Language Selection

பி.இரயாகரன் - சமர்

கம்யூனிஸ்டுகள் 10 கோடி மக்களை தனது வர்க்கப் போராட்ட பாதையில் கொன்று விட்டதாக, சோவியத் புரட்சி முதல் புரட்சிகான ஆயுதத் தயாரிப்பு நடந்த பிரதேசம் ஈறாக, இன்று ஏகாதிபத்தியம் கூட்டிக் கழித்து கணக்கு காட்டுகின்றது. ஸ்டாலின் மீதும், கம்யூனிஸ்டுகள் மீதும் வைக்கின்ற அவாதூறுக்கு தனித்தனியான ஒவ்வொரு வர்க்கப் நோக்கமும், பின்னனியும் இருந்தபோதும், அவை ஒரே இடத்தில் இருந்து தொடங்கி ஒரே இடத்தில் சங்கமிக்கின்றது. இந்த வௌ;வேறு விதமான அவதூறுக்கான மூலமாக, ஏகாதிபத்திய புள்ளிவிபரத்தை அடைப்படையாக கொள்கின்றனர். இன்று இடதுசாரி முகமுடியின் கீழும், மார்க்சியத்தை திரித்தும், திருத்தியும், சேர்த்தும், பரிசோதித்தும் வளர்ப்பதாக வேடம் போடும் இடதுசாரி போலி மார்க்சியவாதிகள், அடிப்படையில் ஸ்டாலின் எதிர்ப்பு ஊடாக அரங்கில் நுழைகின்றனர். ஸ்ராலினை பகுதியாக மறுப்பதாக, முழுமையாக மாறுப்பதாக பலவண்ணமாக ஸ்டாலின் எதிர்பாளர்கள் முன்வைக்கும், ஸ்டாலின் படுகொலைப் புள்ளி விபரங்கள் (உதாரணமாக பிரான்சில் இருந்து வெளிவரும் அம்மாவில் 15 லட்சம் போல்ஷ்சுவிக் ஸ்டாலின் 1937 இல் படு கொலை செய்தார் என்று, இடதுசாரி பெயரில் கதை அளக்கின்றனர்) ஏகாதிபத்திய புள்ளிவிபரத்தை மிஞ்சி விடுவதன் மூலம், அவதூற்றை அரசியலாக்கின்றனர்.

ஸ்ராலினுக்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர் டிராட்ஸ்கியாவர். இவர் "ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது" என்று கூறி மேற்கின் புரட்சி வரும் வரை காத்திருக்க அறை கூவியதன் மூலம், புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தை தனது புரட்சிகர வர்க்க கடமையை எதிர்த்து நின்றவர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியை தொடர்ந்து நடத்தக் கூடாது என்பதும், லெனின் "இடைவிடாத" புரட்சியை எதிர்த்து "நிரந்தரமான" இயங்கியல் மறுப்புக்காக போராடியவர். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது, வர்க்கப் போராட்டத்தில் வடிவ மாற்றமே ஒழிய, வர்க்கப் போராட்டத்தின் முடிவல்ல. இதை டிராட்ஸ்கி ஏற்றுக் கொண்டதில்லை. அதாவது பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது, வர்க்கப் போராட்டத்தின் முடிவாக கருதியவர். அப்படி இடைவிடாது தொடர்வது பற்றி 1925 இல் 14வது காங்கிரஸ்சில் டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்றதுடன், அப்படி கட்டப்படின் "தோல்வியடையும் - அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலியன் சர்வாதிகாரமாக முடியும்" என்ற கூறி எதிர்த்து நின்றார்.

ஸ்டாலின் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எப்போதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க நடத்திய வர்க்கப் போராட்ட திசையில் பகுத்தாய்வு செய்கின்றது. ஆனால் இடது சாரி பெயரிலும், புத்தக புத்திஜீவிகள பெயரிலும்;; மார்க்ஸ்சை மறுத்து, மார்க்சியமல்லாத நடைமுறையில் வாழ்ந்தபடி, மார்க்ஸ்சியத்தின் பெயரில் வெளிவரும் கருத்துகள், மார்க்சியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடைநடுவழிப் பாதை வழியாக ஸ்ராலினை கொச்சைப்படுத்த பின் நிற்கவில்லை. சர்வதேச மனிதஉரிமை அமைப்பு நிலையில் ஜனநாயகத்தையும், வன்முறையையும், சர்வாதிகாரத்தையும் கோட்பாட்டளவில் வகுத்துக் கொள்ளும் இவர்கள், ஸ்டாலின் இடத்தில் யார் இருந்தாலும் இதுதான் நடக்கும் என்கின்றனர். பின்தங்கிய நாட்டின் குறிப்பான நிலை, விவசாய குணம்சம், ஸ்ராலினின் முரட்டுக் குணம், ஜனநாயகத்தை ஏற்காதன் விளைவு, மேற்கு நாட்டு ஜனநாயகத் தன்மையை புரிந்து கொள்ளாத சமூகத்தின் குறைபாடான குணாம்சம், சோசலிசத்தை வன்முறையூடாக கட்டும் கோட்பாடு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொண்டு தனி ஒரு கட்சியாக உருவான ஜனநாயகமற்ற போக்கு, ஆரம்பம் முதலே லெனின் தலைமையில் வன்முறையை அடிப்படையாக கொண்டமையும், சோவியத்தின் புரட்சிக்கு மேற்கு நாடுகளின் புரட்சி உதவாமை என பல காரணத்தைச் சொல்லி, ஸ்ராலினை மறுப்பதில் காலத்தை ஒட்டி, அவதூறுகளை பரப்புகின்றனர்.

ஸ்டாலின் தனது பாடசாலை வாழ்க்கையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் கண்டு அதைத் துடைக்க, தனது 16 வது வயதில் அதாவது 1895 இல் கம்யூனிஸ் கட்சியுடனான உறவைத் தொடங்குகின்றார். 1890 களின் இறுதியில் பல போராட்டத்தை நடத்தியதுடன், கட்சி வாழ்வை தொடங்கிவிடுகின்றார். கட்சி வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சென்ற மென்ஷிவிக்குகள், போராட்ட நெருக்கடியில் கட்சிக் கலைப்பு வாதத்தை முன்வைத்து ஓடுகாலிகள், நடுநிலை சந்தர்ப்பவாதிகள், பலர் பலவிதத்தில் நீண்ட விடாமுயற்சியான நெருக்கடியான வர்க்க போராட்டத்தை கைவிட்டுச் சென்ற எல்லா நிலையிலும், ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை முன்நிலைப்படுத்தினார், அதற்காக போராடினார், அதைப் பாதுகாத்துநின்றார். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அவர் இரும்பு மனிதனாக இருந்ததால், அவரை லெனின் "இரும்பு" என்ற பெயரால் "ஸ்டாலின்" என்று அழைத்தார். பாட்டாளி வர்க்க, வர்க்கப் போராட்டத்தை உறுதியாக நடத்திய வரலாற்றில், அவர் ஆறு முறை தொடர்ச்சியாக சிறை செய்யப்பட்டார். சிறையில் இருந்து பலமுறை புரட்சியின் கடமையை முன்னெடுக்க தப்பியே வந்தார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரியையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளையும் இக்கட்டுரை தரைமட்டமாக்கின்றது. ஸ்டாலின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரம், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறி அனுதாபம் அல்லது வரலாற்றை விளக்கும் எல்லா அடிப்படையின் பின்பும், பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்தை கைவிட்டுச் செல்வதை கோருகின்றது. ஸ்டாலின் காலம் அதிகார வர்க்க ஆட்சி, அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் சோசலிசம் அல்ல, என்ற அனைத்து விளக்கமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றது. இவைகளை முன் வைப்போர் ஏன்?, எப்படி? இவை என்பதை முன்வைப்பதில்லை. இதை முன்வைக்க முடியாத போது அவதூற்றை விரும்பியவாறு வைப்பது நிகழ்கின்றது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அங்கு தொடரும் வர்க்கப் போராட்டம், அதில் வன்முறை, மரணதண்டனை போன்றவற்றை வர்க்க சமுதாயத்தில் மறுப்பதில் இருந்து, முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிய பிரமைகளை விதைப்பதில் இருந்தே, இடதுசாரி முகமூடிகளின் பின்பு அவதூறு கட்டமைக்கப்படுகின்றது. இதன் பின்பு தமது வர்க்க நலனை மூடிமறைப்பதில் மிகுந்த சந்தர்ப்பவாத அக்கறை எடுத்துக் கொண்டு, மார்க்சியம் மீது பொறுக்கியெடுத்த தாக்குதலை நடத்துகின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருந்து பிரச்சனைகளை பகுத்தாய்வதற்கு பதில், குறிப்பானதை முழுமையானதாக காட்டி, தமது வர்க்க நலன்களை தக்க வைப்பதில் ஏகாதிபத்தியத்தின் வளர்ப்பு நாய்களாக இருக்கின்றனர்.

ஸ்டாலின் பற்றிய இவ் இதழை கொண்டு வரவேண்டிய அளவுக்கு வரலாற்றுச் சூழல் கோருகின்றது. மக்களின் நலன்களை கைவிட்டு ஒட்டம் பிடிக்கும் அரசியல் போக்கில், தொற்றிக் கொள்வோர் ஸ்டாலின் மீதான தாக்குதலை குவிக்கின்றனர். மார்க்சியத்தை பாதுகாத்து, அதன் புரட்சிகரமான பாத்திரத்தை மீள முன்னிறுத்தும் எனது போராட்டத்தில், கோட்பாட்டு ரீதியாக முகம் கொடுக்க முடியாதவர்கள், ஸ்டாலின் ஊடாக தாக்குதலை நடத்துகின்றனர். மறு பக்கத்தில் எனக்கூடாக ஸ்டாலின் மீது அவதூறு பொழிவது அதிகாரித்துள்ளது. ஸ்டாலின் 1930 களின்; இறுதியில் இழைத்த தவறுகளை, மார்க்சியவாதிகளாகிய நாங்கள் எப்போதும் விமர்சித்து வந்துள்ளோம். அதேநேரம் ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், அதில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருந்த வராலற்று பாத்திரத்தை எப்போதும் பாதுகாப்பதில், நாம் உறுதியானவர்கள்;. அன்று குருசேவ், ஸ்ராலினை "கொலைகாரன்", "குற்றவாளி", "சூதாடி", "கொடுங்கோலன்", சர்வாதிகாரி", "மடையன்", "முட்டாள்" எனப் பலவாக இவற்றை விரிவாக்கி இழிவாக அவதூறு செய்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை குழிதோண்டி புதைத்தான்.  ஆனால் லெனின் தனது தலைமையில் உருவாக்கிய ஸ்டாலின் போன்ற தலைவர்களை பற்றி "வரலாற்றில் எந்த ஒரு வர்க்கமும் தனது அரசியல் தலைவர்களை - ஒரு இயக்கத்தைக் கட்டி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லக் கூடிய புகழ்பெற்றச் சிறந்த தனது பிரதிநிதிகளை- உருவாக்காமல் அரசியல் அதிகாரத்தை வென்றதில்லை;" என்றார் மேலும் அவர் "அனுபவமிக்க பெரும் செல்வாக்கு பெற்ற கட்சித் தலைவர்களை பயிற்றுவிப்பது என்பது நீண்ட காலம் பிடிக்கக்கூடிய கடினமான பணியாகும். ஆனால் இதில்லாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற அதன் |ஒன்றுபட்ட விருப்பம்| என்பது ஒரு வெற்றுச் சொல்லாகவே இருக்கும்" என்றார். பாட்டாளி வர்க்க தலைவரான ஸ்டாலின் மீதான அவதூறுகள் முதல் அவரின்; தவறுகளை அரசியல் ரீதியாக இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.

பிரிவினையை முன்னிறுத்தும் குறுந் தமிழ்தேசியத்தை நிராகரிக்காத, சுயநிர்ணய அடிப்படையில் ஜக்கியத்துக்கான தேசியத்தை முன்வைக்காத, அரசியல் பார்வைகள் அனைத்தும், ரகுமான் ஜானின் கூற்றுப்படி அயோக்கியத்தனமானது தான். "தம்மை முற்போக்காளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டு இதே தவறை செய்யும் போது அது அவர்களது அறியாமையைக் காட்டவில்லை. மாறாக அவர்களது அயோக்கியத்தனத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டுகிறது." இதைக் கூறிய மே18 ரகுமான் கூற்று, அவருக்கே விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. பிரிவினையை முன்னிறுத்தும் குறுந்தேசியத்தை நிராகரிக்காத, அதன் பின் நின்று செய்யும் ஆய்வுகள், விளக்கங்கள், தர்க்கங்கள்;, விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் அனைத்தும் போலியானது புரட்டுத்தனமானது. இங்கு குறுந்தேசிய "பிரிவினை" கூட இதே சமூகத்தின் பின்னணியில் வால்பிடித்து முன்வைத்தவைதான்;. ஏன் ரகுமான் ஜான் குறுக்கி முன்வைக்கும் "தன்னியல்புவாத" போக்கையும், அரசியல் விளக்கத்தையும் தாண்டியதல்ல "பிரிவினை". ஆக இங்கு அரசியல் அயோக்கியர்கள், தங்களைத் தாங்களே இங்கு அம்பலப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்களை அணிதிரட்ட முனையாத பிரமுகர்த்தன அரசியல் மற்றும் இலக்கிய முகமூடிகளின் பின்னணியிலான, புலி மீதான திடீர் விமர்சனங்கள் மோசடித்தனமானது. இது தன் இருப்பை மையப்படுத்தி மக்களை மோசடி செய்யும், அறிவு சார்ந்த குறுகிய அற்ப உணர்வாகும். அறிவு சார்ந்த தன்னை மையப்படுத்தி முதன்மைப்படுத்தும் பிரமுகர்த்தனம், கருத்துச் சுதந்திரத்தின் பின்னால் ஒன்றையொன்று சார்ந்து நின்று முதுகுசொறிவதன் மூலம் கூடிக் கும்மியடிக்கின்றது. இது மக்களை சார்ந்து நின்று, மக்களை அணிதிரட்ட முன்வருவதில்லை.

பாசிட்டுக்கள் மீண்டும் மூடிமறைத்து களமிறங்குகின்றனர். 1980 களில் வர்க்கரீதியான சமூக விடுதலையைப் பேசியபடி தான், பாசிசத்தை புலிகள் நிறுவினர். பார்க்க "சோசலிசத் தமிழீழம் - விடுதலைப்புலிகள் இயக்கமும் தேசிய விடுதலைப் போராட்டமும்" என்ற புலிகள் முன்வைத்த அரசியல் அறிக்கையை.

ஒட்டுமொத்த மக்களையும் மோசடி செய்யாமல் பாசிசம் வெற்றி பெறுவதில்லை. இன்று புலிகள் பாசிச இயக்கமல்ல என்று கூறுவதும் இந்த அரசியல் அடிப்படையில் தான். மீண்டும் புலி அரசியலை நிறுவ, அரசியல் மோசடியில் இறங்குகின்றனர்.

மனிதவுரிமையை நிலைநாட்டவா? தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு தீர்வு காணவா? தமிழ் மக்களின் மீதான குற்றங்களுக்கு நீதி வழங்கவா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவா? தேசத்தின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்கவா? சொல்லுங்கள்? இதனால் எதற்காவது நியாயம் கிடைக்குமா? இல்லை நியாயம் கிடைக்கும் என்று கூறுகின்ற, காட்டுகின்ற அனைத்தும், ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்தாத அனைத்தும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதை ஒட்டுமொத்தமாக முன்வைத்துக் கோராத, போராடாத அனைத்தும் மோசடியானது.

குறிப்பு : ஐந்தாம் படை பற்றி கேள்வி கேட்டு, அதைப் பற்றி விளக்கமும் தந்தார்.

விளக்கம் : நீங்கள் எல்லாம் ஐந்தாம் படை என்று மிரட்டியதுடன், கைக்கூலிகள் என்றார். யாருடைய கைக்கூலிகள் என்றதை மட்டும் அவர்கள் சொல்லவில்லை. அதாவது நாங்கள் மக்களின் கைக்கூலிகள் என்பதால், அதை மட்டும் அவர் சொல்லவில்லை. மக்களின் விடுதலையை நேசிப்பது கைக்கூலித்தனம் என, புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. மக்கள் நிலவும் சமுதாயத்தில் எதிர்கொள்வது, வெறும் இனவாத ஒடுக்குமுறையை மட்டுமல்ல. சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல், பிரதேசவாதம் என்று பரந்த தளத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இதற்கு எதிராக போராடுவது, கைக்கூலித்தனம் என்று தான் வலதுசாரிய புலிகளின் பாசிச அகராதி கூறுகின்றது. தாம் மட்டும் அரசுக்கு எதிராக போராடுவதையே, விடுதலைப் போராட்டம் என்கின்றனர். சாதியத்தை, ஆணாதிக்கத்தை, வர்க்க ஒடுக்கமுறையை எதிர்த்து போராடுவது, ஐந்தாம் படைக்குரிய செயல் என்றான். மக்களின் அடிப்படையான விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகள் சுரண்டி வாழும் பாசிச சொகுசு வாழ்க்கையை அழித்தொழிக்கும். அதனால் இதை ஐந்தாம் படைக்குரிய செயலாக வருணித்து, மக்களை நேசித்த தேசப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE