Language Selection

பி.இரயாகரன் - சமர்

இனியொரு மற்றும் தேசம்நெற் மூலமே, மீண்டும் திடீர் மார்க்சிய அரசியலில் பிரவேசிக்கின்றார் நாவலன். தான் எப்படியாவது ஒரு அரசியல் பிரமுகராக வந்துவிட வேண்டும் என்ற அவாவுடன், அரசியலில் காய்நகர்த்தலைச் செய்கின்றார். முதலில் திடீர் மார்க்சிய அரசியலை சந்தைப்படுத்த, அ.மார்க்ஸ்சை நாடுகின்றார். அவரின் முன்னுரையுடன், நாவலனுக்கு ஏற்ற ஒரு "மார்க்சியத்தை" முன்வைத்து, மீண்டும் தன்னை அறிமுகம் செய்கின்றார்.

கடந்தகால புலியெதிர்ப்பு அரசியலோ, இன்று மகிந்த சார்பாக துதிபாடும் அரசியலாகி நிற்கின்றது. அது சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாகியுள்ளது. சரத்பொன்சேகாவை ஆளத் தகுதியற்றவராக, புலியெதிர்ப்பு இணையங்கள் இன்று கூப்பாடு போடுகின்றது. தேனீ இணையமே, இந்தப் பிரச்சாரத்தில் மையமாக திகழ்கின்றது.

நேர்மையான அரசியல் பண்பை மறுத்து, அரசியலற்ற கதம்பத்தில் "மே 18" இயக்கத்தை நடத்த, அது இன்று வியூகமாகின்றது. இதன் பின்னுள்ள தனிப்பட்ட நபர்கள் நேர்மையற்றவர்கள்.  வெளிப்படையாக எதையுமே முன்வைக்க முடியாத, அதை எதிர்கொள்ள முடியாத பச்சையான  அரசியல் சந்தர்ப்பவாதிகள். சமரசமும், மூடிமறைப்புடனும் கூடிய அரசியல் நக்குண்ணித்தனம்.

தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் மூலம் ஆயிரம் ஆயிரம் கொடுமைகள் நிகழ்ந்த போது, அதற்கு ஆதரவாக "முன்னேறிய பிரிவு" என்று கூறிக்கொள்ளும் கூட்டம் செயல்பட்டது.  இதற்கமைய ஆழ்ந்த உறக்கத்தில்; கிடந்தவர்களும், எதிர்ப்புரட்சி அரசியலை அரசியலாக செய்தவர்களும், "திடீர் ஆய்வு", "திடீர் மார்க்சியம்" "திடீர் புரட்சி" என்று இன்று  கடைவிரிக்கின்றனர்.

தீப்பொறியின் அரசியலுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 1990 களில் அந்த அரசியல், புலியிடம் காட்டிக்கொடுக்கப்பட்டது. தீப்பொறியை தமிழீழக்கட்சியாக்கி, புலியின் ஆள்காட்டியாக மாற்றியதுடன், புலிகள் போட்டுத்தள்ளவும் உதவியது. இப்படி புலியின் உளவு அமைப்பாகி இயங்கியவர்கள தான்; மீண்டும் இன்று "மே 18" இயக்கமாக வெளிவருகின்றனர். தீப்பொறி அரசியலை அழித்து, புலி உளவு அமைப்பாக மாற்றிய அதே அரசியல், அதே தர்க்கம்.  

"தேர்தலை நிராகரி" என்கின்றது இலங்கை பு.ஜ கட்சி. அட!, இலங்கை பு.ஜ கட்சி வர்க்கப் போராட்டத்தை முன் வைக்கின்றது என்ற ஆச்சரியத்துடன், என்ன எது என்று பார்த்தால் "50 வீத வாக்குகள் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் இன்றைய ஜனாதிபதி முறைமைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும்" என்று நம்பி தேர்தலில் பங்கு பற்றக் கோரிய ஒரு "வர்க்கக்" கட்சி, அந்த காரணத்தைச் சொல்லியே மீண்டும் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றது. 

 

இதன் மூலம் "மே 18" இயக்கத்தையே நடுச் சந்திக்கு கொண்டு வருகின்றனர். தேசம்நெற் அசோக்கின் துணையுடன், என்பெயரில் தயாரித்து எனக்கு எதிராக முன்வைத்த ஈமெயில் மூலம் "மே 18" இயக்கத்துக்கு அரசியலை செய்கின்றனர். இவர்கள் தயாரித்த ஈமெயில் உள்ள அரசியலை, இங்கு குறிப்பாக கேள்விக்குள்ளாக்குவது அவசியமாகின்றது.

நாம் அசோக்குக்கு ஈமெயில் எழுதியதாக எம் பெயரில் கருத்துச் சொல்லி, ஒரு ஈமெயிலை தேசம்நெற் வெளியிட்டுள்ளது. இதை நாம் எழுதியிருக்கவில்லை. இப்படி எழுத வேண்டிய அவசியமும் எமக்கு கிடையாது. ஜான் பற்றி அசோக்கோடு கதைக்க, எமக்கு அப்படி என்ன வேண்டியிருக்கின்றது!? அசோக்குக்கு வேண்டியவர், ஜானை துணைக்கழைக்க இது உதவுகின்றது.

 

நிகழ்காலத்தில் அரசியலில் ஈடுபடுபவர்கள், கடந்தகாலத்தை மிகத் தெளிவாக விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டும். இதை மறுப்பவர்கள் யார்? கடந்தகாலத்தின் எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை, நிகழ்காலத்திற்கு மூடிமறைக்க விரும்பும் சந்தர்ப்பவாதிகள் தான். குறிப்பாக மாற்று அரசியலின் பெயரில் நிகழ்ந்த பலமுகம் கொண்ட எதிர்ப்புரட்சி அரசியலை பற்றிப் பேசாத, ஒரு "மார்க்சியத்தை" "முற்போக்கை" இன்று கதைக்கவும் முன்வைக்கவும் முனைகின்றனர். இதைத்தான் சமகால அரசியலாக, புது வேசத்துடன்  முன்தள்ளுகின்றனர். கடந்த வரலாற்று இயங்கியல் போக்கை நிராகரித்த "மார்க்சியம்" என்பது, மக்களுக்கு எதிரானதை கடந்தகாலத்தில் இருந்து மீள ஏமாற்றித் திணிப்பதுதான்.

   

எதுக்கு வாக்கு போடுகின்றோம்!?, ஏன் போடுகின்றோம்!? என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது. ஆறாவது அறிவை இழந்த மந்தைகளாக, ஒருவரை ஒருவர் கண்காணித்து சாய்க்க, ஒரு தேர்தல் திருவிழா அரசியல் கூத்தாகின்றது.

கடந்தகாலத்தில் எம்மக்களுக்கு எதிரான வரலாற்றை இருட்டில் வைத்திருப்பதே, இன்று பலரின் "இடதுசாரிய" பம்மாத்து அரசியலாக உள்ளது. மக்களை அவர்களின் சொந்த விடுதலைக்கு முன்னின்று வழி நடத்த முனையாது செயல்பட்டவர்கள், அதை மூடிமறைப்பதே இன்றைய புரட்சிகர அரசியல் என்கின்றனர். இதை நாகரிகமான பண்பான அரசியல் நடைமுறையுடன் கூடிய தோழமை என்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE