Language Selection

பி.இரயாகரன் - சமர்

சட்டம், நீதி, ஒழுங்கு என்பது, மக்கள் சார்ந்ததல்ல, அதிகாரம், பணப்பலம், செல்வாக்கு முதல் வர்க்கம், இனம், அரசியல் என்பதற்கு உட்பட்டது என்பதையே, இந்த நிகழ்வு மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

அண்மையில் வெளியாகிய செய்தி ஒன்று "வவுனியா அருணாச்சலம் முகாமில் தங்கியிருந்தபோது இராணுவத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த இராணுவவீரர் ஒருவர் என்னுடன் உடலுறவு கொள்ளுமாறும் இல்லையெனில் எனது குடும்பத்தையே அழித்து விடுவேன் எனவும் என்னைப் பயமுறுத்தினார். புலனாய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிந்ததால் நான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டியநிலை ஏற்பட்டது." இப்படி திருமணமாகாத 20 வயது பெண் எப்படி குழந்தைக்கு தாயானாள் என்ற சமூகக் கண்காணிப்பு பொதுத் தளத்தில் தான், நடந்த கொடுமை வெளிவருகின்றது. அந்தப் பெண் "அந்தக் குழந்தையை வளர்க்க தனக்கு விருப்பமில்லையென்றும் அதனைச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விரும்புவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்துக்கும் அப்பெண் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்த" போது இந்தச் சம்பவம் வெளி உலகுக்கு முன் வருகின்றது. இதற்கு முன் இதை தெரிந்திருந்தும்,  சொல்ல முடியாது. நடந்ததைச் சொல்லச் சாட்சியங்கள் இருப்பதில்லை. சொன்னால் அதை அவர் நிறுவவேண்டும், இல்லையென்றால் தண்டனை.

புலிகளின் "தமிழீழத்தாகம்" உண்மையானது என்றால், அந்த இலட்சியத்தின் பெயரில் அணிந்த சயனைட்டை குடித்து மரணித்திருக்கவேண்டும். மாறாக அதன் தலைவர்கள் சரணடைந்தார்கள். புலிகளின் மொழியில் இது துரோகம். இப்படிப்பட்ட இவர்கள் வழிநடத்திய போராட்டம் உண்மையானதா!? நேர்மையானதா!? சொல்லுங்கள். இங்கு நாம் புலிகளின் கீழ் இருந்தவர்கள் குறித்துப் பேசவில்லை. புலித் தலைவர்கள் குறித்து தான் இங்கு பேசுகின்றோம். தங்கள் இலட்சியத்தின் பெயரில் அணிந்த சயனைட்டை குடித்து மரணிக்காது சரணடைந்த கூட்டம் தான், இந்தப் போராட்டத்தையும் அழித்தது. "பல்லாயிரம் போராளி" களின் "உயிர்களைத் தியாகம்" செய்ய வைத்ததன் மூலம் தங்களைக் காப்பாற்றியது. தங்களைப் பாதுகாக்க, மக்களை பலியிட்டது. இந்தக் கூட்டமா "போராடும் குரலை உன்னதமாகக் காட்டிய"து? இவர்கள் பின் கட்டமைத்த அனைத்தும் பொய்யானது. தன்னை தியாகம் செய்யத் தயாரற்ற கூட்டம், மற்றவன் தியாகத்தை காட்டி நக்கிய கூட்டம், தன் உயிரை பாதுகாக்க சரணடைந்தது. இது நடத்திய போராட்டம், எப்படித்தான் வெற்றிபெறும்.

சரத்பொன்சேகாவை தன் அதிகாரங்கள் மூலம் தண்டித்து ஒடுக்க முனைந்தவர்கள், அதனாலும் மூக்குடைபடுகின்றனர். இது செயல்பூர்வமான, எதிர்ப்பு அரசியலை உருவாக்குகின்றது.  இதற்கு அடிப்படையாக இருப்பது, விட்டுக் கொடுக்காத உறுதியுடன் மகிந்தாவை எதிர்கொள்ளும் சரத்பொன்சேகாவின் உறுதியான நிலை. கைது, அவமானப்படுத்தல், உரிமைகளைப் பறித்தல், சிறை என்று தொடரும் அரச அடக்குமுறைகளை ஆளும் பாசிச வர்க்கம் அவர் மேல் ஏவுவதுடன், அதை வன்மம் கொண்டு திணித்தும் வருகின்றது. அது பாசிசத்தின் தன்மையையும், அதன் அரசியல் குணாம்சத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு எதிரான சரத்பொன்சேகாவின் விட்டுக்கொடுக்காத போராட்டம் அரசை தனிமைப்படுத்தி, அவர்களையே அதிரவைக்கின்றது. 

இப்படி கூறுபவர்கள், ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தவா, இப்படிக் கூறுகின்றனர்!? வர்க்கப் போராட்டத்தை நடத்தத்தான், அவர்கள் இதைக் கூறுகின்றனர் என்றால், எப்படி? அவர்கள் என்ன செய்ய முனைகின்றனர்? இந்த வகையில்தான் இதை நாம் ஆராய முடியும்.

அரசியல்ரீதியாக உயிரிலுள்ள மார்க்சியத்தை உயிரற்ற மார்க்சியமாக்கிவர்களின் அரசியல் யோக்கியத்தை  நாம் அம்பலப்படுத்தும் போது, அதை எதிர்கொள்ள முடியாத கூட்டம் தான் இதை எமக்கு எதிராக கூறுகின்றது. இந்த வகையில் தேசியத்தை புலிக்கு பின் அழித்த  தமிழ்தேசியவாதிகளும், இதைத்தான் எமக்கு எதிராக கூறுகின்றனர்.

கட்டைப் பஞ்சாயத்து மூலம் பணம் அறவிட்டவர்கள், அதை தங்கள் சுயவாக்கு மூலமாக நியாயப்படுத்தியவர்கள், தங்கள் செயலை நியாயப்படுத்த ம.க.இ.க. ஊடாக எம்மை விசாரணைக்கு அழைக்கின்றனர். ஒரு விசித்திரமான அரசியல் வழக்கு. சம்பந்தப்பட்ட இருதரப்பும், தங்கள் சார்பாக தமது தரப்பு வாக்குமூலங்களைக் கொடுத்திருக்கின்றது. அப்படி உண்மைகள் இருக்க, இல்லை அதை நீங்கள் நிறுவ வேண்டும் என்கின்றது மகஇக.

"விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்" உங்களைப்போன்ற  அனைத்துத் தரப்பும் வீதியில் இறங்கி கோரிய போது, நாங்கள் மட்டும் விதிவிலக்காக மாறுபட்ட கோசத்தை முன்வைத்து அதைக் கோரினோம். இதன் மூலம் தான் இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்று கூறினோம்;. இதுவல்லாத உங்கள் கோசம் மக்கள் மற்றும் புலியின் அழிவைத் தவிர, வேறு எதையும் பெற்றுத்தராது என்ற உண்மையினை நாம் மட்டும் சொன்னோம்.   

400 வருடமாக இருந்த பாபர் மசூதியை இடித்து, மூஸ்லீம் மக்களைக் கொன்று குவித்த செயலை சரி என்கின்றது இந்திய நீதிமன்றம். சட்டம் அதைத்தான் சொல்லுகின்றதாம். அதாவது 400 வருடத்துக்கு முன் இதில் மசூதி இருக்கவில்லை, எனவே இடித்தது சரி. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மூலம் இடிக்க வேண்டியதை, இந்து வானரக் கூட்டம் சட்டத்தை கையில் எடுத்து செய்தது சரியானது என்பதுதான் தீர்ப்பின் உள்ளடக்கம். 400 வருடத்துக்கு முன் சென்ற வரலாற்றை இந்து பாசிச கும்பலின் ரவுடிக் கும்பலாக மாறி புரட்டியுள்ளது. 

அனைத்துவித உண்மைகளையும் புதைத்து விடும் போது, பொய்கள் அரசியலாகிவிடுகின்றது. சரியான நேர்மையான தரவுகள் தான், உண்மையை பகுத்தாய உதவுகின்றது. இதை யார்தான் செய்தனர், செய்கின்றனர். நடந்து முடிந்ததைக் பற்றி முழுமையான பகுத்தாய்வு  இன்றி புதிய அரசியல் வழிமுறையை படைக்க முடியாது. மே 16ம் திகதி புலிகள் சரணடைந்ததன் பின்னான அரசியல், எந்தவிதத்திலும் எங்கும் நடந்ததை பற்றிய சுய விமர்சனமுமின்றி தான் அரசியலில் தாளம் போடுகின்றனர்.

"எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை", அதனால் "எப்படியாவது" என்று கூறி, அனைத்தையும் சொந்த மக்கள் மேல் திணித்தவர்கள் தான் இந்தச் தீபச்செல்வன்கள். அதைத்தான் இங்கு தீபச்செல்வன் மறுபடியும் நியாயப்படுத்துகின்றார். இப்படி இவர்கள் வேறு "வழிதெரியவில்லை" "எப்படியாவது" என்று கூறி ஏற்படுத்திய சமூக விளைவை, கவிதை இலக்கியம் என்று எந்தக் கூச்சமுமின்றி அதை அரசியலாக்குகின்றனர். இதைத்தான்  காலாகாலமாக புலிகள் செய்து வந்தனர்.

நடந்ததை மூடிமறைக்கும் வரை, சமூகம் இருட்டில் தத்தளிக்கும். பொய்யர்களும், புரட்டுப் பேர் வழிகளும், மக்கள் மேல் சவாரி செய்வார்கள். சமூகம் தனக்காக போராடும் என்பதை, கனவிலும்; நினைத்து பார்க்க முடியாது. இந்த பாதையில் தான் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்ந்து புளுத்து சமூகத்துக்கு நஞ்சிடுகின்றது. இதை மாற்ற வேண்டும் என்றால் புலிகள் விமர்சிக்கப்படவேண்டும். இதை அரசியல் ரீதியாக செய்வதை விரும்பததால், எம்மை எங்கும் இருட்டடிப்பு செய்கின்றனர்.    

தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிரான மனிதவுரிமைச் சட்டங்கள் அனைத்தும், குப்பையில் போட வேண்டும். நீதி, சட்டம், ஒழுங்கு எவையும், மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு கிடையாது. இதை கடைப்பிடிக்கும்படி  யாரும் கோர முடியாது. அதை அரசுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. அதை நாம் அனுமதிப்பதில்லை. அதை மீறினால் கொல்லப்படுவார்கள். இலங்கையில் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களாகிய நாங்கள் நடைமுறைப்படுத்தும், ஜனநாயகம் இதுதான். தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக மனிதவுரிமை சட்டத்தை எம் நாட்டில் அமுல்படுத்திட முடியாது என்று ஆட்டம் போடும் பாசிட்டுகள், அதை உலக அரங்கில் எழுப்பியதுடன் அதை உலகம் தளுவியதாக அமுல்படுத்தக் கோருகின்றனர். மகிந்த ஐ.நாவில் ஆற்றிய உரையில் "போர்கள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்த சர்வதேசச் சட்டங்களில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாக" கூறுகின்றார். சர்வதேச சட்டத்தில் இருக்கக் கூடிய மனிதவுரிமைகளை கூட, இல்லாதாக்க கோருகின்றார். மக்களைக் கொன்று குவித்து ஆட்டம் போட்ட எங்களைப் போன்ற  பாசிட்டுகளை, மனிதவுரிமைச் சட்டத்தின் முன் நிறுத்தக் கூடாது என்று சொல்லுகின்றனர். ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதத்தை" ஒழித்துக் கட்டியவர்கள். அதற்காக "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்."  

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE