீட்டுக்காப்பாற்ற, செஞ்சோற்றுக்கடன் தீர்க்க ஆலாய் பறந்தால் தானே கூடியிருக்கும் கொலையாளிகளை மீட்டெடுக்க முடியும்.

-முரளி -08/03/2012