Language Selection

பி.இரயாகரன் - சமர்

உயிருடன் உள்ள கொலைகாரர்கள் தங்கள் பங்கை மூடிமறைத்தபடி, செத்தவர்களின் பெயரில் மட்டும் குற்றங்களைச் சுமத்தியபடி சொல்லும் வரலாற்றுக்கு பெயர் சுயவிமர்சனமாம். கொலைகாரர்கள் சுயவிமர்சனம் என்றால், தங்களை மூடிமறைத்தல் தான் என்கின்றனர். யாரெல்லாம் அன்று புளட் உட்படுகொலைகளை முன்னின்று செய்தனரோ, யாரெல்லாம் இதற்கு துணை நின்றனரோ, அவர்கள் மறுபடியும் அதை திரித்து புரட்டியதை சுயவிமர்சனம் கொண்ட வரலாறு என்கின்றனர். அன்று இவர்கள் கொன்றவர்களை மறுபடியும் கொன்று, இதற்கு எதிராக போராடியவர்களை கொச்சைப்படுத்தி எழுதும் புரட்டுத்தனம் தான், இந்த வரலாறு. இன்றைய எதிர்ப்புரட்சி அரசியலின் மகுடிகள்தான் இவர்கள்.

அன்று தீப்பொறி, கொலைகாரர்களிடம் இருந்து தப்பி தலைமறைவான பின், அவர்களை கொல்ல அலைந்த கூட்டம் தான், தங்களால் கொல்லப்பட்ட அகிலன்-செல்வன் கொலை பற்றி திரித்து கதை சொல்லுகின்றது.

மக்களின் விடுதலை, புரட்சி, மார்க்சியம்.. என்று கூறிக்கொண்டு உருவான முரண்பாடுகளும், அமைப்பு உடைவுகளும் மீண்டும் ஒருமுறை எம்மை ஏமாற்றியே வந்துள்ளது. கடந்த 23 வருடத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சார்ந்த ஒரு உண்மை, அண்மையில் தான் அம்பலமாகியது. ஆம், அன்று கிட்டுவுக்கு குண்டெறிந்தது யார் என்ற உண்மையினூடு தான். மார்க்சியம் பேசியபடி, தனிநபர் பயங்கரவாதத்தில் தீப்பொறி முடங்கிக் கிடந்த உண்மை இன்று அம்பலமாகியுள்ளது.

இதை இவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்று கூறி, இன்று வகைதொகையற்ற தாக்குதலை தீப்பொறியின் வாரிசுகள் என்று இன்று கூறுகின்றவர்கள் தொடங்கியுள்ளார்கள். தீப்பொறியின் மற்றைய முக்கிய உறுப்பினர்களை வெளியேற்றிய போது, முன்வைத்த விமர்சன ஆவணங்களைக் கூட, வரலாற்றின் முன் திட்டமிட்டு புதைத்து வைத்துள்ளனர். விமர்சனம், சுயவிமர்சனமற்ற வகையில் தங்கள் கடந்தகாலத்தை மூடிமறைத்தபடி தான், புதிய அரசியல் மோசடிகளில் மறுபடியும் ஈடுபடுகின்றது. அது தன்னை மறுபடியும் மே 18 நீட்சியாக கூறிக்கொண்டு, திடீரென அரசியலில் ஈடுபடுகின்றது. கேசவன் உட்பட சிலர் புலியால் கொல்லப்பட, முன்னணி தீப்பொறி உறுப்பினர்கள் தீப்பொறியின் தவறான அரசியலை விமர்சித்து விலகிய நிலையில், மார்க்சியத்தின் பெயரில் புலிக்கு சிவப்பு கம்பளம் விரித்தது எஞ்சிய தீப்பொறி. இறுதியில் புலியின் ஆள்காட்டி அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக செயல்பட்டு, புலியுடன் சங்கமமாகிய வரலாற்றில் காணாமல் போனது. இன்றும் தாம் தான் தொடர்ந்து தீப்பொறியின் இன்றைய வாரிசுகள் என்று கூறிக்கொண்டு, மே18 நீட்சியாக தன்னை வெளிப்படுத்தி வருகின்றது.

 

இன முரண்பாடும், முரண்பாட்டின் தன்மையும், முழுமை தளுவியதல்ல. அதாவது இலங்கை தளுவியதில்லை. வடக்கு கிழக்கு தமிழர் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக கருதுகின்ற போது, வடக்கு கிழக்கு அல்லாத பகுதிகளில் வாழும் தமிழரும் சிங்களவரும் அப்படிக் கருதவில்லை. இங்கு அவர்களின் பிரதான முரண்பாடு, வர்க்க முரண்பாடாக உள்ளது. அதேநேரம் இதே முரண்பாடு, வடக்கு கிழக்கு மக்களுக்கு அதே நிபந்தனையின் கீழ் உள்ளது. ஒரு நாட்டின் உள்ளான நிலைமை இது. அதேநேரம் வடக்கு கிழக்கு மக்களுக்குள் பிரதேச சாதிய வர்க்க முரண்பாடுகள் கூர்மையாகியுள்ளது.

இந்த நிலையில் இதை எல்லாம் மறுத்து, இன முரண்பாட்டை மட்டும் முன்னிலைப்படுத்துவது யார்? வடக்கு கிழக்கில் உள்ள சுரண்டும் வர்க்கம்தான். அவர்கள் தான் பிரிவினையை முன்வைக்கின்றனர். வடக்கு கிழக்கு மக்கள் சந்திக்கின்ற மேலதிகமான இனவொடுக்குமுறை, அந்த மக்கள் சந்திக்கின்ற வர்க்க ஒடுக்குமுறையை இல்லாததாக்கிவிடுவதில்லை. சாதிய பிரதேச முரண்பாடுகளை களைந்துவிடுவதில்லை.

பிரிவினையை முன்தள்ளும் சுரண்டும் வர்க்கம், இலங்கை தளுவிய வர்க்க முரண்பாட்டை மூடிமறைத்து, பிரிவினை மூலம் அதைப் பாதுகாத்து தன் சுரண்டும் உரிமையாக அதை மாற்றுகின்றது. இந்தப் பிரிவினைவாதத்தின் அரசியல் உள்ளடக்கம் இந்த அடிப்படையில் தான் கருக்கொள்கின்றது. ஒடுக்கும் இன சுரண்டும் வர்க்கம் தன் இன மக்களையும் சுரண்டுகின்றது என்பதையும் மறுத்து அல்லது மூடிமறைத்து, அனைத்தையும் வெறும் இன ஒடுக்குமுறையாகக் காட்டுகின்றது. இலங்கையின் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாகவும் காட்டுகின்றது. இதன் மூலம் தான் சுரண்டும் உரிமையை, முன்னிறுத்தி பாதுகாக்கின்றது.

 

இனவொடுக்குமுறைக்கு எதிரான சுயநிர்ணயம் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் (பூர்சுவா வர்க்கத்தின்) பிரிவினையையோ, ஐக்கியத்தையோ குறிப்பதில்லை. அதனால்தான் அதை சுயநிர்ணய கோட்பாடாக மார்க்சியம் முன்வைக்கின்றது. இதன் வர்க்க சாரம், சுரண்டும் வர்க்க பிரிவினையையும், ஐக்கியத்தையும் மறுக்கின்றது.

சுரண்டும் வர்க்க பிரிவினையையும், ஐக்கியத்தையும் மறுக்கும் சுயநிர்ணயம், பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கோருகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் பிரிவினையையல்ல. இது சர்வதேசியத்தின் உள்ளார்ந்த அரசியல் ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது. இப்படியிருக்க ஒடுக்கப்பட்ட இரண்டு இன வர்க்கங்களுக்குள் பிளவை விதைப்பது, அதை நியாயப்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசியலல்ல. அது மார்க்சியமுமல்ல. பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை மறுப்பது என்பது, மார்க்சியத்தின் பெயரிலும், இடதுசாரியத்தின் பெயரிலும்; சுரண்டும் வர்க்கம் தன்னை மூடிமறைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை பிளக்கும் பிளவுவாதமாகும். இந்த பிளவுவாதம் தான் "தேசிய விடுதலைக்கான, தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முதன்மையானது" என்று கூறுகின்றது. இனங்கள் மத்தியில் பிளவுவாதத்தை முன்தள்ளிய சுரண்டும் வர்க்கத்தின் ஒடுக்கும் அதே அரசியலை, மீள முன்னெடுத்து பிளவுவாதத்தை அகலமாக்குவதாகும்;. இதற்கு எதிரான போராட்டத்தை மறுத்தலாகும்.

இன்று இலங்கையில் வடக்கு மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் பல. அதை யாரும் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை. இலங்கை அரசோ இதைப் பயன்படுத்தி இதில் குளிர் காய்கின்றது. வடக்கு மீனவர்களின் இன்றைய நிலை என்ன?

1.தங்கள் சொந்தக் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடிவதில்லை.

1.1.அந்த வகையில் இலங்கை அரசு இராணுவ மற்றும் கடற்படையின் கெடுபிடி

1.2.இந்தியா றோலர்களின் அழிவுகரமான மீன்பிடி முறைமையும், நூற்றுக்கணக்கில் இலங்கையின் வடக்குக் கரையில் படையெடுத்து ஆக்கிரமித்து நிற்கும் முறைமையும்

2.வடக்கு மீனவர்கள் யுத்தத்தின் பின்னான சிறியளவிலான முதலீட்டைக் கொண்ட மீன்பிடி உபகரணங்களை கூட, இந்திய றோலரால் இழந்து விடுகின்ற பரிதாபம். இதன் மூலம் இலங்கைக் கடலை முழுமையாக, இந்திய அரசின் ஒத்துழைப்புடன் தமதாக்கி வருகின்றனர்.

இனவொடுக்குமுறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறைக்கும், தேசியவாதிகளின் அணுகுமுறைக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுப்பது தான், குறுகிய தேசியவாதமாகும். பாட்டாளிவர்க்கமோ இதில் இருந்து தன்னை தெளிவாக வேறுபடுத்தி நிற்கின்றது. லெனின் இதை மிகத் தெளிவாக 'எந்த ஒரு தேசியக்கோரிக்கையையும் ஒரு தேசியப்பிரிவினையையும் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்து மதிப்பிடுகின்றது." என்கின்றார். இதுவல்லாத அனைத்தும் மாக்சியமல்ல. இவை அல்லாத அனைத்தும், சுரண்டும் வர்க்கத்தின் கோட்பாடாகும்.

சோபாசக்தி ஒரு பெண்ணின் (தமிழச்சி) வாயை அடைக்க கையில் எடுத்த ஆயுதம், "நான் உன்னுடன் படுத்தேன்" என்ற கதை தான். கதையெழுதுபவராச்சே சோபாசக்தி. எல்லா ஆணாதிக்க பொறுக்கிகளும் கையாளும் அதே ஆயுதம் தான். தமிழச்சி நடந்தது என்ன என்று "சோபா சக்தி! உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை!!"என்ற கட்டுரை மூலம் பதில் அளித்துள்ளார்.

இது நடந்த காலகட்டத்தில் தமிழச்சி அவருடன் தன் உறவை முறித்தது மட்டுமின்றி, அன்று நடந்த நிகழ்வையும் தான் தாக்கியதையும் கூட எனக்குக் கூறியிருந்தார். தமிழச்சியின் இன்றைய எதிர்வினையின் உள்ளடக்கம், அன்று எனக்கு தெரிவிக்கப்பட்ட ஒரு உண்மை. இந்த நிகழ்வின் பின் தமிழச்சியின் உதிரியான எதிர்வினைகளையும், அவரின் கோபமான ஒழுங்கற்ற எதிர்த்தாக்குதலையும் தான் சோபாசக்தி தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தன் பொறுக்கித்தனத்தை சோபாசக்தியால் பாதுகாக்க முடிந்தது. இன்று ”நீ என்னுடன் இணங்கிப்படுத்தாய்” என்ற ஆணாதிக்க அயோக்கியத்தனத்தை கொண்ட கதையுடன், களத்தில் இறங்கியுள்ளார்.

இதற்கு தமிழச்சியின் பதில் போதுமானது. இதுபற்றி வேறு தோழர்களின் பதில்கள் பின்னிணைப்பில் பார்க்கவும்.

எல்லையைத் தாண்டிச் செல்வது எல்லை தெரியாததாலும், நீரோட்டத்தினாலும் தான் என்ற தர்க்கத்தை முன்தள்ளியவர்கள், விரித்த வலையை இழுத்துச்செல்லுதல் இந்தியாவில் நடப்பதுதான் என்று மற்றொரு தர்க்கத்தையும் முன்வைக்கின்றனர்.

உண்மையில் இதன் பின்னுள்ள பல வர்க்க சமூகக் கூறுகளை, இந்தத் தவறான தர்க்கங்கள் மூலம் தவிர்த்துச் செல்ல விரும்புகின்றனர். இதுவே தவறான அரசியலாக மாறுகின்றது.

1. வலையை விரித்து வைத்து மீன்பிடிக்கும் மீனவனுக்கும், வலையை இழுத்துச் செல்லும் மீனவனுக்கும் உள்ள அடிப்படையான வர்க்க முரண்பாட்டை, முதலில் இனம் காணத் தவறுகின்றனர். இது இரண்டு வர்க்கங்கள் கையாளும், வேறுபட்ட மீன்பிடி முறைமையுமாகும்.

2. இலங்கை மீன்பிடியில் மீன்வலையை இழுத்துச் செல்லும் ரோலர் வகைகள் உள்ளிட்ட மீன்பிடி முறைமை தடை செய்யப்பட்டு இருக்கின்றது. அவர்கள் வலையை விரித்து வைக்கும் மீன்பிடி முறைமையையே கையாளுகின்றனர். ஆயிரக்கணக்கில் உட்புகும் இந்திய ரோலர்கள், விரித்த வலைகளை இழுத்து செல்லும் மீன்பிடி மூலம், இலங்கை மீனவர்களின் வலைகளை அழித்துச் செல்லுகின்றனர். திரும்பி வரும்போது வள்ளத்தில் பிடித்த மீனின் பாரத்துக்கு ஏற்ப வள்ளம் கடல்நீரில் தாழப்பதிகின்ற போது, விரித்து வைத்த வலைகளை வள்ளமும் வெட்டியபடியும் திரும்புகின்றது. இப்படி இலங்கை மீனவர்களின் மீன்பிடி முறைமைக்கு எதிரான மற்றொரு மீன்பிடி முறைமை. இதனால் கூட, ஓரே கடலில் இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்க முடியாது. இதுவும் கூட அடிப்படையான முரண்பாடு. இது இரண்டு வர்க்கங்கள் கையாளும் மீன்பிடி முறைமைசார் முரண்பாடு கூட. இலங்கைக் கடலில் விரித்து வைத்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதில்லை. விரித்துவைத்து இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை நாங்களும், இலங்கை மீனவர்களும் எதிர்க்கவில்லை.

 

இவை பற்றி பல்வேறு கட்டுரைகளில் (எமது தோழர்கள் உள்ளடங்க) நாம் மிகத் தெளிவாக பதில் சொல்லியிருக்கின்றோம். இருந்தும் குறிப்பாக

1."இலங்கை இறையாண்மை என்ற போதி மூட்டையின் பின் வைத்து சொல்லுவது ஏன்?"

நாங்கள் சர்வதேசியத்தைக் கடந்து, இதை அணுகவில்லை.

1.1.வாழ்வுக்காக மீன்பிடிக்கும் தமிழக, இலங்கை (தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள) மீனவர்கள் தம் எல்லை கடந்து மீன் பிடிக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியே வருகின்றோம். எமது முந்தைய கட்டுரைகளில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

1.2.இலங்கையின் இறையாண்மை பற்றி நாம் பேசும் இடம் எப்போது என்னால், இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராகத்தான். மூலதனத்துக்காக அத்துமீறி மீன்பிடிக்கும் போக்கையும், அதை ஆதரிக்கும் அரசியல் போக்கை எதிர்த்துதான், நாம் இலங்கை மக்களின் இறையாண்மை பற்றிப் பேசியிருக்கின்றோம்;. இந்தவகையில் ஈழ தமிழினவாதிகளையும், இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்துதான், இலங்கை மக்களின் இறையாண்மைப் பற்றிப் பேசியிருக்கின்றோம்;. இந்த இடத்தில் இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் நிலை என்னவாக இருக்கின்றது என்பது இதுவரை புதிர்தான்.

2."ஒரு அடிப்படையான விசயத்தை மறந்துவிட்டு பேசுவதுதான் இவ்வாறு பார்ப்பதற்கு ஏதுவாகிறது. 40 கிலோ மீட்டரே உள்ள சிறு பிராந்தியத்தை நம்பி 2 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர் (இரு நாடுகளிலும் சேர்த்து, தோராயமாக) என்பதும் இரு நாட்டு மீனவர்களுமே பாரம்பரியமாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள் என்பதும், எல்லைகள், இறையாண்மை போன்றவையெல்லாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகான விசயம் எனப்தையும், மீன்வர்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல என்பதையும் ஏன் தோழர் ராயகரன் உள்ளிட்ட இலங்கை மார்க்ஸியர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்?"

இப்படி நாம் கூறுவதாக கூறுவது தவறானது. வாழ்வுக்காக மீன்பிடிக்கும் இந்திய இலங்கை மீனவர்களுக்கு எல்லை அவசியமில்லை. இது தான் எமது சர்வதேசிய நிலை. வாழ்வுக்காக மீன்பிடிப்பவர்கள் மீன்வளத்தை அழிப்பதில்லை. அதைப் பாதுகாத்து வாழ்பவர்கள்.

அரசியலில் திடீர் ஞானம். இது மீனவர் நலன் சார்ந்ததல்ல. மீனவர்களை ஏமாற்ற முனையும், சந்தர்ப்பவாத திருப்பம். எந்த சுயவிமர்சனமும் அல்லாத அரசியல் மோசடி.

இதை செய்வது வேறுயாருமல்ல, இதையே தொழிலாக செய்யும் இனியொரு புதியதிசையைச் சேர்ந்த நாவலன் தான். திடீரென ஒடுக்கப்பட்ட மீனவர் பக்கம் தான் நிற்பதாக, பச்சைக் கொடி காட்டுகின்றார். அறிவு மற்றவனை ஏமாற்றவும், ஏமாளியாக்கவும் தான் என்று நினைக்கின்ற அரசியல் போக்கிரித்தனம்.

அரசியல்ரீதியாக வக்கற்றவர்கள், மக்களை தலைமை தாங்க வேண்டிய அரசியலையும் பொறுப்பபையும் ஏற்காத கூட்டம், மக்களின் கிளர்ச்சியை ஏகாதிபத்திய - இராணுவ கூட்டுச்சதி என்கின்றனர். இப்படி அரசியல் ரீதியாக மக்களின் கிளர்ச்சியை கொச்சைப்படுத்துவது தான், ஏகாதிபத்திய சதி அரசியலாகும்.

மக்களின் கிளர்ச்சியை தொடர்ந்து அதிகாரம் ஏகாதிபத்திய கைக்கூலிகளிடம் மாற்றப்பட்டுவிட்டது. இது எதனால், எந்த சூழலில், யாரால் ஏற்பட்டது என்ற உண்மையை மூடிமறைக்க, இதைத் திரிக்கின்றனர். ஐயோ, இது அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய சதிப் புரட்சி என்கின்றனர். மக்கள் இந்தச் சதியில் ஈடுபடும் வண்ணம், ஏகாதிபத்தியங்கள் தான் அவர்களை இறக்கியது என்கின்றனர். இப்படி மக்கள் நடத்திய போராட்டத்தை ஏகாதிபத்திய சதி என்று கூறுகின்ற அரசியல் பித்தலாட்டங்களை முன்தள்ளுகின்றனர்.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE