Language Selection

பி.இரயாகரன் - சமர்

உண்மைகள் என்பது நேர்மையான மக்கள் சார்ந்த அரசியலில் இருக்கின்றது. எம் மக்களுக்கு எதிரி செய்த கொடுமைகளைப் பேசுவதன் மூலம், மறுபக்க உண்மைகளை மூடிமறைக்கவே வலதுசாரியம் எப்போதும் முனைகின்றது. இப்படி எதிரி செய்த கொடுமைகளை, தாங்கள் செய்த கொடுமைகளை மூடிமறைப்பதற்காக பயன்படுத்துகின்றது. இது திட்டமிட்ட மக்கள் விரோத சதி அரசியலாகும். இந்த அரசியலோ மனித நேயமற்ற இழிவரசியலாகும். இவை மக்கள் மேலான மறுபக்க கொடுமைகளை, நியாயப்படுத்துவதாகும்.

யுத்தத்தின் பின் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தொடர் இனவொடுமுறை என்பது, மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. மறுபக்கத்தில் அனைத்தையும் இனவாத சாயம் பூசி, விடுகின்ற தமிழ் இடதுசாரிய அரசியலும் அரங்கேறுகின்றது. யார் அதிகம் இனவாதம் பேசி தமிழ்மக்களைக் கவருவது என்ற போட்டியில் வலதுகளும் இடதுகளும் ஈடுபடுகின்றனர். முன்பு புலிகள் செய்ததையே, இன்று பழைய இடதுசாரிய பெருச்சாளிகள் செய்கின்றனர். தமிழ் இனவாதத்தை உயர்த்துவதன் மூலம், புலிகளை நிரவ முடியும் என்பதுதான் இன்றைய இடதுசாரிய அரசியலாக உள்ளது. சொந்த இடதுசாரிய கருத்துகள் மூலம், வலதுசாரியத்தை வெல்ல முடியாது என்பது இடதுசாரி அரசியல் திரிபாகும். இனவாதத்தைக் கக்குவதன் மூலம், வலதுசாரியத்தை தமதாக்க முடியும் என்பதே, இன்றைய இடது தமிழ்தேசியமாக மாறிவருகின்றது.

நாம் ஏன் தோற்றோம் என்பதை அரசியல்ரீதியாக சுயவிமர்சனம் செய்யாது இருக்கும் வலதுசாரியம், அதை திசைதிருப்ப முனைகின்றது. தோல்விக்கான காரணத்தை எதிரி மீது கூறி, மக்களை தொடர்ந்தும் தனக்கு கீழாக தோற்கடிக்க முனைகின்றது. தீபச்செல்வன் அதை மிக நுட்பமாகவே முன்வைக்கின்றார். "தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போராட்ட அமைப்புமீது உலகில் வல்லமையுள்ள யுத்தவெறி கொண்ட பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்ட எத்தனையோ நாடுகள் தாக்குதல் நடத்தின. அரசாங்கம் புலிகளை அழிப்போம், யுத்தத்தை முடிப்போம், இடங்களைக் கைப்பற்றுவோம் என்று சில தேதிகளை குறிப்பிட்டது. அந்த அவகாசங்களைப் புலிகள் முறியடித்தார்கள். உலகமே சேர்ந்து தொடுத்த யுத்தத்திற்கு அவர்கள் முகம் கொடுத்தார்கள்." என்கின்றார். இதனால் தான் புலிகள் தோற்றனர் என்பது, ஒரு அரசியல் உண்மையல்ல. ஒரு உண்மைக்கு எதிராக மற்றொரு உண்மையை முன் நிறுத்துகின்றனர்.

30 வருடங்களுக்கு முன் தமிழ் மண்ணில் வாழ்ந்த மக்கள், தமிழ் தேசியத்தால் வரலாறு அற்றவர்களாக போய்விடவில்லை. ஆம் 1980 களில் 10000 மேற்பட்ட சிங்கள மக்கள் யாழ்குடாவில் வாழ்ந்தார்கள். 1990 வரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்கள் யாழ் குடாவில் வாழ்ந்தார்கள். இது தமிழ்தேசியத்துக்குள் புதைந்து போன ஒரு வரலாறல்ல. அந்த மக்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றால், தமிழ்மக்களின் சொந்த இணக்கத்துடன் தான். அவர்களுக்கு இடையில் எந்த குறுகிய இனத் துவேசமும் இருக்கவில்லை. அதுதான் அவர்களை அங்கு வாழவைத்தது. இது எம்மைச் சுற்றிய கடந்த இணக்கமான ஒரு வரலாறு. யாழ்நகரில் ஒரு விகாரையும், சிங்கள மகாவித்தியாலயம் என்ற ஒரு பாடசாலையும் கூடத்தான் அங்கு இருந்தது.

மக்கள் தான் புலிகளைத் தோற்கடித்தனர் என்ற உண்மையை மறுக்க, மக்களை அரசு தோற்கடித்துவிட்டது என்ற உண்மையை கொண்டு, புலியை நியாயப்படுத்துகின்றனர். இங்கு மக்கள் புலியை தோற்கடித்ததை மறுப்பதே, தீபச்செல்வனின் இன்றைய அரசியல். உண்மைகளை மறுப்பதன் மூலம், வலதுசாரியம் தன்னைத்தான் தக்க வைக்க முனைகின்றது.   தீபச்செல்வன் கூறுகின்றார் "புலிகளைச் சிதைத்து உறங்க வைத்ததன் மூலம் மக்களைத்தான் அரசு  தோற்கடித்திருக்கிறது" என்கின்றார். இங்கு அரசு புலியைத் தோற்கடிக்கவில்லை. புலி தன்னைத்தான் தோற்கடித்தது. அதாவது மக்களுக்கு எதிரான புலி அரசியல் மூலம், புலி தன்னையே தோற்கடித்தது. மக்களைப் பார்வையாளராக்கி, ரசிகர் கூட்டமாக்கினர். புலிகள் வேறு மக்கள் வேறு என்ற இடைவெளி, அதிகாரமும் பணமும் குவிந்த போது மேலும் அகலமாகியது.  பேரினவாத அரசு இதற்குள் புகுந்து, மக்களை தன் பங்குக்கு மேலும் தனிமைப்படுத்தியபடி புலியை இலகுவாக அழித்தது. இந்த நிலைமை என்பது புலியின் சொந்த அரசியல் மூலம் உருவானது.

வலதுசாரிய தமிழ் தேசியம் எப்போதும் எதிரிக்கு ஆள்பிடித்து கொடுக்கின்றது. அதன் எதிர்ப்பு அரசியல் இதைத்தாண்டி மக்கள் சார்ந்ததல்ல. கலை கலைக்காக என்று எழுதும், எந்த சமூக உணர்வுமற்ற எழுத்தாளர் கூட்டத்தை, அரசின் பக்கம் செல்லுமாறு இன்று வலிந்து தூண்டுகின்றது. வலதுசாரி தமிழ் தேசியம், குறிப்பாக புலிகள் கடந்த காலத்தில் எதைச் செய்தனரோ, அதையே தான் அது தொடருகின்றது.

மீண்டும் மீண்டும் வரலாறு காணாத போராட்டங்கள். ஐரோப்பாவில் பிரஞ்சு தொழிலாளர் வர்க்கம் தான், மீண்டும் ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்துக்கு பாடம் நடத்துகின்றது.   நேற்று (17.10.2010) ஐந்தாவது முறையாகவும், நாடு தழுவிய அளவில் வீதி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. 30 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கியதுடன், 80 சதவீதமான மக்கள் இந்தப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அரசு எதிரியாக இருந்தால் போதுமானது என்ற தர்க்கமும், இது சார்ந்த நடைமுறைகளும்,  சந்தர்ப்பவாதத்தின் அரசியல் மூலமாகும். இப்படித்தான் புலிகள் பின் வால்பிடிக்கும் அரசியல் கட்டமைக்கப்பட்டது. புலிக்கு எதிரான அரசியல் மறுக்கப்பட்டது. மௌனமாக கைவிடப்;பட்டது.  வலது முதல் இடது வரை, தமிழ் மக்களை கைவிட்ட அரசியலே உலகம் முழுக்க பூச்சூடியது. இது இரண்டு வகைப்பட்டதாக காணப்பட்டது.

மக்களை யுத்தமுனையில் இருந்து வெளியேற்றுவதற்கான பொறுப்பு, மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றவர்களின் தார்மீகப் பொறுப்பாகும். இதைச் செய்தபடிதான் அரசுக்கு எதிராக, மக்கள் மீதான தாக்குதலுக்காக குற்றஞ்சாட்ட முடியும். யுத்தமுனையில் மக்களை பலாத்காரமாக வைத்திருப்பதையே புலிகள் செய்தனர். மக்களை யுத்தமுனையில் கட்டாயப்படுத்தி நிறுத்தி வைத்து, அவர்களை புலிகள் பலியிட்டனர். பின் அரசு அவர்களை பலியிடுவதாக கூறுவது அபத்தம். அரசு பலி கொடுக்கவில்லை பலியெடுத்தது. மக்கள் விரும்பி தாமாக பலியெடுக்கும் யுத்தமுனையில் இருக்கவில்லை. மக்கள் வெளியேற புலிகள் அனுமதித்திருக்கவில்லை.

பெண்களின் ஒழுக்கம், பண்பாட்டை முன்னிறுத்திய யாழ் உயர்குடி தமிழ் சமூகம், இன்று பெண்களையே நுகர்வுப்பண்டமாக்கி நாலு காலில் நின்று நுகருகின்றது.  பல்கலைக்கழக மாணவிகள் முதல் சிறு குழந்தைகள் வரை இந்த உயர் மேட்டுக்குடியின் நுகர்வு வெறியில் இருந்து தப்பிப் பிழைக்கவில்லை.

தியாகம் செய்து போராடக் கூறிய கூட்டம், தன்னைத் தியாகம் செய்யவில்லை. மாறாக இந்த கூட்டம் சரணடைந்தது. மக்களை பலிகொடுத்து தன்னை காப்பாற்ற முனைந்த கூட்டம், இறுதியில் போராடி மடியவில்லை. மாறாக சரணடைந்தது. இப்படி இந்தக் கூட்டம் தலைமை தாங்கிய போராட்டம் அழிந்து போனது தற்செயலானதல்ல. அங்கு உண்மை, நேர்மை, வீரம், தியாகம் என எதுவும் இருக்கவில்லை.   

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE