Language Selection

பி.இரயாகரன் - சமர்

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பெயரில், சமகாலத்தில் இரண்டு முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளது.

1. திடீர் மார்க்சியம் பேசியபடி ஆயுதப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.

2. மார்க்சியம் பேசியபடி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி உருவாக்கம் பற்றி பேசுகின்றது.

ஒரு இனத்துக்கு எதிராக, தங்களுடன் போராட வந்த இளைஞர்களுக்கு எதிராகவும்,  புளாட்டும் ஈ.என்.டி.எல்.எவ். வும் பாரிய மனிதக் குற்றத்தை இழைத்தது. அதன் மத்திய குழு உறுப்பினராக இருந்த அசோக், அது பற்றி எதையும் மக்களுக்கு இன்றுவரை சொன்னது கிடையாது.

இப்படி நம்புவது, நம்ப வைப்பது, மக்களின் முதுகில் குத்தும் துரோகம். இப்படி நம்ப வைத்து அரசியல் செய்வது பச்சையான பச்சோந்தித்தனமாகும். மூடிமறைத்த தங்கள் சந்தர்ப்பவாதத்துடன், திடீர் அரசியல் வியாபாரம் நடத்த முனைகின்றனர்.

அசோக் தீப்பொறியின் போராட்டத்தையும், தளக்கமிட்டியின் போராட்டத்தையும், பல சிறு குழுக்களின் போராட்டத்தையும், மறுத்தும் திரித்தும், அனைத்தையும் ஒன்றாக இட்டுக் கட்டியதுடன், "எங்களோடும்" என்று கூறி றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ்யுடன் சேர்ந்து  நின்றதை மூடிமறைத்ததைப் பார்த்தோம். இந்த வரலாறு தான் இப்படி என்றால், அசோக் நாவலனுடன் சேர்ந்து கடந்தகால மற்றொரு வரலாற்றை திரித்து மறுக்கும் அரசியல் அசிங்கமோ இங்கு இயல்பில் எதிர்ப்புரட்சி அரசியலாகும்.

கடந்தகால மனித விரோதங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டதே எம் வரலாறு. படுபிற்போக்கான அரசியல் கூறுகள், தம் வன்முறைகள் மூலம் உண்மைகளை குழி தோண்டி புதைத்தது. சமூகம் அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போனது. இதற்குள் சகல பிற்போக்கு சக்திகளும், தம்மை மூடிமறைத்துக் கொண்டே நீச்சலடித்தனர். (வரலாற்று ஆவணங்கள் இணைப்பு)

"மக்களை அரசியல் மயப்படுத்த” காடு மேடுகள் எல்லாம் திரிந்து, அடுத்த புத்தாண்டில் (சித்திரையில்) தமிழீழம் என்றவர்கள் இவர்கள். இப்படி "அரசியல் மயப்படுத்த"ப்பட்டவர்களை ஏமாற்றி பிடித்துச் சென்றவர்கள், அதில் ஒரு பகுதி இளைஞர்களை கொன்றார்கள். இது வரலாறு.

இன்று ஒரு அரசியல் இயக்கம் முதல் தனி மனிதன் வரை கொண்டுள்ள அரசியல்  நேர்மையானது என்பதை, நாம் எப்படி இனம் காண்பது?  கடந்த காலத்தை எப்படி அவர்கள் காட்டுகின்றனர் என்பதுடன் தொடர்புடையது. தாங்களும், மற்றவர்களும் அதில் என்ன அரசியல் பாத்திரத்தை வகித்தனர் என்பதுடன் தொடர்புடையது. அதை விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு எப்படி உள்ளாக்கினர் என்பதுடன் தொடர்புடையது.

பிரபாகரனுக்கு முந்தைய காலத்தின் அனைத்து மனித விரோத சமூக விரோத தவறுகளுக்கும், புலிகளே பொறுப்பு என்கின்றனர். இப்படி கூறுகின்ற அரசியல் பொதுத்தளத்தில், எதிர்ப்புரட்சி அரசியல் ஒரு அரசியல் கூறாக மீளவும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தான் இனியொருவும், அசோக்கும் கூட, தமக்குத்தாமே லாடமடித்து அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இதற்கமைய பொய், புரட்டு பித்தாலாட்டம், சூழ்ச்சிகள் இன்றி, இந்த வண்டியை ஓட்ட முடியாத வண்ணம் கடந்தகால அரசியல்.

இன்னும் இரண்டு வருடங்கள், தொடர்ந்தும் மக்களை ஓடுக்கி ஆளமுடியும்;. தனக்கு எதிரான ஒரு பிரதான பொது எதிரியை உருவாக்கி வைத்துக் கொண்டு, அவசரமான தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன?

இறுதி யுத்தத்தில் பிரபாகரனும் அதன் தலைவர்களும் தாம் உயிர் தப்பிப் பிழைக்க மக்களை பணயம் வைத்தனர். அதற்கு உடன்பட மறுத்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்றனர். இப்படிப்பட்ட கொலைகாரர்கள், இறுதியாக தாம் தப்பிப் பிழைக்க கோழைகளாக சரணடைந்தனர். மக்களுக்கு எதிராகவும், தம் அமைப்புக் கோட்பாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டனர்.

புலி அரசியலோ சமூகத்தை வெட்டியாக்கி விதைத்த விதைகள், புலியல்லாத தரப்பை அரசியலற்ற மக்கள் விரோத நக்கியுண்ணும் கும்பலாக்கியது. இப்படி மக்கள் விரோத அரசியலைக் காவித் திரிந்தவர்களின் ஒருபகுதி, இன்று இனியொரு இணையத்தில் கும்மியடிக்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE