Language Selection

பி.இரயாகரன் - சமர்

அண்மையில் உலகெங்கும் பால் குடிக்கும் பிள்ளையார் பற்றிய கதைகள் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, ரெலிபோன் என அனைத்தையும் நிறைத்திருந்தன. பலகோடி விரயமான சொத்து இழப்புக்குப் பின்னும் சில சாதாரண விஞ்ஞான உண்மைகளைக் கூட காணமுடியாத படித்த காச்சட்டை பேட்ட முட்டாள்கள் பால்போத்தல்களுடன் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நின்றதை என்னென்று சொல்ல.

மணலாறு வெலிஓயாவில் இராணுவம் புலிகளைச் சற்றி வளைத்து கொலை செய்திருந்த செய்தி யாவரும் அறிந்த ஒன்றே. இதில் கொல்லப்பட்ட பலரும் பெண் புலிகளே. இப் பெண்களின் உடல்களை இராணுவ ஆணாதிக்க வெறியர்கள் நிர்வாணம் ஆக்கியதுடன், அவ்வுடல்களை நிர்வாணமாகவே மக்கள் பார்வைக்கு முன்வைத்திருந்தனர்.

இவைகளை உலக, உள்நாடடுத் தொலைக்காட்சிச் சேவைகள் பச்சையாக நிர்வாணமாகவே ஒளிபரப்பியிருந்தன. வக்கிரம் பிடித்த ஆணாதிக்க உணர்வுகள்,பெண்கள் இறந்த பின்பும் கூட தனது கோர வெறியாட்டத்தை நிகழ்த்துவதை நாம் காணமுடியும். இவ் ஆணாதிக்க உணர்வு சிங்கள பேரினவாத நோக்கில் மலினப்பட்டு, சிங்கள மக்களின் மனங்களில் நிர்வாணமான ஒரு பேரினவாதச் செய்தியை ஆணாதிக்க நோக்கிலும் பறைசாற்றியுள்ளது.

பிரான்சின் அரசு சார்புத் தொழிலாளர்களுக்கு அடுத்த வருடம் எந்தவித சம்பள உயர்வும் வழங்கப்படமாட்டாது என வலதுசாரி அரசு அறிவித்த பின் 10.10.95ல் 50 லட்சம் பேர் கொண்ட மாபெரும் பொது வேலை நிறுத்தமொன்றை தொழிலாளர்கள் நடத்தினர். தொடர்ந்தும் புதிய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிய முடிகிறது.

சிவப்பு கொடியை ஆட்டியபடி மா-லெ கூறியபடி முதலாளித்துவத்தை மீட்டு எடுத்த சீன முதலாளிகள் சொந்த மக்களையே சுரண்டி, அடக்கி ஆண்டனர்.

இதன் வெடிப்பாக சீன மாணர்கள் கிளர்ந்து எழுந்தனர். 1989ல் தினமென சதுக்கத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் தலைமை தாங்கியவர்களில் 9 பேருக்கு போராட்டத்தில் நீண்ட சிறைத் தண்டனைகளை மார்கழி 17ம் திகதி சீன அரசு வழங்கியது.

மக்களைச் சுரண்டி, மக்களை அடக்கி ஆளும் சீன முதலாளிகள் சிவப்புக் கொடியை ஆட்டியபடி மக்களை அடக்கி கொன்று குவித்தனர். ஒரு சோவியத், ஒரு சீனா எல்லாம் நிறம் மாறி இன்று உலக எகாதிபத்தியங்களுக்கு சேவகம் செய்து வருகின்றன.

இரண்டாம் உலக போரில் கிட்டத்தட்ட 2 லட்சம் பெண்களை நிரந்தர விலைமாதர்களாக தனது இராணுவத்தினருக்காக பாடி வீட்டில் வைத்திருந்ததை முதன் முiறாக ஒப்பக் கொண்டுள்ள ஜப்பான் எகாதிபத்தியம். இப் பெண்களில் மிகப் பெரும்பாலோனோர் அச் சமயத்தில் ஜப்பானில் காலனி நாடாக இருந்த கொரியப் பெண்களே ஆவர். பலரையும் கட்டாயப்படுத்தி அடக்கு முறையின் மூலமே இதில் ஈடுபடுத்தி உள்ளது ஜப்பான். ஆனாலும் இன்று ஜப்பான் முழுப் பொறுப்பையும் தானே எற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் பாதி உண்மைகளை மறைத்துவிட படாதுபாடு படுகின்றது ஜப்பான் என்று கொரியப் பெண்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நேர்முகத் தேர்வு செய்யப்பட்ட 17 வயதுடைய 50 இளைஞர்களில் 90 சத வகிதத்தினருக்கு இங்கிலாந்தை உலக வரைபடத்தில் சரியாகக் காட்டத் தெரியாது. 45 சத விகிதத்தினருக்கு போஸ்னியா எங்கிருக்கிறது என்றே தெரியாது. தனது நாட்டின் வரலாறு பற்றியும், 2ம் உலகப் போர் பற்றியும் 60சத விகிதத்தினருக்குத் தெரியாது. இவையெல்லாம் பின்தங்கிய நாடுகளிலுள்ள இளைஞர்களிடம் கேட்கப்பட்டவை 98சத விகித இளைஞர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த ஒரே விசயம் மதுவைப் பற்றியது தான்.

நன்றி – புதிஜனநாயகம்

உலகில் ஜனநாயகத்தை அமுல்படுத்தும் ஏகாதிபத்தியங்கள் எப்பொழுதும் தமது நலன்களை முன் நிறுத்தி இதை ஒரு கூச்சலாக்கி உள்ளனர். இந்த ஜனநாயகம் என்பது எப்பொழுதும் மக்களைப் பலியிடுவதே.

1 “எல்லா மார்க்சிய வாதிகளையும் மார்க்சிசத்தின் தத்துவ அடிப்படைகளையும் ஆதார வரையறுப்பக்களையும் பாதுகாப்பதற்காக அணிதிரட்டுவதைக் காட்டிலும் முக்கியமானது எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் மார்க்சிசத்தில் பல வகைப்பட்ட” “சகபிரயாணி” களிடையே முதலாளித்துவ செல்வாக்கு பரவியுள்ளதால் எதிரெதிரான திசைகளில் இருந்து இவை திரித்துப் புரட்டப்படுகின்றன. …… பலர் இப்பொழுது தான்முதற் தடைவையாக உண்மையான முறையிலே மார்க்சியத்தைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். இது சம்பந்தமாக முதலாளித்துவ பத்திரிகைகள் என்றையும் விட அதிகமாக பொய்யான கருத்துக்களை சிருஷ்டித்தும், மிக விரிவாகப் பரப்பியும் வருகின்றன. இந்த நிலைமைகளிலே மார்க்சியவாதிகளின் அணிகளிலே ஏற்படும்  சிதைவு தவிர்க்க முடியாதது என்பதற்குரிய காரணங்களைப் புரிந்து கொள்வதும், இச் சிதைவை எதிர்த்து முரணின்றிப் போராடுவதற்காக அணிகளைத் திரட்டி ஒன்று சேர்ப்பதும் மார்க்சிய வாதிகளுடைய இந் நாளைய கடமையயாகும்.

ஓர் அமெரிக்க டொலர் கட்டணமாக செலுத்தினால் ஒரு நிமிடம் வரை தொலைபேசியில் பாலுணர்வு வக்ரங்களை எதிர்முனையிலுள்ள பெண் கூறக் கேட்கலாம். பல தனியார் கம்பனிகள் கடுமையான போட்டியின் ஊடே வருடம் ஒன்றுக்கு 12,000 கோடி ரூபாய் வருமானம் பெற்றுத் தரும் தொழிலாக இந்த வக்கிர வியாபாரம் தற்பொழுது அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது. குடியேறிய இந்தியர்களும் இத் தொழிலில் உண்டு. ஐப்பானிலோ பயன்படுது;தப்பட்ட பெண்களின் உள் ஆடைகளையும், பாலுணர்வு ஆபாச புகைப்படங்களையும் விற்கும் நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருத்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகளின் அருகிலேயே இதற்கான கடைகள் திறக்கப்பட்டு வருவதுடன், 15ல் இருந்து 20 வயதுக்கு உள்ளான மாணவ – மாணவிகள் தான் இச் சீரழிவுக்கு முதற் பலி ஆகுகின்றனர்.

நன்றி – புதிய ஜனநாயகம்

இன்று உலகில் எழுச்சி பெற்று வீறுநடை போட்டுவரும் மெக்சிக்கோ புரட்சியாளர்களை கண்டு முதலாளித்துவ அறிவு ஜீவிகள் அலறத் தொடங்கியுள்ளார்கள் எந்த நேரமும் மெக்சிக்கோவில் எதுவும் நடக்கலாம் எனப் பீதுp உறைய ஓலமிடத் தொடங்கியுள்ளனர். இங்கு எழுந்து வரும் எழுச்சி, அன்று காலனியாதிக்க வெள்ளை இன வெறியர்களின் இரத்தப் படுகொலை ஆட்சியை தெளிவாக அம்பலப்படுத்தும் ப+ர்வ குடி இந்தியர்கள் தங்கள் சொந்த மண்ணை மீட்டெடுப்பர்.

அழகியல் என்பது எப்பொழுதும் ஒரு வர்க்கம் சார்ந்தே இயங்குகின்றது. அழகியலை பாட்டாளியும், முதலாளியும் பயன்படுத்த முடியும். ஆனால் பாட்டாளி வர்க்கம் தனது சொந்தப் படைப்புகளில், தெளிவான நிலையில், அதாவது பொருளாதார அடிக்கட்டு மானம் மீதான விமர்சனத்தின் மீது மட்டுமே அழகியில் அதற்கு சேவை செய்யும். இல்லாத எல்லா அழிகயற் Nhகட்பாடும இந்த ப+ர்சுவா சமுதாய நலன்களையே பெறும். நாம் இதை நடைமுறை ரீதியாகப் பார்ப்போம். எங்கள மண்ணில் நாம் அதிகளவு கடற்கரையைச் சொந்தமாகக் கொண்டவர்கள். அதற்குச் சென்றுவர பெரிய செலவும் கூடக் கிடையாது. ஆனால், நாம் ஒரு கடற்கரைக் காட்சியை, அதில் களித்தல் என அனைத்தையும் செய்தவர்கள் அல்லர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE