Language Selection

பி.இரயாகரன் - சமர்

அரசு செய்கின்ற புதிய நுட்பமான ஒரு போர்க் குற்றம். இதுவோ மூலதனத்தின் கபட நாடகம். சுரண்டும் வர்க்க நலன்களே, இங்கு இந்த நிலையை உருவாக்கி வருகின்றது. 

 

பேரினவாதம் உருவாக்கி வைத்துள்ள திறந்தவெளி சிறை இதன் அடிப்படையிலானது. மக்களை அடைத்து வைத்திருப்பது இதற்காகத்தான்.

ஆனால்,

மண்ணில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின், அரசுக்கு எதிரான பொது அரசியல் என்பது படிப்படியாக முடக்கப்பட்டு வருகின்றது. தனித்துவமான சுதந்திரமான அரசியல், அரச பாசிசத்தின் முன் சிதைந்து போகின்றது. இன்று இலங்கையில் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவது, பயங்கரவாதமாகிவிட்டது. இந்த அரச பாசிசத்தைப் பற்றி பேசுவது, கைதுக்கும் படுகொலைக்குமுரிய ஒரு அரசியல் செயலாகிவிட்டது.

அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.

தனிப்பட்ட கூட்ட அழைப்புக்கு ஏற்ப, 26-27 செப்டம்பர் மாதம் பாரிசில், புலி – அரசு அல்லாதவர்கள் கூடினர்.

அக்கூட்டம் இன்றைய நிலைமையை மதிப்பிட்டதுடன், எதிர்கால செயல் திட்டங்களையும் வகுத்துக் கொண்டது. தனது செயலுக்குரிய ஒரு அரசியல் திட்டத்தை ஏற்றுக்கொண்டது.

 

எம் மண்ணில் நடந்ததை நடந்ததாக சொல்லாத வரை, அனைத்துமே பொய்யாகிவிடும். பொய்களுடன் கலந்த உண்மையை ஒரு நாளும் நிறுவமுடியாது. அனைத்துவிதமான  நம்பகத் தன்மையையும் அது இழந்து விடும். பொய்ச் சாட்சியங்களாக அவை மாறிவிடும்.

 

பாசிசம் குறித்து மேற்கு நாடுகளுக்கும் எமது நாடுகளுக்கும் இடையில், அதன் வளர்ச்சி வடிவத்தில் குறிப்பான வேறுபாடுகள் உண்டு. ஆட்சிக்கு வரத் துடிக்கின்ற பாசிசம், எங்கும் தேசிய என்ற மையக் கோசத்தில் தான் தன்னை நிலைநிறுத்துகின்றது. இந்தப் பாசிச தேசியம், பல்வேறு சமூகக் கூறுகள் சார்ந்து தன்னை நிலை நாட்டுகின்றது. மதம், தூய்மைக் கூறு, சாதி, இனம், நிறம், மரபு என வௌ;வெறு வழிகளில், பாசிச தேசியத்தை கட்டமைக்கின்றது.

இன யுத்தத்தை பேரினவாதத்தின் வெற்றியாக்க, உலகமயமாக்கல் முரண்பாட்டுக்குள் இலங்கை தன்னை வலிந்து நுழைத்துக் கொண்டது. உலகளவில் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் நடைபெறும் முரண்பாடுகளும், மோதல்களும் இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. செல்வாக்கு மண்டலங்கள், இராணுவ மண்டலங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் உலகளாவிய போட்டியில், இலங்கை தன்னை வலிந்து உட்படுத்திக் கொண்டது.

தமிழனைக் கொன்றாலும், ஒடுக்கினாலும் அதுவே தமிழ் தேசியமென்கின்றனர் பாசிட்டுகள். அவை எதுவும் நடவாதது போல், தம்மை மூடிமறைத்துத் கொண்டு சில பாசிட்டுகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கமைய சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்திய, தன் முனைப்புடன் கூடிய புலிப் பாசிச அரசியலை பாதுகாக்க தம்மை மூடிமறைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.

எம் வரலாற்றுக்கு ஒரு இருண்ட பக்கம் உண்டு. எந்த இயக்கமும் அதைக் கண்டு கொள்வது கிடையாது, கண்டு கொள்ள விடுவதுமில்லை. அங்கு செய்யப்பட்ட தியாகமோ, எல்லாத் தியாகத்தையும் விட அதன் உணர்வில் உணர்ச்சியில் பல மடங்கு மேலானது. 

எம்மவர்கள் வடக்கத்தையான் என்று அழைக்கும் மக்கள் பல நூற்றாண்டுகளாக எழுத்தில்லாத அடிமைகளாக இருக்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை எந்தப் பிரிவு மக்களுக்கு கிடைக்கும் அற்ப சலுகைகள் கூட இந்த மக்களுக்கு கிடைக்கும் அற்ப சலுகைகள் கூட இந்த மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது என்ன ஜனநாயகமோ எனக் கேட்பதுமில்லை. சுரண்டல்களின் பார்வையில் இது தானாம் ஜனநாயகம் !

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE