Language Selection

பி.இரயாகரன் - சமர்

அண்மையில் பாரிஸ் வந்திருந்த சரிநிகர், மற்றும் மேர்ஐ நிறுவனத்தின் முக்கிய நிர்வாக உறுப்பினர் வெளிப்படுத்திய சில கருத்துக்களை அறியக் கூடியதாக இருந்தது.

இந்தியாவின் பாரதயிஐனதா என்ற இராமனின் வானரங்கள் ஆட்சியேறி உள்ள நிலையில். தமிழ் ஈழதேசிய வடுதலைபோராட்ட அணிகளின் குழப்பத்துடன் கூடிய அரசியல் எதிர்பார்ப்பு, மேலும் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனைகின்றது.

சக்தி 4.3 இதழில் வெளியாகியிருந்த சில கருத்துகளை விமர்சனம் செய்ய வேண்டிய அளவிற்கு எதிர்புரட்சியை கோருவதாகும. இதை ஒத்த ஒரு விமர்சனம் சக்திக்கும் எழுதியிருந்தேன்.

சிங்கள பேரினவாத பாசிச ஆட்சியாளர்களின் பாத தூசு தட்டி மீளவும் ஒரு வரலாற்று துரோகத்தை முன்னைநாள் போராளி இயக்கங்களும் இன்றைய துரோகிகளும் அரங்கேற்றினர். 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்து போன இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் எந்த விதமான நியாயத்தையும் கூட வெற்றி பெறமுடியாத நிலையில் காலம் காலமாக இருந்து வரும் எந்த வித அதிகாரமும் அற்ற நிருவாக பிரிவுகளுக்காக ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் போட்டியிட்டு எலும்பு துண்டுக்காக நாய் சண்டையில் ஈடுபட்டனா.

இலண்டனில் இருந்து புலம் என்ற சஞ்சிகை ஒன்று வெளிவந்துள்ளது. இலணடன் ஐ.பி.சி தமிழ் வானொலிப் பிரிவால் நடத்தப்படும் இச்சஞ்சிகை தனது முதலாவது இதழிலேயே தன்னைத்தான் நிர்வாணமாக்கியுள்ளது.

1-07 ஐனவரி 1998 ஈழமுரசு இதழில் ' சின்ன விளக்கம் ஆனால்---நீண்டு போயிட்டுது " என தலைப்பிட்ட அலசல் ஒன்றை சடையர் செய்து இருந்தார். nஐர்மனியில் இருந்து ஈழமுரசுக்கு எழுதும் கருணாமூர்த்தி இனவாதத்தில் நின்று எழுதவேண்டாம் என கேட்;கப் போக புலிகளின் பினாமி பத்திரிகையான ஈழமுரசு முதல் முதலில் புலிகளின் வரலாற்றில் இனவாதத்தின் ஒட்டுமொத்த வடிவை வெளிகாட்டி இருந்தனர்.  அதை கொஞ்சம் பார்ப்போம்.

1988ம் ஆண்டு இலங்கைப் புரட்சிகர போராட்ட பாதையில் விமேலேஸ்வரன் என்ற மனிதனை இழந்த நிகழ்வு, வரலாற்றுப் பாதையில் மறக்க முடியாதவையாக நீடிக்கும். ஆம் மக்களுக்காக இறுதிவரை சமரசமின்றி போரடிய மாமனிதனை புலிகள் நடுவீதியில் வைத்து படுகொலை செய்தனர். அவன் கோரியது எல்லாம் மக்கள் எழுத, பேச, கூட்டம் கூடும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்குகள் என்பதுதான். தன் மாரணத்தை முன் கூட்டியே போராட்டப் பாதையில் தெளிவாக உணர்ந்து கொண்டதுடன், மாரணத்தைக் கண்டு அஞ்சாது தலைமறைவாக இருந்தபடி மக்களுக்காக போராடுவதில் தலைமை தாங்க என்றுமே பின் நிற்கவில்லை. அவன் மிகவும் பின்தங்கிய தாழ்தப்பட்ட கிராமங்களில் நீண்டநாள் தங்கி நின்று, அவர்களின் உடல் உழைப்பான விவசாயக் கூலிக்கு அவர்கள் உடன் சென்று, நடைமுறைப் புரட்சிக்காரனாக எந்தவிதமான பகட்டுமின்றி புகழுக்கும் ஆசைப்படாத போராட்ட மனிதனாக இருந்தான். இன்று புரட்சி சாவாடல் அடிப்பதும், தம்மைத் தாம் புகழ்ந்து கொள்ளும் இன்றைய சகதிகளில் இருந்து வேறுபட்ட இவனின் வரலாறு மக்களுக்காக எப்படி போராடவேண்டும் என்பதை நடைமுறையில் விட்டுச்சென்றுள்ளது.  இவன் ஒரு நாடகம் மற்றும்    பல்துறை எழுத்தாளனாக பலதுறைகளில் வளர்ந்த கலையனாக  மக்களின் தலைவனாக வளரும் வழியில் வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டான். இலங்கைப் புரட்சிகர போராட்டப் பாதையில் நினைவுக்கு உள்ளாக்க கூடிய புரட்சிகரப்போராட்ட பாரம்பரியங்களை மரணத்தினூடே  எமக்கு தந்து விட்டுச் சென்றுயுள்ளன்.

சரிநிகர் 126 இல் தங்கத்துரை கொலை தொடர்பாக நாசமறுப்பான் எழுதிய தொடர்ச்சியின் இறுதியில் 'தங்கத்தரை அவர்களது மரணம் துயர் தருவது. யார் செய்திருந்தாலும் அது கண்டனத்தக்குரியதே. அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் மக்களுக்கும் எமது அநுதாபங்கள்' எனக் குறிப்பிட்டு, கூட்டணி என்ற தரகு முதலாளித்துவ கட்சிக்கு அநுதாபம் தெரிவித்ததன் மூலம், தமது அரசியல் குத்துக்கரணங்களை இனம் காட்டியுள்ளனர்.

சரிநிகர் 139 இல் (ஐன 29-பெப் 11) "பெண்ணியத்தின் ஒழுக்கம் என்ன?" என கேள்வி எழுபிய சங்கமனின் ஒரு அலசல் வெளியாகியிருந்தது. பெண் விடுதலை தொடர்பாக டிஷ்கோவின் |கட்டற்ற சுதந்தரம்| எதுவோ அதை முன்வைத்து அதை நிறுவ தனது வச்சிரமான மார்க்சிய எதிர்ப்புடன் கூடிய கட்டுகதைகளையும் அவதூறுகளையும் பொழிந்து தன்னியுள்ள சங்கமன் இதை ஒரு அலசல் என போட்ட தன் மூலம் ஊரில் திண்ணையில் கூடி மற்றவர்கள் பற்றி இல்லாத பொல்லாததை இட்டுக் கட்டி அலசும் வம்பைத்தான் மீள ஒரு முறை செய்துள்ளார். இந்த அரசியல் வம்பளப்பு அலசல்களை பார்ப்போம்.

சரிநகர் 131 இல் காலம் பத்திரிகையில் இருந்து மறுபிரசுரம் செய்யப்பட்ட பேராசிரியர் சிவத்தம்பியின் 'மேலிருந்து திணிக்கப்படுகின்ற அரசு அதிகாரமே தமிழ் பிரக்ஞைக்கு ஓர் அரசியல் வடிவத்தைக் கொடுக்கின்றது ' என்று தலைப்பிட்டு வழங்கிய பேட்டியில் -

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE