Language Selection

பி.இரயாகரன் - சமர்

புலம்பெயர் நாட்டில் புலி – புலியெதிர்ப்பு அரசியலாக, அது சரத் - மகிந்தாவுக்கு பின் செல்லும் அரசியலாக, ஆய்வாக, சிந்தனையாக மாறுகின்றது. மகிந்தா வெற்றி பெற்ற நிலையில், அதுவே சரணடைவு அரசியலாக மாறுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்க செயலாற்ற, எந்த மாற்று சிந்தனையும், அரசியலும் கிடையாது. மாறாக மக்களின் எதார்த்தத்தை நிராகரிக்கின்றதும், தங்கள் குறுக்கிய குதர்க்க விளக்கங்களுடன் அரசியல் பச்சோந்தித்தனத்தையே விதைக்கின்றது.

இலங்கை மக்கள் அனுபவிக்கும் சுபிட்சமான வாழ்வா!? இல்லை. வேறு தெரிவு எதுவும் இல்லை என்பதாலா!? இல்லை. அப்படியாயின் எது? இலங்கையில் நிலவும் உச்சக்கட்ட சிங்கள இனவாதம்தான், மீண்டும் மகிந்தாவை வெல்ல வைத்துள்ளது. சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிங்கள இனவாதம் தோற்கடிக்கப்பட, சிறுபான்மை இனங்கள் அதிகமாக வாழும் சிங்களப் பகுதிகளில் விளிம்பில் வெற்றி பெற்று, முழு சிங்களப் பகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஜனாதிபதியாகியுள்ளார் மகிந்தா.

 

புரட்சி என்பது "ஆயுதப் போராட்டமல்ல". ஆயுதப் போராட்டம் என்பது போராட்ட வடிவங்களில் ஒன்று. மக்கள் தம்மைத்தாம் புரட்சிகர கருத்துகள் மூலம் திரட்டிக் கொள்வதுதான், புரட்சியின் உள்ளடக்கம்.

புதிய ஜனநாயகக் கட்சியின் மதியுரைஞரும் தத்துவ வழிகாட்டியுமான சிவசேகரம், ஒரு பச்சோந்திக் கவிதை மூலம் பாராளுமன்ற பன்றித் தொழுவத்துக்கு உங்களை வழிகாட்டுகின்றார். தேர்தலை நிராகரி!, புரட்சி செய்! என்று கோசத்தின் கீழ், இவர்கள் மக்களை வழிகாட்டுவது கிடையாது. அதற்காக இவர்கள் கவிதை எழுதுவதும் கிடையாது. "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கு" எப்படி என்ற கவலையுடன், அதை வழிகாட்டி கவிதை எழுதுகின்றார். 

இன்னும் இரண்டு வருடங்கள் மகிந்தா குடும்பம் கொள்ளையிடவும், ஒட்டுமொத்த இலங்கை மக்களை ஒடுக்கவும், தமிழ் மக்களை இனவழிப்பு செய்யவும், சட்டப்படியான ஒரு கால அவகாசம் இருந்தது. இருந்தும் இன்று அவசரமாக தேர்தலை நடத்தக் காரணம் என்ன?

புலித் தலைவர் முள்ளிவாய்க்காலில் சரணடைந்ததன் மூலம், தன் கொள்கைக்கே துரோகம் செய்தார். அவரின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்ந்த புலித்தேசியம், பிரபாகரனின்  துரோகத்தைப் போல் போட்டிபோட்டு புளுக்கின்றது. மகிந்தா, சரத்பொன்சேகா முதல் ஏகாதிபத்தியம் வரை ஆளுக்காள் தங்கள் தலைவரின் புலித்தேசியம் இதுதான் என்ற விளக்கத்துடன், தங்கள் நக்குண்ணித்தனமான துரோகத்தை தேசியமாகக் கூறிப் பிரகடனம் செய்கின்றனர்.

இன முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப்போக்குகளும் தம் சொந்த இருப்பு சார்ந்து, அது நடத்திய யுத்தமும் களையெடுப்பும் சமூகத்தை இயல்பான சமூக ஓட்டத்தில் இருந்து அன்னியமாக்கியது. ஒரு பாசிசம் அழிந்ததன் மூலம், யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அவை பல முனையில், பலவாக தீவிரமாகின்றது.

நாடு செல்லும் புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவரும் சொல்வது இதைத்தான். 20 வருடத்துக்கு முந்தைய யாழ் சமூகமல்ல இன்றைய யாழ் சமூகம் என்று சொல்வதன் மூலம், அதில் இருந்து அன்னியமாகின்றனர். புலம்பெயர் தமிழர் தாங்கள் அப்படியே இருக்கின்ற ஒரு மனநிலையில் இருந்து, தம்மில் இருந்த அன்னியமாகிவிட்ட யாழ் சமூகத்தைப் பார்க்கின்றனர்.

மே 18 வரை எதையும் மக்களுக்காக முன்வைத்து போராடதவர்கள் இவர்கள்.  தமிழீழக்கட்சியின் அரசியலுடன் புலிப்பினாமிக் கும்பலாக மாறி, காட்டிக்கொடுத்தபடி படுத்துக் கிடந்தவர்கள் தான் இந்த திடீர் "மே 18" இயக்கக்கரார்கள். மே 18க்கு பின், திடீரென தம்மை "முன்னினேறிய பிரிவு" என்று கூறிக்கொண்டு திடீரென அரசியல் "வியூகம்" போடுகின்றனர்.

யுத்தத்தை நடத்த தீர்வு பொதியைக் காட்டுவது, பேரினவாதத்தின் இனவழிப்பு தந்திரம் என்பதை அனைவரும் அறிவர். இது போல் தேர்தலை வெல்ல, தேர்தல் வாக்குறுதிகள்.  இதே போல் தமிழினத்தை அமைதியாக அழிக்க, அதிரடியான தேர்தல் நாடகங்கள்.   இந்தவகையில் முன்வைக்கும் அதிரடித் தீர்வுகள், அந்த மக்களின் இருப்பையே சிதறடித்து வருகின்றது.

"இது முடிவல்ல, புதிய தொடக்கம்" என்று கூறி, பன்றித் தொழுவத்துக்கு வழிகாட்டுகின்றனர்.  மக்கள் தேர்தலை பகிஸ்கரித்தால், கள்ள வாக்கு போடுவார்களாம்! தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்குமாம்! ஆகவே மக்களே தேர்தலை பகிஸ்கரிக்காதீர்கள். மக்களே வாக்கு போட்டு எங்கள் பெட்டியை நிரப்புங்கள்! என்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE