Language Selection

பி.இரயாகரன் - சமர்

இக் கட்டுரை சக்தி இதழ்க்கு பிரசுரிக்க என எழுதப்பட்ட போதும் அவர்கள் கருத்து உடன்பாடு இன்மை கருதி பல பகுதிகளை நீக்கி விட்டனர். அவைகளை உள்ளடக்கி இக் கட்டுரை மீள பிரசுரிக்கின்றோம். உடன்பாடின்மை எது என  தெரிவிக்காத நிலையில், அதை பிரசுரிக்காத நிலையில் என் அனுமதியின்றியும் வெட்டியிருந்தனர். அனேகமாக வெட்டிய பகுதிகள் அஞ்சலியின் பின்னால் ஆணாதிக்கம் மீள அரங்கேற்றிய ஆணாதிக்க ஓழுக்கத்தை அம்பலப்படுத்திய நிலையில் நட்புக்காக அரசியல் சமரசம் காண்பது ஆணாதிக்கத்தை ஓழிக்காது என்பதை சுட்டிக் காட்டவேண்டியுள்ளது.

தமிழீழ மக்கள் கட்சி சார்பான மூன்று "தமிழீழம்­­" இதழ்கள் அண்மையில் வெளியாகியுள்ளது. இக் கட்சியின் பிரகடனம் தமிழ்ப் போராட்ட வராலாற்றில் புலிகளின் மாற்று அமைப்பு மீதான ஜனநாயக மறுப்புக்குப் பின்னலான அழித்தொழிப்பின் பின் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுத்தப்பட்ட ஒர் அமைப்பாகும். மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தக்காகவும், அந்த மக்களின் விடுதலைக்காக  போராடும் உரிமைக்காக போராட உள்ள உரிமையை வென்று எடுக்க, அனைத்து ஜனநாயக விரோத பாதைக்கும் எதிராக போராடும் செயல், கருத்து தளத்தை பாதுகாக்க வேண்டிய கால கட்டத்தில் ஊண்றி நின்றபடி, தமிழீழ மக்கள் கட்சியின் பிரகடனத்தை அவர்களின் கட்சி திட்டமின்றியே அரசியல் ரீதியாக ஆராயவேண்டியுள்ளது.

ஓடுக்கப்பட்ட மக்களின் விடுதலை பற்றி, அவர்களின் போராட்டம் பற்றி சேறு வீசுவதில் இன்று பலர் பல தளத்தில் களம் கண்டுள்ளனர். இந்த வகையில் சரிநிகர் 150, 152 இல் மீளவும் சங்கமன் ஏகாதிபத்தியத்துக்காக விசுவாசமாக வரலாற்றைத் திரித்து தனது சந்தர்ப்பவாத  வரலாற்றுப் பொய்களில் முகிழ்ந்து எழுந்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை மறுத்து, சிங்கள இனவெறிப் பாசிஸ்ட்டுக்கள் நடத்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராட, போராட்டத்தை தமிழ் மக்களிடம் இருந்து பலாத்காரமாக ஜனநாய விரோதமாக பறித்துப் பெற்ற புலிகள் இராணுவ ரீதியில், அரசியல் ரீதியில் தொடர்ச்சியாக தவறு இழைக்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கை மீது தவறான இராணுவ அரசியல் மூல உபாயங்கள் தமிழ் மக்களின் இருப்பையே தகர்த்து விடும் அளவிற்கு நிலமை மாறிவிடுகிறது.

தனிமனித தேவைகளில் இருந்து புலம் பெயர், மற்றும் நாட்டில் சிறுசஞ்சைகள், பத்திரிகைகள் உருவான போது (இதற்க்குள் சில விதிவிலக்குகள் இருந்த போதும் பெரும்பாலானவைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதியாக வரவில்லை) சமர் மக்களின்  பிரச்சனை, அதற்க்கான தீர்வு, அதற்கான கோட்பாடுகளை விஞ்ஞான பூர்வமாக நிறுவுவது, போராடுவது என 25 இதழ்களை வெளியிட்டுள்ளோம்.

நீண்ட இடைவெளிக்கு பின் சமர் உங்கள் கைக்கு கிடைக்கின்றது. |ஆணாதிக்கமும் பெண்ணியமும்| என்ற தலைப்பிலான நூல் ஒன்றை எழுதி முடிக்கும் பணி காரணமாகவே சமர் காலதாமதமாகியது. இக்கால இடைவெளியில் பலவிடயங்கள் உலகளவில் நடைபெற்றன.  அவைகள் சிலவற்றை துண்டுப்பிரசுர வடிவில் கொண்டு வந்திருந்தோம். அதில் முக்கியமானவை இதில்  பிரசுரமாகியுள்ளது.

மக்களின் விடுதலைக்கு போராடும் மார்க்சியத்துக்கு எதிராக ஏகாதிபத்திய கோட்பாடளர்கள் பின்நவீனத்துவத்தை முன்வைக்கின்றனர். ஏகாதிபத்திய விரிவாக்கத்தை இலகுபடுத்த அதன் எதிரான மார்க்சியத்தை செயலற்றதாக்க, முன்வைக்கப்படுவதே பின்நவீனத்துவம். அதன் தாத்துவார்த்த உள்ளடகத்தை பின்நவீனத்துவ கோட்பாடுகள் மீதான எனது தனியான நூல் ஒன்றின் மூலம், மிக விரைவில் அதை கழுவேற்றுவது அரங்கேறும். அதற்கு முன்பு பின்நவீனத்துவ கோட்பாட்டளார்கள் எப்படி கடந்த கால பாசித்தின் தூண்களாக இருந்தனர் என்பதை இக் கட்டுரை அம்பலம் செய்கின்றது. யூத எதிர்ப்புடன் கம்யூனிச எதிர்ப்பை ஒருங்கிணைந்த வகையில், பாசிசத்தை கட்டமைத்த பின்நவீனத்துவ தத்துவவியலார்களின் ஜனநாயக முகமூடியை இக் கட்டுரை நிர்வணப்படுத்துகின்றது. இன்று மீண்டும் ஜனநாயக அரசின் மறைமுகமான ஆதாரவுடன் செழிப்புற்று வளர்ச்சி பெற்று வரும் பாசிசம், தனது தத்தவத்தை பின்நவீனத்துவ தத்துவ வழிகாட்டலில் இருந்து பெறுவதை, இக்கட்டுரை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றது. அந்தவகையில் பாசிசத்தையும், பின்நவீனத்துவத்தையும் ஒருசேர புரிந்து கொள்ள இக்கட்டுரை உங்களுக்கு உதவிசெய்கின்றது. மனுவிடம் இருந்து நீட்சே ஆரிய மேன்மையை பெற்றது போன்ற தரவுகளை ஒப்பிட்டு தன்மையிலும், நீட்சேயின் தத்துவார்த்த கோட்பாட்டு அடிப்படைகள் மீது, இக் கட்டுரை முழுமையான  விமர்சனத் தரவுகளை தரத்தவறிவிட்டது. டார்வின் விளக்கிய, வலிமை உள்ளவை உயிர் வாழும் உலகில் நீடிக்கும் என்பதை, நீட்சே பயன்படுத்தினர் என்பதன் ஊடாக, அக் கோட்பாட்டின் சரியான விளக்கம் நிராகரிக்கப்படுகின்றது. டார்வின் கோட்பாட்டை ஒரு உயிரிணத்துக்குள் திரித்து புகுத்தியதையே நீட்சே போன்ற நாசிகள் செய்தனர். அத்தடன் வலிமை என்பதை சுரண்டி வாழும் பொருளாதார ஆதிக்க இழி தன்மைக்குள் விரிவாக்கியே இது திரிக்கப்படுகின்றது. இது போன்றவற்றை பொதுமைப் படுத்துவதில் கட்டுரை தவறு இழைத்த போதும், பின்நவீனத்துவ நாசிசத்தை இது அம்பலம் செய்கின்றது.

சமர்

புலம் பெயர்ந்த முற்போக்கு அரசியலற்ற வக்கிரத்தில் புரண்டு எழுகின்ற போது துரோகத்தனமும் அதனுடன் கூடிக் கூலாவுவது வரலாறு ஆகின்றது. இதன் விளைவால் 24.9.1999 அன்று பிரஞ்சு வெளிநாட்டுப் பிரிவு உயர்  அரசியல் பொலிஸ் அதிகாரியால் உத்தியோகபூர்வ விசாரணைக்காக அழைக்கப்பட்டு, உத்தியோகபூர்வமற்ற இரண்டு மணிநேர விசாரணையை என் மீது நடத்தினர்.

சென்ற இதழில் தமிழீழ மக்கள் கட்சியின் பத்திரிகை மூன்றையும் ஆதாரமாக கொண்ட ஒரு விமர்சனத்தை பார்த்தோம். தமிழீழம் நாலாவது இதழ் தற்போது கிடைத்துள்ளதுடன், அவர்களின் கட்சித் திட்டமும் அதில் வெளியாகியுள்ளது.

சிங்கள இனவாத அரசு கட்டவித்துவிட்ட இனவாத யுத்தம் என்றுமில்லாத வகையில் புதிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. நிலமை நிமிடத்துக்கு நிமிடம் தீவிரமான மாற்றத்தை கோரிநிற்கின்றது. தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையும், புலிகளின் தமிழீழ தாயகமும் ஒரு தீர்க்கமான நெருக்கடிக்குள் நகர்ந்துள்ளது. இக்கட்டுரை எழுதிக் கொண்டிருந்த அந்த நிமிடத்துக்கும், அடுத்த நிமிடத்துக்கும், இது வெளிவரும் போது நிலைமை மேலும் மாற்றத்தை சந்தித்துவிடும் என்ற நிலையிலும், யுத்தத்தின் தீவிரத்தையும் இலங்கை நிலமையையும் ஆராய்வது அரசியல் தீதியாக தீர்க்கமானதாக உள்ளது.

மிக அண்மையில் "தமிழீழ புதிய சனநாயக கட்சி" ஒன்றை "தேச பக்தன்" இதழ் பிரகடனம் செய்திருந்தது. 1983 இல் எப்படி பல்வேறு இயக்கங்கள் உருவானதோ, அதற்கு எப்படியான ஏற்ற சூழல் இருந்ததோ, அதையொத்த "கட்சி"ப் பிரகடனங்கள் புதிய போக்காகியுள்ளது. "கட்சி"ப் பெயரிலான பிரகடனங்கள் புரட்சியை ஏற்படுத்திவிடுவதில்லை. இலங்கையில் சிங்கள இனவாத இன அழித்தொழிப்பிற்கு எதிரான போராட்டத்தில், புலிகள் வலது பிற்போக்கு இனத் தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் நிலையில், மாற்றான கட்சிப் பிரகடனங்கள் விசனிக்கத் தக்கவகையில், அதன் அரசியல் வெளிப்பாடுகள் காணப்படுகின்றது. விமர்சன ரீதியாக பலவற்றை தேசபக்தன் கொண்டிருந்த போதும், முக்கியமான கோட்பாட்டு விடயங்கள் மீது மட்டும் விமர்சிக்க முனைகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE