Language Selection

பி.இரயாகரன் - சமர்

நடந்த போராட்டம் என்ன என்று கூறாது, "மார்க்சியம்;" மூலம் அதை "தமிழ் மக்களின் போராட்டம்" என்கின்றார். "மார்க்சியம்" பேசிய பேராசிரியர் சண்முகரத்தினம். புலியிசம் பேசுகின்ற அரசியல்தளத்தில் நின்று தான் இதை இன்று உரைக்கின்றார். புலியையும், இதன் வலதுசாரிய அரசியல் அடித்தளத்தையும், அதன் ஏகாதிபத்திய ஓட்டுண்ணித்தனத்தையும் காப்பாற்ற, சண்முகரத்தினம் என்ற "மார்க்சிய" சந்தர்ப்பவாதி தன் முற்போக்கு வேட்டியை கோமணமாக்கிக் கொண்டு புதிதாக களத்தில் இறங்கியுள்ளார்.

சாதிய ஒழிப்புப் போராட்டத்தில் இந்த கேள்வி மிக முக்கியமானதாகின்றது. வரலாற்று ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது மிகவும் அவசியமானதாகின்றது. ஆனால் இது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்றாகவுமுள்ளது. வரலாற்று ஆய்வுகளில் உள்ள குளறுபடிகள், அதை மேலும் மேலும் கடினமாக்கி, அதை ஆழ்ந்த சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது.

கடந்த மாசி மாதம் 21ம் நாள் இரவு மாசெயில் என்ற இடத்தில் கறுப்பின மாணவன் ஒருவன் நாசிகளால் படுகொலை செய்யப்பட்டான்.


17வயதுடைய இந்தக் கறுப்பின மாணவன் மீது கண்மூடித்தனமாக துப்பாகிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளி பொலீசாரிடம் வகையாக மாட்டிக் கொண்டான்.


F.N என்றழைக்கப்படும் தேசிய முன்னணியின் உறுப்பினரான இக்கொலையாளி லுபென் என்பவரைத் தலைவராக வரிந்த கொண்டவன், சட்டப+ர்வமாக இயங்கிவரும் இத்தேசிய முன்னணிக் கடசி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுகின்றது. சராசரியாக 10 வீத ஆதரவைத் தொடர்ச்சியாகப் பெற்றுவரும் இக் கட்சி வெளிநாட்டவர்களுக்கு எதிராக பகிரங்கமாகவே இயங்கி வருகின்றது.


பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களில் போத்துக்கல் நாட்டைச் சேர்ந்தோரே அதிகமாகக் காணப்படினும், தேசியமுன்னணியின் பிரச்சாரம் இவர்கள் மீதல்லாது அரபு, மற்றும் கறுப்பினத்தோர் மீதே குறிவைத்து நடாத்தப்படுகின்றத. கறுப்பு – வெள்ளை என்ற ஒரேயொரு எல்லைக்கோடு மட்டுமே இவர்களின் அடிப்படையம்சமாகும்.


தேசிய முன்னணியின் பேச்சாளர்கள் இப்படுகொலையை தற்செயலாக விபத்து எனக் கூறிவருவதுடன், எந்தவித அனுதாபத்தையும் வெளியிட மறுத்தனர். இந்நிலையில் கூட்டுக் கொள்ளப்ப்ட அடுத்த நாள் அவ்விடத்தில் 500 பேர் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இப்போராடட நடவடிக்கையானது, ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையால் பெருகிக் கொண்டே இருந்தது. இறுதி நாளன்று மாசெய்யில் மட்டும் 20 ஆயிரம் பேர் அப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.


தேசிய முன்னணியைத் தடைசெய்யக் கோரி நடந்த இந்த போராட்டம் பிரான்சின் பல பாகங்களிலும் உணர்வூப+ர்மாக நடத்தப்பட்டது. வளர்ந்து வரும் இந்த நாசிகள் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிகளுடாகவே ஆட்சிக்கு வரவும், மூன்றாம் உலக யுத்தத்தை நடத்தவும் தீவிரமாக முனநை;தவாறே உள்ளனர். இவற்றைத் தடுத்து நிறுத்த மாற்று அரசிசயல் சக்திகள் புரட்சிகர வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும், இன்று புரட்சிகர சக்திகளைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாத சீரழிந்த நிலையில், மூன்றாம் உலகப் போரின் அழிவின் விளிம்புக்கு உலகம் உருட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பாக்கிஸ்தானைச் சேர்ந்த சாலாமத் மாசிக் என்ற 14வயது சிறுவனுக்கு “இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுப்படுத்தி விட்டான்” என்ற குற்றச்சாட்டின் பேரில் “ஷரியத்” சட்டப்படி மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களின் முன்பு இச்சிறுவன் மசூதியொன்றின் சுவற்றில் மதத்தை இழிவுப்படுத்தும் வாசகங்களை எழுதியதாக மதகுருமார் இச் சிறுவன் மீது குற்றஞ் சுமத்தியதை அடுத்து இவ் வழக்குத் தொடரப்பட்டது. “அச் சிறுவன் எழுதப் படிக்கத் தெரியாதவன்” என்ற எதிர்க்கடசி வக்கீலின் வாதத்தை தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்டு கொள்ளவேயில்லை.
நன்றி – புதிய ஜநாயகம்.

செயற்கைக் கோள் உதவியினை மட்டுமே கொண்டுகுறி தப்பாது தாக்கக் கூடிய நவீன வகை குண்டுகளையும், போர்க்களத்தில் எதிரிப்படை வீரர்களைக் காயப்படுத்தாது கண்களை மட்டுமே குருடாக்கக் கூடிய “லேசர்” து;பாக்கிகளையும் அமெரிக்கா தயாரிக்கிறது. மேலும் ஈராக்கைத் தாக்கி அழித்ததைப் போன்ற நவீன மின்னணுவியல் போர்ச் சாதனங்களை வரும் பத்தாண்டுகளில் இன்னும் அதிக அளிவல் தயாரித்துக் குவிப்பதற்கான திட்டம் ஒன்றையும் அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரித்திருக்கிறது. “பனிப்போர் சகாப்தம் முடிந்துவிட்டது: இனி அமைதி” எனக் கூத்தாடியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஆடு மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைபோல பிஞ்சுக் குழந்தைகளை ஏற்றுமதி செய்யும் வியாபாரம்  இப்போது கொடிக்கட்டிப்பறக்கிறது. கடந்த பத்து வருடத்தில் ;11,862 குழந்தைகள் இவ்வாறு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செயள்யப்பட்டுள்ளனர். மேலைநாடடுத் தம்பதிகளால் தத்தெடுத்துக் கொள்ளப்படும் இக்குழந்தைகள் ஏறத்தாள 5000 டொலர்களுக்கு இலங்கைத் தாய்மார்களால் விற்கப்பட்டுள்ளனர். பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தையை விற்குமளவுக்கு இலங்கைத் தாய்மார்களைப் பிடித்துள்ள வறுமையின் அவலத்தையும், மேலைநாடுகளில் பெருகிவரும் இனவெறியின் காரணமாக இக் குழந்தைகளின் எதிர் காலத்தையும் எண்ணும்போது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.
(நன்றி – புதிய ஜனநாயகம்)

இலங்கை மொத்த சனத்தொகையான ஒரு கோடியே 75 லட்சத்தில், ஒரு கோடியே 19 லட்சம் பேர் அதாவது மொத்த சனத்தொகையில் 68 சதவிகிதம் போரின் நிமித்தம் வறுமையில் வாடுகின்றனர்.


தேசிய இனப் போருக்கு ஒரு நிமிடத்தில் 41 லட்சம் ரூபாய்களைச் செலவு செய்யும் இலங்கை இனவெறி அரசு, விரல் விட்டு எஎண்ணக்கூடிய கொழுத்த தரகர்கள் இசைவாக நாட்டைக் கொள்ளையிடுவதற்கு வழிவிட்டுள்ளத. யுத்தத்திற்கு பெரும் பணத்தைத் தாரைவார்த்து வரும் இவ்வரசு மக்களை மேலும் பிழிந்தெடுத்து இருக்கும் கந்தலைக் கூட இழுத்துப் பறித்துவிட முயன்று வருகிறது. பேச்சுவார்த்தைகள், சமாதானம் என்கின்ற கவர்ச்சியான வார்த்கைளினூடாக மக்களின் கொதிப்புக்களை அடக்கி தமது முகமூடிக் கொள்ளைகளை இலகுவாக நடாத்தியும் வருகின்றது.

டென்மார்க் தலைநகர் ஹோபன் ஹாகனில் மார்ச் 6 முதல் 12 வரை நடந்த சர்வதேச மாநாட்டில் மூன்று முக்கிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. வறுமை, வேலையின்மை, சமுதாயச் சிதைவு என்பவைகளை ஐக்கிய நாட்டு சபை இன்றைய காலத்தின் மையப்பிரச்சினை எனக் கூறி விவாதித்தன. இவ் விவாத நடவடிக்கையில் அதில் கலந்து கொண்ட சில பெண் பிரதிநிதிகள் வறுமைபற்றி அர்த்தமற்ற போலித்தனத்தைக் கண்டித்து போராடினர். இந்நிலையில் ஐ.நா சபை தயாரித்த அறிக்கையின் சில பகுதிகளை புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டது. அதிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றோம்.
(சமர் ஆர்.கு)

சோவியத் ய+னியன் கடைசி அதிபர் கொப்பசேவ் தற்போதைய ஜனாதிபதி ஜெல்சினைப பற்றிக் கூறும்போது தனது பதவிக் காலத்தில் “ஜெல்சினை பாலைவன ஆராய்ச்சி பற்றி படிக்க அனுப்பியிருக்க வேண்டும். அதனைச் செய்யாதது தான் செய்த பிழை” எனக் கூறியுள்ளார்.

பலகோடி பெறுமதியான ஊழல்களும், லஞ்சங்களும் அம்பலப்பட்டுப் போனதால் இந்திய ஜனநாயகம் நாற்றமெடுக்கின்றது. காஸ்மீரில் போராடும் பாக்கிஸ்தான் சார்பு ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொடுத்த இருவரை சிபிஐ கைதுசெய்தது. இதைத் தொடர்ந்து மேலும் இருவரை சிபிஐ கைது செய்து ‘தடாவின்’ கீழ் சிறையில் தள்ளியது.

சுவீஸ்சில் இருந்து ஆர்ப்பாட்டமாக வெளி வந்து கொண்டிருந்த மனிதம் பத்திரிகை தனது 30ஆவது இதழ்களுடன் வெளிவராது என்ற அறிவித்தலுடன் நின்று போனது. இதற்கு முன்னரே மனிதத்தின் முரண்பாடுகள் தொடர்பான சில செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தபோதிலும், மனிதம் தனது 30ஆவது இதழில் இதற்கான சில காரணங்களை முன் வைத்திருந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE