Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த செய்தியானது சிங்கள இனவாதிகளும், பௌத்த மதவாதிகளும், அவர்களின் தலைமையிலான அரசும் இலங்கையில் சிறுபான்மையின மக்களிற்கு எந்தவிதமான அரசியல் உரிமைகளையும் எக்காலத்திலும் வழங்கமாட்டா என்பதனை மேலும் உறுதி செய்துள்ளது. இவர்கள் தொடர்ந்தும் இனவாதத்தினை உயர்த்தி பிடிப்பதன் ழூலம் தமக்கும் தமது அந்நிய எஜமானர்களிற்கும் எதிரான சகல இன மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியினை இல்லாதொழிக்க முயல்கின்றனர்.

இவர்களை வெற்றி கொள்வது என்பது, சகல இன மக்களையும் இனவாதம் மதவாதம் மற்றும் நாட்டின் சகல வளங்களையும் கொள்ளையிடும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அணிதிரட்டி போராட்டத்தினை முன்னெடுப்பதன் ழூலமே சாத்தியமானதாகும்.

************

 

மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றபோது இரா ணுவ நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இரு வழிகளில் யுத்தத்தை நிறைவு செய்ய சந்தர்ப்பம் இருந்தது.

அப்போது அனைவரும் பேச்சு வார்த்தை மூலம் யுத்தத்தை நிறைவு செய்வோம் என்றனர்.ஆனால் ஜனாதிபதி, யுத்தத்தின் மூலம் நிறைவு செய்யலாம் என்று யுத்தத்திற்கு தயாரானார் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிடடு ராஜகிரியவில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் வங்கிக் கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற பொருளா தார முகாமைத்துவமும் யுத்தத்தினால் கற்றுக்கொண்ட பாடங்களும் எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது பாதுகாப்புச் செயலாளர், கடந்த 30 வருட மாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தத்தி னை முடிபுக்குக் கொண்டு வந்த அரசாங்கத் துக்கு நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்க ளும் ஜனாதிபதிகளும் விடுதலைப்புலிகளுடனான இந்த யுத்தத்தை நிறைவு செய்ய முடியாது என்றார்கள்.

ஆனால் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவு செய் துள்ளது. இதற்குப் பிரதான காரணம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அர்ப்பணிப்பு, அனை த்துத் தரப்பினரதும் ஒத்துழைப்புமே ஆகும். இந்த யுத்தத்தை நேரான சிந்தனையுடன் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை யுடன் ஆரம்பித்தோம்.அப்போது இதற்கு முன்னர் இருந்த அரச தலைவர்கள் ஏன் யுத்தத்தில் தோல்வியடைந் தார்கள் என்பதை மிக நுணுக்கமாக ஆராய் ந்தே யுத்தத்தை ஆரம்பித்தோம். அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு எதி ரான இந்த யுத்தத்தை மேற்கொள்வதற்காக என்னைப் பாதுகாப்புச் செயலாளராக ஜனா திபதி நியமித்தார்.

அதன் பின்னர் இராணுவத்தினுள் இருந்த சில பலவீனங்களுக்குத் தீர்வு கண்டு யுத்தத் திற்குத் தயாராகினோம். இந்த யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் பொருளா தாரத்திலும் அரசியலிலும் தளம்பல் ஏற்படாமல் இருப்பதற்கு அதிக கவனம் செலுத்தினோம். அன்று எமது அரசாங்கம் நாடாளுமன் றத்தில் பலவீனமாக இருந்தது. அந் நிலையி லேயே நாங்கள் யுத்தத்தை நிறைவு செய் தோம். அச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டு அர சாங்கம் எதிர்த்தபோது, இந்திய அரசு யுத்தத்தை எதிர்க்கவில்லை.

இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவதற் காக மூன்றுபேரைக் கொண்ட குழுவை ஜனா திபதி மகிந்த ராஜபக்ச நியமித்தார். அக் குழு உறுப்பினர்கள் இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையில் மேற்கொள்ளப் படும் யுத்தத்திற்கு எதிராகத் தமிழ் நாட்டு முத லமைச்சர் மு.கருணாநிதி உண்ணாவிரதத் தல் ஈடுபட்டார். அப்போது என்னுடன் தொடர்பு கொண்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவு டன் பேச வேண்டும் என்றார். நான் ஜனாதிபதியோடு பேசியபோது இந்திய வெளிவிவகாரச் செயலாளரை மறுநாள் இலங்கை வந்து தன்னைச் சந்திக்கும்படி தெரிவித்தார்.

ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மற்றொரு நாட்டுக்குச் செல்வதற்கு அனுமதி கிடைப்பது இரண்டு மணிநேரத்தில் இயலாத காரியம். எனினும் எமது ஜனாதிபதி அதனைச் செய்து காட்டினார். அவர் இலங்கைக்கு வந் தவுடன் கலந்துரையாடி யுத்தத்தின்போது கனகர ஆயுதங்களைப் பாவிப்பதில்லை எனத் தெரிவித்தார். இதனையடுத்துக் கருணாநிதி உண்ணா விரதத்தைக் கைவிட்டார். அந்தளவு நாங்கள் இந்தியாவுடன் நெருக்கமாகச் செயற்பட்டோம். கிழக்கை இராணுவம் கைப்பற்றியவுடன் தான் தொப்பிக்கலவுக்குச் செல்ல வேண்டும் என்றார் ஜனாதிபதி. பாதுகாப்புப் படையினர் எவ்வளவு தடுத்தும் அவர் அங்கு சென்றார்.

அதேபோன்று வன்னிப் பகுதி கைப்பற் றப்பட்டபோது கிளிநொச்சி செல்ல வேண்டும் என்றார். வவுனியா செல்ல ஏற்பாடு செய்கின் றேன் என நான் தெரிவித்தபோது ஜனாதிபதி கிளிநொச்சிக்கே செல்ல வேண்டும் என்றார்.இந்த யுத்தத்தை முடிபுக்குக் கொண்டு வருவதில் ஜனாதிபதி மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். யுத்தத்தை நிறைவு செய்வத ற்கு இராணுவத்துடன் சேர்ந்து ஏனையவர்க ளும் ஒத்துழைத்தனர்.

வடக்கில் யுத்தம் இடம்பெற்றபோது கொழும்பில் விடுதலைப்புலிகளின் வலைய மைப்பைப் பொலிஸார் முறியடித்தனர். அதேபோன்று கிழக்கில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வந்ததையடுத்து எல்லைக் கிராமங் களைப் பாதுகாக்கும் பணியில் சிவில் பாது காப்புப் படை ஈடுபடுத்தப்பட்டது. கடல் வழி மூலம் விடுதலைப்புலிகளுக்கு வந்த ஆயுதக் கப்பல்களை கடற்படையினர் அழித்தனர். அதேபோன்று விமானப் படை யினரும் ஈடுபட்டனர்.

அத்துடன் குறிப்பிட்ட சிலரிடம் முடங்கி யிருந்த அதிகாரங்களை அனைவருக்கும் பகிர்ந்து மிகவும் அர்ப்பணிப்புடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்பட்டார். அத்துடன் இந்த யுத்தத்தை நிறைவு செய் வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலை மையிலான சிறந்த அரசியல் தலைமைத்து வம் கிடைத்தது. அனைத்துத் தமிழர்களும் விடுதலைப் புலிகள் அல்ல. ஆனால் 99 வீதமான விடுத லைப்புலிகள் தமிழர்களாவர் என பாதுகாப் புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.